அகண்ட பாரத சபதமேற்பு நாள்
பல்லாயிரக்கணக்கான ஆண்டு கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை கொண்ட, வரலாறு உள்ள ஒரே நாடு பாரதம்.இமயம் முடியாய், குமரி பாதமாய் பராசக்தியின் அம்சமாக விளங்குகின்ற இந்த பாரதத் தாயின் அங்கங்கள் பலப் பல காலகட்டங்களில் துண்டு துண்டாக ஆக்கப்பட்டுள்ளன. இரத்த ஆறு ஓடச் செய்து லட்சக்கணக்கான இந்துக்களை கொன்று குவித்து, இலட்சக்கணக்கான இந்து பெண்களை கற்பழித்து, இந்து குழந்தைகளை கொடூரமாக கொன்று இஸ்லாத்தை பரப்பி புனித பூமியை துண்டாடினர். பற்பல சூழ்சிகளினால் பல பகுதிகள் நம்மை விட்டு போயின.
அகண்ட பாரத சபதமேற்பு நாள்
காந்தாரி பிறந்த ஆப்கானிஸ்தான் நம்மை விட்டு பிரிந்தது, லவனும் குசனும் பிறந்து வாழ்ந்த லாகூர் ( பாகிஸ்தான்) இன்று நம்மிடம் இல்லை. த்ரிவிஷ்டபம் என்று அழைக்கப்பட்ட திபெத் இல்லை, பிரம்மதேசம் என்று அழைக்கப்பட்ட பர்மா , இலங்கை என பாரதத் தாயின் பல அங்கங்கள் வெட்டப்பட்டன.குறிப்பாக இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தை தான் விரும்பினார்கள். ஆனால் நடந்தது வேறு.
அகண்ட பாரத சபதமேற்பு நாள்
மதவெறியினால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இந்துக்களின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது.பாரதம் துண்டாடப்பட்ட அந்த துயர நாளை நினைவு கூறவும், பாரத நாடு இழந்த பகுதிகளை, நிலப் பரப்பை மீட்டு மீண்டும் பாரதத்துடன் இணைத்து அகண்ட பாரதம் அடைந்தே தீருவோம் என்ற லட்சியத்துடன் அகண்ட பாரத சபதமேற்பு நாள் கொண்டாடப்படுகிறது.