வீரத் தியாகிகள்
வீரமிகு இளைஞன் கோட்டாறு குமார் - 1982
மண்டைக்காடு கலவரத்திர்குப்பின் நாகர்கோவில் நாகராஜா திடலில் இரண்டாவது இந்து பாதுகாப்பு மாநாடு 1982 ம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட்து. பெரிய அளவில் இந்துமுன்னணி சார்பில் ஏற்பாடுகள் நடை பெற்றது. லக்ஷக் கணக்கில் பொதுமக்களும் தன எழுச்சியாக திரள ஆரம்பித்தனர், மக்கள் செல்வாக்கும் இந்து ஒற்றுமையும் கூட ஆரம்பித்தவுடன் காவல் துறை மாநாடு நடைபெரும் நாள் காலை மாநாட்டை தடை செய்தது.நாகராஜா திடலில் இந்துக்கள் திரள்வதை தடை செய்தவுடன் வீரத் துறவி .கோபால்ஜியும் தாணுலிங்க நாடாரும் மாநாட்டை ஊர்வலமாக மாறறினர். ஊர்வலம் துவங்கியவுடன் காவல் துறை கண்முடித்தனமாக தாக்க ஆரம்பித்தனர்.தடியடியை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் முன்னேற ஆரம்பித்த உடன் காவல் துறை யாரும் எதிர் பாரத நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது.
மாவீரன் வீரகணேஷ் - 30.08.1989
தமிழகத்தின் இந்து இயக்க முதல் பலிதானி.வீரத்திற்கும் மதபற்றுக்கும் ஆணிவேராய் திகழ்ந்தவர். 15-5-1965 ஆம் ஆண்டு மணி சரஸ்வதி தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.வீரகணேஷ் உடன் பிறந்தவர்கள் அக்கா மற்றும் ஒரு தம்பி. கோவை கெம்பட்டிகாலணி பகுதியில் குடியிருந்து வந்த வீரகணேஷ் யூனியன் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். 1983 ஆம் ஆண்டு ஆர்.எஸ் எஸ் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டார்.
தியாக மலர் வீரசிவா - 05.09.1991
1964 ஆம் ஆண்டு குப்புசாமி ராஜம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.ஒரு அக்கா மற்றும் மூன்று தம்பிகள் உள்பட ஐந்து பேர் சகோதர சகோதரிகள் ஆவர். இடையர்வீதியில் சலவை தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த அவர் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். தனது 16 வயதில் ஆர்.எஸ் எஸ் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். துணிச்சலுக்கு சொந்தக்காரர்.அவர் குடியிருந்து வந்த இடையர்வீதி பகுதியில் பிக்பாக்கட் திருடர்கள் அதிகமாக இருந்தனர்.அவர்களை துணிச்சலுடன் எதிர் கொண்டு மக்களை திரட்டி விரட்டி அடித்தார்.
இராமேஸ்வரம் முனியசாமி - 05.12.1991
பாரத தேசத்தின் புனிதத் தலங்களில் தலைசிறந்தது. மண்ணெல்லாம் சிவலிங்கமான, ஆனந்தமான ராமேஸ்வரம் தீவினில் ராமநாத சுவாமிக்கு அடுத்ததாய் மக்களால் அறியப்படும் பெயர் முனியசாமி. முனியசாமி எனும் தெய்வம் இந்துக்களின் காவல் தெய்வம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் கொம்பூதி என்னும் சிற்றூரில் பிறந்தவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த முனியசாமி அவர்கள் இயற்கையிலேயே பிறருக்கு உதவும் மனப்பான்மை பெற்றிருந்தார்.
வீரமகன் குமரி பாலன் - 08.08.1993
ஆகஸ்டு_8_பயங்கரவாத_எதிர்ப்பு_தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற வேளிமலை(குமாரகோவில்) குமாரசுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது "பிரம்மபுரம்"என்ற சிற்றூர். பிரம்மபுரம் வீரத்திற்கும்,தர்மத்திற்கும் பெயரும் புகழும் பெற்ற பிடாகை ஆகும்.குமரி மாவட்டத்தில் முதல் முதலாக ஆர்.எஸ்.எஸ்.ஆரம்பிக்கப்பட்ட ஊர். இந்த ஊரில் பெயரும் புகழும் பெற்ற குடும்பத்தில் பத்மநாபபுரம் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக சீரும் சிறப்புமாக பணி ஆற்றியவர் உயர்திரு.C.P.பத்மநாபபிள்ளை. இவரின் மூத்த மகன் அஞ்சல் அதிகாரியான K.P.கோலப்பாபிள்ளையின் ஒரேமகன் பத்மநாபதாஸ்(விஷ்ணு பண்ணையார்) -ராதா தம்பதிகளுக்கு நான்கு ஆண் குழந்தைகள் . இரண்டாவது மகன் கோலப்பதாஸ் (எ) பாலன் 17-7-1961 அன்று ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.
