பாரத மாதா பூஜை

எதிர் வரும் 50 ஆண்டுகளுக்கு நாம் வணங்கும் தெய்வம் பாரத மாதாவாக இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் 1897 ல் கூறினார். சரியாக 50 ஆண்டுகள் கழிந்து நமது நாடு சுதந்திரம் அடைந்தது.

பாரத மாதா பூஜை

நமது மகா கவி பாரதியாரும் “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” – என்றார். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தேச பக்தி உடையவர்களாக இருப்பது மிக அவசியம். தமிழக இந்துக்களிடையே தேசபக்தி உணர்வை உருவாக்குவதற்காக தை மாதம் முதல் தேதி துவங்கி 10 நாட்களுக்கு பாரத மாதா பூஜை நடைபெறுகிறது.

பாரத மாதா பூஜை

பாரத மாதா பூஜையை முன்னிட்டு கிராமம் தோறும் கிளைக் கமிட்டி வாரியாக பாரத மாதா உருவப் படம் வைத்து பாரதத்தின் பெருமைகளை விளக்கி மக்களிடையே தேச பக்தியை வளர்க்கிறது இந்து முன்னணி பேரியக்கம்.

prev
next