இணைவீர்
இழந்த நிலப்பரப்பை மீட்போம் !!
பண்டைய பாரதத்தின் தலை சிறந்த அரசியல் வல்லுனரான சாணக்யா "அகண்ட பாரதம்" (ஒருங்கிணைந்த இந்தியா) பற்றிப் பேசுகிறார். அன்னிய ஊடுருவல்களிலிருந்து நாட்டைக் காக்க அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு . அதாவது உள ரீதியாகவும் கள ரீதியாகவும் மக்கள் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். ஆனால் வரலாற்றில், பாரத நாடு பல்வேறு கால கட்டங்களில் பல அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்பின் காரணமாகவும், மத அரசியல் காரணமாகவும் துண்டாடப்பட்டுள்ளது. வெட்டுண்ட அங்கங்கள் இணைக்கப்பட வேண்டும்; மீண்டும் வேட்டுபடாமல் காக்க வேண்டும். இந்த நாடு மீண்டும் அகண்ட பாரதமாக வேண்டும்.
இழந்த மக்கள் தொகையை மீட்போம்
பண்டைய பாரதத்தில் அனைத்து மக்களுமே ஹிந்துக்கள். வெளிநாட்டினரின் படையெடுப்பு காரணமாக அவர்கள் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டும், ஆசை காட்டி மோசம் செய்யப்பட்டும் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மதம் மாற்றப்பட்டனர். அப்பாவி மக்கள் மத மாற்றக் கொடூரத்தால் தங்களது மேன்மையான பாரம்பரியத்தை இழந்தனர். இந்து என்பது ஒரு வாழ்வியல் முறை. இதை பின்பற்றுவதும் , கடைபிடிப்பதும் நமது தலையாய கடமை என்பதை மதம் மாறியவர்களுக்கு எடுத்துக் கூறி நல்வழிபடுத்தி அவர்களை மீண்டும் தாய் மதம் திருப்ப வேண்டும்.
இழந்த கோவில்களை மீட்போம்! இருக்கின்ற கோவில்களை பராமரிப்போம்!!
நமது முன்னோடிகளான பேரரசர்கள் அழகான , அற்புதமான கோயில்களை கட்டியுள்ளனர். அவை ஒவ்வொன்றும் கட்டிடக்கலையின் உன்னதம். அன்னிய மூடர்களால் நமது புனித கோவில்கள் கைப்பற்றப்பட்டு இந்த கலைப் பொக்கிஷங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இந்துக்களின் புனிதத் தலங்கள் என்று கருதப்பட்டவை இஸ்லாமிய தர்காவாகவும், மசூதிகளாகவும். ச்ர்சுகளாகவும் மாறின மதுராவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் இத்தகைய படையெடுப்புகளால் மசூதிகளாக்கப்பட்டவை தான் . ஆலயங்களை தகர்த்து விட்டால் பண்பாடும் , கலாச்சாரமும், வாழ்வியல் முறையும் சீர்கேடடைந்துவிடும். அவைகள் மீட்பது நமது கடமை . அயோத்தி மீட்கப்பட்டது. பிற முக்கியத் தலங்களும் மீட்கப்பட வேண்டும். அதேபோல, இருக்கின்ற கோவில்களைக் காக்க , பராமரிக்க வேண்டும். ஆலயங்கள் அரசின் பிடியிலிருந்து மீட்கப்பட வேண்டும்
பாரதத்தை இந்து நாடு என்று அறிவிக்க வைப்போம்
இந்தியாவை "இந்து நாடு" என்று அறிவித்திருக்க வேண்டும் என்று மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி மேதகு. S.R. சென் அவர்கள் 2018 ம் ஆண்டு ஒரு தீர்ப்பில் கூறினார். சுதந்திரத்தின் போது மதத்தின் அடிப்படையில் தான் தேசப் பிரிவினை நடந்தது. "பாகிஸ்தான் இது ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டது. இந்தியாவும் ஒரு இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் ..." என்று நீதிபதி எஸ்.ஆர்.சென் கூறினார் இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். துரதிர்ஷ்ட வசமாக நமது நாடு ஒரு மத சார்பற்ற நாடு என்று தீர்கமாக சிந்திக்க முடியாத அன்றைய அரசியல் தலைவர்களால் அடையாளப்படுத்தப் பட்டது. இந்து ஒரு மத அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு கலாச்சார அடையாளம். ஒரு வாழ்வியல் முறை . இந்த கலாச்சார,பண்பாட்டு வாழ்வியல்முறை சீரழிந்தால் இந்த நாடு மீண்டும் பிளவைக் காணும். துண்டாடப்படும். எனவே இந்துக்கள் ஒன்றுபட்டால் பண்டைய ல்காலங்களில் இருந்ததைப் போலவே இந்து நாடாக அறிவிக்க வைக்க முடியும். அறிவிக்க வைப்போம.