பசுத்தாய்

பசுத்தாய் – மாத இதழ்

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள், தமிழகத்தின் பல துறவி பெருமக்களை சந்தித்து, இந்து முன்னணி பல சாதனைகள் புரிந்தபோதும் தமிழக இந்துக்களிடையே எழுச்சியோ, உணர்ச்சியோ இல்லாமல் இருக்கிறார்களே? என்ற கேள்வியை முன் வைத்தார்கள்.

பலரும் கூறிய பதில், நம்மிடம் ஒரு சாபம் இருக்கிறது. இன்று பல இடங்களிலும் மாட்டிறைச்சி கடை, பசுக்கள் வெட்டப்படுவதும் நடக்கிறது. இதன் காரணமாக ஏற்பட்ட அந்த சாபத்திற்கு விமோச்சனம் கோ பூஜை செய்வதும், பசு பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் என்றுக் கூறினர்.

சாப விமோச்சனத்தையே சாதனையாக்க, 12.11. 1995 ஆம் ஆண்டு மாநிலம் தழுவிய அளவில் 10,008 இடங்களில் கோ பூஜை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் பலனாக பல கோயில்களில், கிராமங்களில், கோ பூஜை மீண்டும் புத்துயிர் பெற்றது. பல மாவட்டங்களில் கோசாலாக்கள் (பசு மடங்கள்) ஏற்படுத்தும் பெரு முயற்சி நடைபெற்றது.

4 பக்கக் கடிதமாக பசுத்தாய் பிறந்தது.. அப்போது, மக்களிடையே பசுவை போற்ற வேண்டும் என்ற செய்தியைக் கொண்டு செல்ல ஒரு செய்தித் தாள் கடித வடிவில் ஏற்படுத்துவது என முதன் முதலில் நவம்பர் மாதம் 1995 இல் நான்கு பக்க வடிவில் பசுத்தாய் எனும் பெயரில் அனுப்பப்பட்டது. அதன் பிறகு பசுத்தாய் மாத இதழாக 1996 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருநாளாம் செப்டம்பர் மாதத்தில் பதிவு பெற்ற பத்திரிகையாக வடிவம் பெற்றது. அப்போது அது நான்கு பக்க வடிவில், சார் போஸ்ட் என்ற வாங்கியவுடன் படிக்கும் வகையில் அதிகமான துணுக்குச் செய்திகள், ஆன்மீக கருத்துகள் இடம்பெற்றன.

 

பசுத்தாய் பெயர் வந்த காரணம்

தாய் என்பதற்கு பெண்களை ஈர்க்கும் ஒரு சக்தி இருக்கிறது. கோமாதா என்பதை அழகு தமிழில் பசுத்தாய் எனும்போது அது சாதாரண மக்களை அதுவும் பெண்களை சென்றடையும். இந்துக்களில் பெண்கள் அதிகம் வெளி விஷயம் தெரியாத காரணத்தால், மதமாற்றம், பயங்கரவாதம், இந்து விரோத செயல்கள் பற்றி அதிகம் அறியவில்லை. பெண்களை குறிவைத்தே மதமாற்றமானது பெரும்பாலும் நடக்கிறது. ஆகவே பெண்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு, போராட்ட குணம் கொண்டு சேர்க்க பசுத்தாய் அவசியம் குறித்து வீரத்துறவி இராம கோபாலன் கருத்துருக் கொண்டார். இதன் காரணமாக, பசுத்தாய் சுகர் கோட்டட் மெடிசன் எனும் மருந்தை தேனில் குழைத்து தருவதுபோல ஆன்மீகத்தின் வாயிலாக இந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என பசுத்தாய் வடிவமைக்கப்பட்டது.

பசுத்தாய் வளர்ச்சி படிக்கட்டில்

முதலில் நான்கு பக்க வடிவில் வந்தது, டேபுலாய்ட் எனும் பெரிய வடிவலான நான்கு பக்கங்களாக வடிவெடுத்தது. அதன் பிறகு, அது 6 பக்கங்களாகவும், பிறகு 8 பக்கங்களாகவும் உருவெடுத்தது. அப்போது, பசுத்தாய் வளர்ச்சிக்காக இந்து முன்னணி இயக்கச் செய்திகளோடு வரதுவங்கியது.

