1983

1983 - திருவல்லிக்கேணி விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா

தெய்வீக தமிழகத்தை நாத்தீகத்தால் நாசமாக்கியவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க தமிழகத்தில் எவரும் இல்லாத காலத்தில்தான் நமது இந்து முன்னணி பேரியக்கம் துவங்கப்பட்டது.

1953 - ல் முதன் முதலாக ஈ.வெ.ரா. பிள்ளையார் சிலையை உடைக்கும் அந்த மாபாதக செயலை துவக்கி வைத்தார் . 1972 - ல் அதன் உச்சகட்டமாக சேலத்தில் நடந்த தி.க. மாநாடு மற்றும் ஊர்வலத்தில் நடந்த அசிங்கங்களை எழுதுவதற்கும் , பேசுவதற்கும் இயலாத காரியம் அந்தளவுக்கு நமது கடவுளைப் பற்றி கொச்சைப் படுத்தி பேசினார்கள் .

இந்த நிலையில் தான் தமிழகத்தில் மீண்டும் தேசிய , தெய்வீக பக்தியை வெளிக்கொணர்வது எப்படியென ஸ்ரீ இராம . கோபாலன் சிந்தித்தார் . திலகர் , விநாயகரை வைத்து சுதந்திர போராட்டத்தைப் பெரிதாக்கினார் . ஈ.வெ.ரா.- வோ விநாயகரை உடைத்து நாட்டை நாசமாக்கினார் . இராம . கோபாலன் அதே விநாயகரை வைத்து தமிழகத்தில் தேசிய தெய்வீகத்தை ஏன் ஏன் தட்டி எழுப்ப முடியாது என சிந்தித்தவருக்கு விநாயகரே விரைந்து அருள் கொடுத்தார் .

1983 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தானப்ப தெருவில் முதன்முதலாக வீதியில் விநாயக சதுர்த்தி வழிபாடு ஊர்வலம் நடந்தது . அதன் மூலம் அந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்தனர் . அடுத்த ஆண்டே சென்னையின் பிற பகுதியிலும் மதுரையிலும் விநாயகரை வீதியில் வைத்து வழிபடும் வழிபாடு துவங்கியது .

 

குறிப்பாக சென்னை நங்கநல்லூரிலும் தாம்பரத்திலும் மூங்கிலால் செய்யப்பட்ட விநாயகரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை ஒன்றிணைத்தனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விட்டார் விநாயகர். விநாயகரின் விஸ்வரூபம் சென்னையில் மூன்றடி விநாயகராக துவங்கியவர் சில ஆண்டுகளில் 32 அடியாக உயர்ந்தார் . அதோடு சென்னையில் உள்ள ஒவ்வொரு குடிசைப் பகுதியிலும் விநாயகர் வைக்க விருப்பம் தெரிவித்தனர் அதற்காக 3 அடி உளள எழுச்சி விநாயகர் குறைந்த விலையில் வழங்கப்பட்டது . சென்னையில் மட்டுமே விநாயகர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொட்டது .

அனைத்து மாவட்டங்களையும் தாண்டி பல ஒன்றியங்களில் சதுர்த்தி நடத்த விநாயகர் விநாயகர் துவங்கினர் ஊர்வலமானது நகர ஒன்றிய வாரியாக துவங்கியது .ஊர்வலத்தின் துவக்கத்திலோ முடியும் இடத்திலோ சொற்பொழிவுகள் துவங்கின .

சென்னை விசர்ஜனம் மெரினா கடற்கரையில் நடந்தது . அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் பங்கு கொண்டன . இத்தகைய காட்சியை பொறுக்க முடியாத திருவல்லிக்கேணி முஸ்லிம்கள் விநாயகர் மீது செருப்பு மற்றும் கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டனர் . ஆனாலும் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழா வெற்றிகரமாக நடந்து வருகிறது

1983 திண்ணைக் கூட்டங்கள்

இந்து முன்னணி துவக்கப்பட்ட காலகட்டங்களில் பல இடங்களில் காவல்துறையும் அரசும் இந்து முன்னணி நிகழ்ச்சிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுத்தனர் . குறிப்பாக மக்களிடையே இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வில்லை. பல இடங்களில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிந்தனர்.

இத்தகைய ஒரு கடுமையான சூழலில், இந்த நிலையை எதிர்கொண்டு சவாலுடன் சமாளித்தது இந்து முன்னணி.

பெரும் கூட்டங்களை அனுமதிக்க மறுத்தால், மக்களை ஒன்று சேர அனுமதிக்கவில்லை எனில் மக்களை நோக்கி இந்து முன்னணி செல்லும் என்ற அடிப்படையில் திண்ணை கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

கிராமங்களில் உள்ள மக்களை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நமது கருத்துகளை எடுத்து சகஜமாக பேசுவது திண்ணை கூட்டம் . இதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் கிடைக்கும் சில சமயங்களில் அரட்டை அரங்கமாக அது மக்களை கவர்ந்தது.

இதன் மூலம் தொடர்புக்கு வந்து இந்து முன்னணி பொறுப்பாளர்களாக ஆகி நம்பிக்கையோடு வேலை செய்ய முன் வந்தார்கள்

இந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் இந்த செலவில்லாத திண்ணை கூட்டங்கள் நடைபெற்றது . இயக்கம் பட்டி தொட்டி எங்கும் சென்றது.

மேலும் படிக்க
-->