திரு. சி.பரமேஸ்வரன்

திரு. சி.பரமேஸ்வரன் - மாநில பொதுச்செயலாளர்

குமரி மாவட்டத்தில் குளச்சல் அருகேபணவிளை கிராமத்தில் திரு.சின்னக்கண்ணு, திருமதி. முத்துலட்சுமி அம்மையாருக்கு மகனாக 1.4.1960 இல் பிறந்தார். 1977 இல் பள்ளிப்படிப்பை முடித்து 1979 - சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி செய்தார். அப்போது நங்கநல்லூரில் திரு.சீதா ராமராவ் என்பவர் மூலமாக ஆர்.எஸ்.எஸ் இன் ஷாகாவில் இணைந்தார். 1981 விஜயபாரதம் புத்தகத்தில் கார்ட்டூன் பார்த்து பெரம்பூரில் இயங்கி வந்த அப்போதைய ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்று ஆழமான தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தீவிரமாகப் பங்கு கொள்ள ஆரம்பித்தார் . அலுவலகத்திற்கு செல்வது போக மற்ற எல்லா நேரத்திலும் சமுதாயப் பணிக்கு நேரம் கொடுக்க ஆரம்பித்தார்.

1982 ல் இந்துமுன்னணி ஆலந்தூர் தொகுதி பொறுப்பாளராக ஆனார். அலுவலகத்தில் கிடைக்கின்ற எழுது பொருட்களை கொண்டு இந்து முன்னணி கோரிக்கைகளை கையால் எழுதி ரயில் பெட்டிகளிலும், மின்கம்பங்களில் ஓட்டி இந்துமுன்னணி கருத்துக்களை பிரச்சாரம் செய்வது அவர் வழக்கம். 1984-ல் மாவட்ட செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் அமைந்தகரையில் இருக்கின்ற மசூதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பல கிராமங்களில் போதிய மின்வசதி இல்லாத காலகட்டத்தில் பெட்ரமாக்ஸ் விளக்கும் கொண்டு சிறிய சிறிய கூட்டங்களை நடத்துவதில் மிகச்சிறந்த வல்லுநர்.

உழவாரப் பணிகள், விளக்கு பூஜை, சுமங்கலி பூஜை போன்ற பல ஆன்மீக காரியங்களை முன்னெடுத்து அதன் மூலமாக மக்களை ஒருங்கிணைத்து இந்து முன்னணி இயக்கத்தின் வளர்ச்சிக்கு நுணுக்கமான பங்களிப்பை வழங்கியவர். 1987இல் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆனார். 1988 காலகட்டத்தில் இந்து முன்னணி முதல் மாநிலத் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களை நங்கநல்லூர் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் சைக்கிள் ரிக்ஷா மூலமாக அழைத்துச் சென்று பல்வேறு இடங்களில் பயணம் செய்து இயக்கத்தை வளர்க்க காரணமானவர். 1990ல் மாநில செயலாளராக பொறுப்பேற்றார். காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கோவில் நிலங்களை மீட்பது உட்பட இயக்கப் பணிகளில் தொடர்ந்து செய்து வந்தார்.

2010 முதல் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். எண்ணிலடங்கா போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து பல முறை சிறை சென்றவர். களப்பணி ஆற்றுவதில் சிறந்த முன்னோடி. எளிமை, பொறுமை ஆகியவை இவரின் சொத்து. இந்துமுன்னணி ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து அயராது உழைப்பவர். குடும்பத்தில் வசதி வாய்ப்பற்ற நிலையிலும் முழுநேர ஊழியராக பணியாற்றி முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இந்துமுன்னணி பேரியக்கத்தின் விழுதுகளில் முக்கியமானவர்.