சாதனைகள்
நாத்திகம் பரவலாக இருந்த காலகட்டத்தில் ஆன்மீகவாதிகள் கண்களை மூடிக்கொண்டு இருந்த ஒரு காலத்தில், விழிப்புணர்வு இல்லாத இந்து சமூகத்தை சுற்றியுள்ள அபாயங்கள் குறித்து இந்துக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கும், ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், இந்து மதத்தை வலுப்படுத்துவதற்கும், இந்துக்களுக்காக வாதாட – போராட- பரிந்துபேச 1980 ல் இந்து முன்னணி தொடங்கியது. தமிழகத்தின் மூலை முடுக்குகளெல்லாம் இந்துமுன்னணி ஆரம்பிக்கப்பட்டன. எங்கெங்கெல்லாம் இந்துக்களுக்கு , இந்து கோவில்களுக்கு , இந்து பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இந்துமுன்னணி களத்தில் இறங்கியது. இந்து கடவுளர்களை இழிவு படுத்திய போதும் , இந்து நம்பிக்கைகளை கொச்சைப் படுத்தியபோதும் அவர்களை எதிர்த்து வாதாடவும், பதிலுக்கு பதில் கேள்வி கேட்கவும் தொடங்கியது இந்துமுன்னணி.
கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து , பின் இந்துக்கோவில்களை கொள்ளையடிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆரம்பித்து, அதன் மூலம் கோவில் சொத்துக்களை , நிலங்களை கொள்ளை அடிக்கும் கும்பல்களை எதிர்த்து போராடி நிலங்களையும் சொத்துக்களையும் மீட்டது இந்துமுன்னணி. மதமாற்றத்தையும், பயங்கரவாதத்தையும் தட்டிக் கேட்டது இந்து முன்னணி. பெண்கள் தன்னம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் சமூகத்தில் ஆன்மீகப் பணிக்காக ஈடுபட பல்வேறு இடையூறுகளைக் கடந்து பூஜை மற்றும் வழிபாடுகள் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தியது இந்துமுன்னணி. இந்த 40 ஆண்டுகால வரலாறு சாதாரணமானது அல்ல ... நெருப்பாற்றில் நீந்திய வரலாறு. இது வெறும் வரலாறல்ல ..... வியர்வையும் . இரத்தமும் சிந்தி இந்துமுன்னணி ஊழியர்கள் கண்ட வெற்றிச் சாதனைகள் ... சில சரித்திர சாதனைகள் ... அவைகளை முழுவதும் அறிந்துகொள்வோம் ....