அமரர் வழக்கறிஞர் திரு. ராஜகோபாலன் - 10.10.1994
தாணுலிங்க நாடார் மறைவுக்குப் பின் இந்துமுன்னணியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மதுரை வழக்கறிஞர் திரு.ராஜகோபாலன். மதுரை கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர் .RSSல் மாவட்ட செயலாளராக இருந்து இந்துமுன்னணிக்கு தலைவரானார். அதிர்ந்து பேசமாட்டார். கடும்சொல் அறியாதவர். கதர் ஆடையை எப்போதும் உடுத்துபவர். நெற்றியில் எப்போதும் திருமண் இருக்கும். இவரின் வருமானத்தை நம்பி மட்டுமே குடும்பம் இருந்தது. 3மகன்களும் பள்ளிப் படிப்பில் இருந்தனர்.
பைபிள் ஷண்முகம் - 1995
1992 இல் ஒரு நாள் காலையில் செய்தி விமர்சனம் என்று புதிதாக சென்னை வானொலியில் நிகழ்ச்சி ஒலிப்பரப்பானது. அதில் ஒரு காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சி நாதன் போன்றவர்கள் எல்லாம் தீவிரவாதியாக பார்க்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் தியாகிகளாக போற்றப்படுகிறார்கள். அதுபோல விடுதலைப் புலி பிரபாகரன், சந்தன கடத்தல் வீரப்பன் போன்றவர்களும் பார்க்கப்படலாம் என்று பேசிக்கொண்டே போனார் அந்த தொகுப்பாளர். எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது..
மாவீரன் வெள்ளையப்பன் - 01.07.2013
இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் மாவீரன் வெள்ளையப்பன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா துரைச்சாமியாபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதில் இருந்ததே விவசாயத்தின் மீது நாட்டம் அதிகம் கொண்டதால் மூத்த அண்ணன்களுடன் ஒன்று சேர்ந்து விவசாய தொழிலை கவனித்து வந்தார். அதனாலேயே பள்ளிக்குச் செல்லும் நாட்டம் குறைந்து பள்ளிப்படிப்பை துவக்கத்திலேயே நிறுத்தினார். வீட்டில் கடைக் குட்டியாக இருந்த வெள்ளையப்பன் அவர்கள் வீட்டிற்கு செல்ல பிள்ளையாக மூத்த அண்ணன்களின் கவனிப்பில் வளர்ந்து வந்தார்.
பாடி சுரேஷ் எனும் கர்ம யோகி - 18.06.2014
சமுதாயப் பணியில் அர்ப்பணமான திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் அவர்கள் குமரி மாவட்டம் இரணியல் அருகே கக்கோடு கிராமத்தில் பாகவதர் கேபி சாமி, சரஸ்வதி அம்மாள் ஆகியோருக்கு 1965 மகனாகப் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரி ஒரு சகோதரர். மனைவி புவனா மற்றும் கிருஷ்ணவேணி, ஹிரன்மயி என்ற 2 இரண்டு மகள்கள் உள்ளனர். 1990ல் சென்னையில் இசை ஆசிரியர் பயிற்சி பெற்று 1995 முதல் இரண்டு வருட காலம் ஆர் எஸ் எஸ்ஸின் பிரச்சாரக்காக இருந்தார். பின்னர் சங்கப் பணியில் மாவட்ட பொறுப்பில் பணி மேற்கொண்டார்.
மாவீரன் சசிகுமார் - 22.09.2016
28-10-1980 ல் நடுத்தர வர்க்கத்தில் சின்னசாமி&ராதா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தன்னுடைய பள்ளி படிப்பை சாய்பாபா காலனியில் உள்ள அங்கப்பா மேல்நிலை பள்ளியில் தொடங்கினார். 1993ல் 8ம் வகுப்பு படிக்கும்போது தன்னை இந்து முன்னணியில் இணைத்துக்கொண்டார் 1995ல் ரத்தினபுரி பகுதியின் 67வது டிவிசன் கிளை பொருப்பாளராக பொறுப்பேற்றார் பின் 67வது டிவிசன் தலைவர், முழு நேர ஊழியராக பொருப்பெடுத்து தொண்டாமுத்தூர் நகர செயலாளராக பணியாற்றினார் குடும்ப சூழ்நிலை காரணமாக 9ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிப்படிப்பை விட்டு விட்டு அண்ணா மார்க்கெட்டில் டீ மற்றும் முருக்கு வியாபாரம் செய்து வந்தார்