திரு. த.அரசுராஜா

மருத்துவர். திரு. த.அரசுராஜா - முன்னாள் மாநிலத் தலைவர் (தற்போது மாநில பொதுச்செயலாளர்)

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆனந்தன்விளை கிராமத்தில் 12-8-1953-ம் ஆண்டு தெய்வத்திரு.அ.தங்கபாண்டியன் தெய்வத்திரு.த.காசிமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு அந்த துறையில் மருத்துவராக பணிபுரிந்தார். 1982 இந்துமுன்னணி பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய சமுதாய பணியை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சாத்தான்குளம் தாலுகா பொறுப்பாளராக இருந்து அனைத்து கிராம பகுதிகளிலும் இந்துமுன்னணி செல்ல காரணமாக இருந்தார். RSS அமைப்பிப் பயிற்சிகளை கற்றார்.

அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அரசூர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததார். படிப்படியாக மாவட்ட பொறுப்புகளில் இருந்து மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தென்மாவட்டங்களில் இந்துமுன்னணி வளர தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்துமுன்னணி ஆதரவு பெற்ற பாஜக வேட்பாளராக சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டார். 1990 ம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் ஆட்சியில் அயோத்தி ராம ஜென்ம பூமி கர சேவைக்காக சென்ற போது சென்ற போது கைது செய்யப்பட்டு கோரக்பூர் சிறையில் ஒரு மாத காலம் சிறைவாசம் அனுபவித்தார்.

பின்னர் இந்துமுன்னணி மாநிலத் தலைவராக பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என இயக்கத்தை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு சென்றதற்கு மிக முக்கிய காரணமானவர்.திண்டுக்கல் மாவட்டத்திற்கு காயிதேமில்லத் பெயர் சூட்டியதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் 15 அடைக்கப்பட்டார். திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து கண்டித்து பாதயாத்திரை சென்றபோது கைது செய்யப்பட்டு 5 நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். உடன்குடி பகுதியில் இராமகிருஷ்ண மேல்நிலை கல்வி நிலையம் அமைப்பதற்காக ஆறு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.

இந்து முன்னணியில் பொறுப்பு என்பது பதவி அல்ல அது ஒரு ஊழியருக்கு முக்கியமே அல்ல என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார். அதற்கு உதாரணமாக 2016- ல் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றதும் , திரு. அரசு ராஜா அவர்கள் மாநில பொதுச்செயளாரக பொறுப்பேற்றார். தற்போது மாநில பொதுச்செயலாளராக இருந்து வழிநடத்தி வருகிறார். தென் மாவட்டங்களில் மதமாற்றம் ஹிந்து விரோத செயல்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். தேசத்திற்காக வயதான காலத்திலும் அயராது உழைத்து இந்துமுன்னணி ஊழியர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.