விநாயகர் சதுர்த்தி திருவிழா

திலகர் பெருமகனார் நாடு சுதந்திரம் பெற விநாயகர் சதுர்த்தி திருவிழாவை மக்கள் விழாவாக ஆக்கி ஆங்கிலேய கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஆயுதமாக்கினார். அதே போல திராவிட தீய சக்திகளால் நாத்திக சிந்தனை விதைக்கப்பட்டு, தமிழகத்தில் திட்டமிட்டு இந்துக்களை இழிவு படுத்தி பொய் பிரசாரம் செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி திருவிழா

திராவிட சித்தாந்தத்தில் அடிமைப்பட்டிருந்த தமிழக இந்துக்களுக்கு விடுதலையை பெற்றுத்தர, இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தென்னாட்டு திலகர் இராம.கோபாலன் அவர்கள் இந்து முன்னணி பேரியக்கம் மூலமாக விநாயகர் திருமேனி வைத்து சாதாரண இந்துக்களை வீரமிகு இந்துக்களாக மாற்றிட முடிவு செய்தார். 1983 ல் சென்னை திருவல்லிக்கேணியில் தானப்பா தெருவில் முதல் விநாயக சதுர்த்தி நடந்தது.. தற்போது 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில் விநாயக சதுர்த்தி ஜாதி, கட்சி பேதமின்றி இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா

தமிழகமே வீதிகளில் இறங்கி விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சிறப்பாக கொண்டாடுகிறது. மக்கள் ஒற்றுமை விழாவாக , இந்து எழுச்சி விழாவாக தமிழகத்தில் ஒரு மறுமலர்ச்சியை இந்து முன்னணி ஏற்படுத்தியுள்ளது.

prev
next