ஸ்ரீ.இராம.கோபாலன்

ஒரு சகாப்தம்

1925 ல் துவக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பாரதம் முழுவதும் தனது கடின உழைப்பினால் மிகப்பெரும் அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வந்தது.

இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் இந்துக்கள் மீது பலமுனைத் தாக்குதல்கள் இருந்தன, கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு இந்துக்களை மட்டுமே, இந்துக் கடவுளர்களை மட்டுமே இழிவு படுத்தும் நாத்திக நயவஞ்சகர்கள்.

திட்டமிட்ட ரீதியில் ஆசை காட்டி , மோசம் செய்து ,இந்துக்களை ஏமாற்றி நடைபெற்ற கிறிஸ்தவ மதமாற்றம்.

கொத்துக் கொத்தாக அப்பாவி இந்துக்களை மதமாற்றத் துணிந்த இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களது பயங்கரவாத செயல்கள்.

மதம் ஒரு அபின் என்று கூறி தமிழகத்தை தேசீயப் பாதையிலிருந்து விலக்க முயலுகின்ற பிரிவினை சக்திகளின் செயல்பாடுகள்.

சாதி உயர்வு தாழ்வுகளால் ஒன்றிணைய எண்ணாத இந்து சமுதாயம். அத்தகையவர்களை தூண்டி விட்டு குளிர் காய நினைத்த சாதிக் தலைவர்கள், சாதிக் கட்சி தலைவர்கள்.

நிகரில்லாத பணியில் - அழியாத பதிவுகள்

தமிழகத்தை குலைக்க நினைக்கும் அசுர சக்திகளின் கொட்டத்தை அடக்கவேண்டும். அவை வெறும் வேரடி மண்ணும் இல்லாமல் அகற்றப்படவேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் தென்னிந்திய அமைப்பாளர் யாதவ் ராவ் ஜோஷியின் வழிகாட்டுதலில் 21.09.1980 ம் ஆண்டு இராம. கோபாலனால் உருவாக்கப்பட்ட இயக்கம் இந்து முன்னணி. அதன் முதல் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார்.திரு.ராம கோபாலன் இந்து முன்னணியின் வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அவரது மேடை உரைகள் சில தரப்பினரை கோபப்படுத்தியது மற்றும் பல இடங்களில் மரண அச்சுறுத்தல்களை ஏற்படுத்தின.

அழிவற்றது ஆன்மா – துணிவினை இழக்காத நெஞ்சம்

1982 ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கழுத்திலும், தலையிலும் வெட்டப்பட்டு பயங்கரமாக தாக்கப்பட்டார். தலையில் ஏற்பட்ட மிகப்பெரும் வெட்டுத் தழும்பை மறைக்கவே தொப்பி அணியத் தொடங்கினார். தாணுலிங்க நாடரின் மறைவுக்குப் பிறகு மதுரை வழக்கறிஞர் பி.ராஜகோபால் இந்து முன்னணியின் தலைவரானார். அவர் 1994 ஆம் ஆண்டில் அவரது வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டார்.

அழிவற்றது ஆன்மா – துணிவினை இழக்காத நெஞ்சம்

இதுபோன்றே இந்து முன்னணியின் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழகத்தில் பல இடங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை சிந்தாட்ரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி நானியின் தலைமையகம் குண்டுவீசிக்குள்ளானது. எவ்வித பயமும், கவலையும் இல்லாமல் துணிந்து பணியாற்றினார் இராம.கோபாலன். ஏனெனில் ஆன்மா அழியாதது, யாரும் அழிக்க முடியாது என்று உயர்வாழ்வு வாழ்ந்தவர்.