1991 - 2000

1991 - 2000

1991 பயிற்சி முகாம்

இந்து முன்னணியின் கருத்துகளையும், பணிகளையும் கவனிக்க, வெற்றிகரமாக போராட்டங்களை நடத்த, மேடைகளில் தெளிவாக பேச, செயல் வீரர்களை உருவாக்க பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும் என்று 1991 இல் முடிவெடுக்கப்பட்டது. முதல் பயிற்சி முகாம் 1992 கரூர் தான்தோன்றி மலையில் மூன்று நாட்கள் நடந்தது.

மேலும் படிக்க

1992 – புதுவை வேதபுரீஸ்வரர்

புதுச்சேரிக்கு பிரெஞ்சுக்காரர்கள் செய்த கொடுமை சொல்லி மாளாது. ஆனாலும் இது சித்தர்கள் பூமி, அமைதிப் பூங்கா என்று புகழப்படுகிறது. மகான் ஸ்ரீ அரவிந்தர், மகாகவி சுப்பிரமணிய பாரதி போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த பூமி. இந்து முன்னணி இயக்கம் தமிழ்நாட்டில் துவங்கப்பட்டு அதற்கடுத்ததாக துவங்கப்பட்ட மாநிலம் புதுச்சேரி என்பது பலருக்கும் நினைவில் இருக்காது. புதுச்சேரி மாநிலத்திலும் இந்து முன்னணி பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளது.

மேலும் படிக்க

1993 - ஸ்ரீவைகுண்டம் தேர்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் பொம்மைகளை உடைத்து எடுத்து வெளி மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதை அறிந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறை வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டது. இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி.

இராமகோபாலன் அவர்கள் தலைமையில் போராட்டம் அறிவித்து, கண்டன பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடத்தப்பட்டது. அதன்பின் காவல்துறை வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகளை கைது செய்தது. இது இந்து முன்னணிக்கு கிடைத்த வெற்றி.

மேலும் படிக்க

1994 தி.க.காவிக் கொடி எரிப்பு

தி.க. சார்பில் காவிக் கொடி எரிப்புப் போராட்டம் அறிவிப்பு தடை செய்ய காவல் துறையினரிடம் புகார் நடவடிக்கை எடுக்க இயலாது என காவல்துறையினர் கைவிரிப்பு. இந்து முன்னணி சார்பில் திராவிடர் கழகக் கொடி, ஈ.வே.ரா. மணியம்மை ஆகியோர் உருவப்பட எரிப்பு போராட்டம் என இந்து முன்னணி அறிவிப்பு. தடையை மீறி நடந்த இந்த போராட்டத்தில் இந்து முன்னணிக்கு வெற்றி கிடைத்தது.

மேலும் படிக்க

1995 - தனுஷ்கோடி

தமிழகத்தில் ஆன்மீகம் மேலோங்க வேண்டும். தமிழகம் செழிப்புற வேண்டும் என்ற நோக்கோடு 1995-ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் ஒரு கோடி ராமநாம ஜப வேள்வியும், அதையொட்டி மாநாடும் நடைபெற்றது. அத்த மரத்தாலான ஆஞ்சநேயர் சிலை தனுஷ்கோடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. தனுஷ்கோடி செல்லும் சாலைகள் அனைத்தும் மண் மூடி, பயணிக்க உகந்ததாக இல்லை. அன்றைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றது இயக்கம். அதிகாரிகள் மணலை அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை என்று கூற முதலமைச்சர் ஜெயலலிதா இல்லை எப்படியாவது அகற்றுங்கள் என்று உத்தரவிட வேறு வழியின்றி அதிகாரிகள் அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்து கொடுக்க இனிதே நடைபெற்றது மாநாடு.

மேலும் படிக்க

1996 டிசம்பர் 6 – காவிக் கொடி ஆர்பாட்டம்

டிசம்பர் 6ம் தேதியை கருப்பு நாள் என்று சொல்லி பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.க.வினரைக் கண்டித்து டிசம்பர்-6 வெற்றித் திருநாள் என்று அறிவித்து நடத்தியது இந்து முன்னணி.

தமிழகம் முழுவதும் தி.க.வின் மோசடித் தனத்தை தோலுரித்துக் காட்டியது இந்து முன்னணி தான். நமது தெய்வங்களை கொச்சைப்படித்தி எழுதிய வாசகங்களுக்கு தக்க வகையில் நாம் பதிலடி கொடுத்தோம்.

தமிழகம் முழுவதும் அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க கோரி காவிக் கொடி ஆர்பாட்டம் நடக்கத் துவங்கியது

மேலும் படிக்க

1997 – கோவை செல்வராஜ்

29.11.97 -போக்குவரத்து காவலர் செல்வராஜ் படுகொலை, கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்ட உடன் 30.11.97 காலை முதல் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.

இதைக்கண்ட காவல்துறையினரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெண்கள்,குழந்தைகள்,காவலர்கள் என அனைவரும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டு சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து வெகுண்டு எழுந்த மக்கள் தேச விரோத சமூக விரோதிகளுக்கு நேரடி நடவடிக்கைகளின் மூலம் தாக்குதல்களை தொடர்ந்தனர்.

மேலும் படிக்க

1998 - தமிழில் அர்ச்சனை

தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது இந்து ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை போட்டார். கோயில் சுவர்களில் எல்லாம் போர்டு வைக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் படிக்க

1999
தீண்டாமை ஜாதி மோதல் எதிர்ப்பு மாநாடு

திட்டமிட்ட ரீதியில் தமிழகத்தில் திராவிட கட்சிகள், மற்றும் கம்யூனிஸ்ட் சித்தாந்த நக்சல்பாரிகள் மிகப்பெரிய பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துமதத்தில் ஜாதிகள் ஜாதி மோதல்கள் நடக்கின்றன , தீண்டாமைக் கொடுமைகள் நடக்கின்றன, இந்து மதம் பார்ப்பனிய மதம், மனுசாஸ்திரம் என்றெல்லாம் கூறி மக்களை மூளைச்சலவை செய்து அவர்கள் அரசியல் லாபம் அடைந்தனர்

மேலும் படிக்க

2000
மீட்கப்பட்ட எருமாடு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகாமையில் உள்ளது எருமாடு. இங்கு பிரசித்தி பெற்ற சிவ ஆலயம் இருக்கிறது . முஸ்லீம்களுக்கென தனி சுடுகாடு இருந்தபோதிலும் .1982 ஆம் ஆண்டில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திட்டமிட்ட ரீதியில் சில முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து அகமது குட்டி என்கிற முஸ்லிமின் பிணத்தை கோவில் இடத்தில் புதைக்கின்றனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது .கோவில் கமிட்டியினர் அரசியல் கட்சிகளுக்கு கோவில் பிரச்சினையை தீர்க்க அழைப்பு விடுத்தனர். எந்த கட்சிகளும் முன்வராத நிலையில் இந்து முன்னணி களமிறங்கியது .

மேலும் படிக்க