திரு. துரை. சங்கர்

திரு. துரை. சங்கர் - முன்னாள் மாநிலத் தலைவர்

சென்னை தெய்வ திரு. துரை அவர்களுக்கும், தெய்வ திரு.சரோஜாஅம்மாள் அவர்களுக்கும் 1955 ம் வருடம் செப்டம்பர் மாதம் 8 ந்தேதி இரண்டாவது மகனாக பிறந்தார்.சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அருள்மிகு மஹா காளியம்மன் திருக்கோவிலை நிர்வகித்து வந்தார். அதே சமயம் மக்கள் நற்பணி மன்றம் என்கிற அமைப்பை துவக்கி அதன் மூலம் சமுதாய தொண்டு, இலவச கல்விதான மையம் என பல தொண்டு கார்யங்களும் செய்து வந்தார். சொந்தமாக ஷூ கடையும், ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்த சமயத்தில் RSS பொறுப்பாளர்கள் 1982 ல் சந்தித்து இந்து முன்னணி என்ற அமைப்பு இந்தப் பகுதியில் துவங்க வேண்டும், நீங்கள் அதில் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். RSS பற்றியோ இந்து முன்னணி பற்றியோ அவருக்கு எதுவும் தெரியாது. இந்து முன்னணி என்றால் ஆன்மீக ரீதியாக, சமயம் சார்ந்த அமைப்பு என நினைத்து உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

வளசரவாக்கத்தில் பழனியப்பா நகரில் உ.ருவாகியுள்ள திடீர் சர்ச் பற்றி விவாதிக்கப்பட்டது. இதை கண்டித்து பொதுக்கூட்டம் விருகம்பாக்கத்தில் ஏற்பாடனது. பொதுக்கூட்டத்தில் திரு கோபால்ஜி அவர்களும், மாநிலத் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களும் பங்கெடுத்தார்கள். அந்த பொதுக்கூட்டத்தில் விருகம்பாக்கத்தை சேர்ந்த சரவணா பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் திரு முருகேச நாடார் அவர்கள் நகர தலைவராகவும், திரு. துரை.சங்கர் அவர்கள் செயளாராகவும் நியமிக்கப்பட்டார்கள். இதிலிருந்து திரு. துரை.சங்கர் அவர்கள் பணி துவங்கியது. வடபழனி கோவில் அருகில் RSS ஷாகாவுக்கு செல்கிறார். அப்போது Y S கண்ணன் தென் மாவட்ட இந்து முன்னணி செயளாலர் மற்றும் இன்னும் RSS பொறுப்பாளர்கள் நெருக்கமாகிறார்கள்.

விருகம்பாக்கம் பள்ளிக்கூடத்தெருவில் புதிதாக மசூதி கட்டுவதற்கு முயற்சித்தபோது அதற்கான போராட்டம். அந்த சமயத்தில் இந்து முன்னணியின் அலுவலக செயளாலர் இ. மு சி என்ற சீனுவாசன் நெருக்கமானார் .இப்படி நகர அளவில் இந்து முன்னணி செயளாலராக துவங்கிய பணி அடுத்து சென்னை மாநகர துணை தலைவர், 91ல் மாநில செயளாலர். சென்னையில் நடந்த பல் வேறு போராட்டங்கள்; ஆர்பாட்டங்கள், சென்னைக்கு வெளியில் உள்ள மாவட்டகளில் இயக்கப்பணி என வளர்ந்தது. 1994 ல் இந்து முன்னணியின் இரண்டாவது மாநில தலைவர் கொல்லப்பட்டார். அப்போது தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் குண்டு வெடிப்புகள் நடந்த நேரம் கோபால்ஜி அவர்கள் அந்த சமயத்தில் மாநில அமைப்பாளராகவும் தலைவராகவும் 6 மாதங்கள் தொடர்ந்தார் . இந்த சூழலில் இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று திரு.துரை.சங்கர் அவர்களை அழைத்தார்.

தன்னுடைய தொழிலை மகன்களிடம் ஒப்படைத்து முழுநேரமாக செயல்பட முடிவெடுத்து, 5 ஆண்டுகள் மட்டுமே பொறுப்பு ஏற்பேன் என்ற வாக்குறுதி பெற்று மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். உடன் கூடங்குளம் ஜெயராஜ் பொதுச் செயளாராகவும், ம. வீரபாகு அவர்கள் இணை அமைப்பாளராகவும் பொறுப்பேற்றார்கள். 5 ஆண்டுகள் மாநில தலைவராக தமிழகம் முழுவதும் முழு நேரமாக இயக்க பணிக்காக சுற்றுபயணம் செய்தார். இந்து முன்னணியில் பொறுப்பு என்பது பதவி அல்ல அது ஒரு ஊழியருக்கு முக்கியமே அல்ல என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார். அதற்க்கு உதாரணமாக Dr. அரசுராஜா தலைவராக பொறுப்பேற்றதும் , திரு. துரை. சங்கர் மாநில பொதுச்செயளாரக பொறுப்பேற்றார்.

RSS அகில பாரதத் தலைவர் பூஜனிய சுதர்சன் ஜி பொறுபெடுத்போது சென்னை மாநகர கூட்டம் ( சாங்கிக்) மீனாட்சி கல்லூரியில் ஏற்பாடாகியிருந்தது. அப்போது RSS சென்னை மாநகரத் தலைவராக (சங்கசாலக்காக) அறிவிக்கப்பட்டார். 2004 வரை இந்து முன்னணி பணி செய்து பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர். வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்தவர். நல்ல குரல் வளம் மிக்க பாடகர். அவர் இயற்றிய ஓம் என்று சொல்லுவோம் பாடல் இன்றும் இந்துமுன்னணி இயக்கத்தின் ஊழியர்களால் பாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்து முன்னணியின் மிக முக்கிய காலகட்டத்தில் நெருப்பாற்றில் நீந்தி இயக்கத்தை வளர்த்த பெருமைக்குரியவர் திரு.துரை.சங்கர் அவர்கள்.