பண்பாட்டு
வகுப்புகள்

பண்பு காக்க கிராமம் தோறும் பண்பாட்டு வகுப்புகள்

பண்பாட்டு வகுப்பு என்பது நம்முடைய பாரத கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சிறு குழந்தைகளின் மனதில் மிக ஆழமாக பதிவு செய்யும் வகுப்பாகும். பாரத நாடும் நமது தர்மமும் மிக மிக தொன்மையானது. வளர்ந்து வரும் இந்த இயந்திர,தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை தேசபக்தியும், தெய்வபக்தியும் இல்லாத ஒரு சூழ்நிலையிலே இருக்கின்றனர். இதனை மாற்ற வேண்டும் என்பதே இவ்வகுப்பின் அடிப்படை நோக்கம். பாரத தேசத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேலைநாட்டு கலாச்சாரங்கள் உட்புக தொடங்கிய காரணத்தினால் நம்முடைய பண்பாடும் கலாச்சாரமும் அழிய தொடங்கியுள்ளது இத்தகைய கலாச்சார சீரழிவினை தடுக்க பண்பாட்டு வகுப்பு அவசியமாகிறது

கலாச்சார சீரழிவினால் கூட்டுக்குடும்பம் அழிந்து குடும்பத்தினரிடையே சண்டைகள் அதிகரித்துள்ளன. பொது நலம் குறைந்து சுயநலம் பெருத்து காணப்படுகிறது. மனிதநேயம் மண்ணோடு போய் விட்டது. பிறரின் துன்பங்களை கண்டு இரங்கும் மனம் இங்கில்லை. கிராம வாழ்க்கை அழிந்து மேலைநாட்டு நாகரீகமற்ற வாழ்க்கையை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். நேர்மையும், உண்மையும் மறைந்து வஞ்சமும் களவும் பொய்யும் அதிகரித்துவிட்டன. பெண்களை தாயாய் மதித்த காலம் மாறி இன்று பாலியல் பலாத்காரங்களும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகரித்துவிட்டன. நம்பிக்கை காணாமல் போய் திருட்டு அதிகரித்துவிட்டது. இது போன்ற கேவலங்களை சமூகத்தில் இருந்து அகற்றி குழந்தைகளிடம் நல்லொழுக்கங்களை பண்பாட்டு வகுப்பு வளர்கிறது.

 

நடைபெறும் முறை:

கிராமத்தில் அல்லது தெருவில் உள்ள குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் கூட செய்து நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு தெய்வப் பாடல்கள் தேசபக்தி பாடல்கள் கதைகள் சிறு சிறு கேள்விகள் ஹிந்து மதத்தின் பெருமைகள் யோகாசனம் தியானம் போன்ற நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறோம் இதற்கென போட்டிகளும் நடத்தி பரிசுகளும் கொடுக்கிறோம்.

நோக்கம்:

நம் இந்து மதம் அனைத்து மதங்களுக்கும் முன்னோடியான மதம். ஹிந்து மதம் எப்போது தோன்றியது என்றே தெரியாத அளவிற்கு காலத்தாலும் உயர்ந்த மதம். அப்படி சிறப்பு வாய்ந்த மதத்தில் பல்வேறு விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன . நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைகளும், ஒழுக்கங்களும், தியாகங்களும், யோக கலைகளும் கணக்கிலடங்கா பொக்கிஷங்கள். இவற்றை வருங்கால தலைமுறைக்கு சொல்லித் தரும் பட்சத்தில் ஹிந்துமதம் அழியாமல் அதன் புகழ் இன்னும் பல மடங்கு பட்டொளி வீசி பறக்கும். அள்ள அள்ள வரும் அட்சய பாத்திரம் போல படிக்கப் படிக்க பல்வேறு ஆழமான தகவல்களை ஹிந்து மதம் தன்னுள்ளே கொண்டுள்ளது. ஆனால் தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் யாரும் சொல்லித் தருவதில்லை அத்தகைய ஒரு காரியத்தை பாரத் கல்ச்சுரல் டிரஸ்ட் ஹிந்து முன்னணி இயக்கமும் செய்துகொண்டிருக்கிறது.

தன்னார்வலர்கள்:

பண்பாட்டு வகுப்பினை நடத்துவதற்காக பல கிராம பெண்களும், இளைஞர்களும் அவரவர் பகுதியில் பொதுநலத்துடன் தங்களுடைய கிராம குழந்தைகளுக்கு வகுப்பினை நடத்துகின்றனர். இதற்கென இவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை . இதுபோல பலரும் சேவை செய்ய வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாக இருக்கிறது நம் தர்மத்திற்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவை என்பதை இக்கால இளைஞர்கள் உணர்ந்து இன்னும் அதிகம் பேர் வரவேண்டும். பாரதத்தின் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும். எதிர்கால குழந்தைகள் தேச பக்தியுடன் தெய்வ பக்தியுடனும் தன் மதத்தின் மீதான பற்றுடனும் வாழவேண்டும் .உயர்ந்த உன்னதமான நம்முடைய பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் காப்பாற்றப்படவேண்டும். வேற்று மதத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் நம் ஹிந்து மதத்தின் பெருமைகளை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். பண்பாடு காக்கப்பட்டால் பாரதம் காப்பாற்றப்படும். தனிமனித ஒழுக்கம் தழைக்கும். லஞ்சம் தவிர்த்து நேர்மை அதிகரிக்கும்.

வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் குழந்தைகள் வீதியில் இறங்கி விளையாடும் போது அவர்களின் உடல் தகுதியும் அதிகரிக்கும். பண்பாடும், கலாச்சாரமும் மட்டுமே ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை கருத்தில் கொண்டு பண்பாட்டு வகுப்பு நடைபெறுகிறது.

இன்று தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மனதில் பண்பாட்டு வகுப்பின் மூலம் திறமையையும் ஒழுக்கமும் மனித நேயமும் தைரியமும் தன்னம்பிக்கையையும் வளர்க்கப்பட்டுள்ளது என்பது நமக்கு பெருமையே!

மேலும் படிக்க