புத்தக வடிவில்

அந்த பெரிய அளவிலான 8 பக்கத்தை அப்படியே புத்தக வடிவில் மாற்றி 16 பக்கமாகவும், அதன் பிறகு 24 பக்கமாகவும், பிறகு ஆர்ட் பேப்பரில் மூவண்ணத்தில் அட்டையோடு வடிவம் பெற்றது.

பசுத்தாய் அறக்கட்டளை உருவானது

இந்நிலையில் 2007ஆம் ஆண்டு திருச்சி, திருப்பூரில் உருவான கோசாலாக்களை இணைத்து, பசுத்தாய் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. பசுத்தாய் அறக்கட்டளையின் ஓர் அங்கமாக பசுத்தாய் மாத இதழ் பல வண்ண அட்டையோடு, 24 பக்கமாக, பிறகு 32 பக்கமாக மாற்றம் கண்டது. 2018ஆம் ஆண்டு முழுவதும் ஆர்ட் பேப்பரில் பலவண்ணங்களில் 32+ அட்டை 4 பக்கம் என 36 பக்கமாக வெளி வந்துகொண்டிருக்கிறது.

வாசகர்களின் ஆதரவு

முதன் முதலில் 3000 சந்தாதாரர்கள் என்ற அளவில் ஆரம்பிக்கப்பட்ட பசுத்தாய், தற்போது 20, 000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், லட்சக்கணக்கான வாசகர்களையும் தன்னக்கத்தே கொண்டுள்ளது.

சாதாரண பேப்பரில் நான்கு பக்க பத்திரிகைக்கு வருட சந்தா ரூ.15/= என துவங்கி இன்று பல வண்ண 36 பக்க ஆர்ட் பேப்பர் மாத இதழின் ஆண்டு சந்தா ரூ.150/= 12 ஆண்டு சந்தா ரூ.1500/= என அதன் வளர்ச்சிக்குத்தக்க அமைக்கப்பட்டது.

இப்போதும், ஆன்மீகத்தோடு, பசு பாதுகாப்பு போன்ற கருத்துக்களோடு, தேச பக்தி, தெய்வ பக்தியை மையமாகக்கொண்டு வாசகர்களின் ஆதரவையும் ஆன்றோர்கள், நல்லோர்களின் நல்லாசியையும் பெற்று வெற்றி நடைபோடுகிறது.

பசுத்தாய் .. கோமாதா.. காமதேனு.. படிப்போருக்கும், ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியையும், இந்து எழுச்சியையும் ஏற்படுத்தி வரும் பசுத்தாய் மாத இதழ்.. ஒரு சமுதாய ஆன்மீக மாத இதழ்.

இதற்கான சந்தாவை நீங்கள் வங்கியிலும் நேரடியாக செலுத்தலாம்..
PASUTHAI ARAKATTALAI
PUNJAB NATIONAL BANK
KALAIMAGAL KALVI NILAYAM BRANCH, ERODE
SB A / C No. 6234000100032777
IFSC CODE: PUNB 0623400
மணியார்டர் மூலம் சந்தா அனுப்பிட:
பசுத்தாய் கா/பெ. ஹிந்துஸ்தான் ஹேண்ட்லூம்ஸ்
எண்: 10, கிராமடை 7வது வீதி, சூரம்பட்டி, ஈரோடு - 638 009
சந்தா செலுத்திய விவரத்தை, முகவரி மற்றும் முகவரி மாற்றத்தை தெரிவிக்க வேண்டிய கைபேசி எண்:
86751 14301
ஆண்டு சந்தா Rs.150 /- ஆயுள் சந்தா (12 ஆண்டுகளுக்கு) Rs.1500 /-
சந்தா செலுத்தி உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறோம்.

மேலும் படிக்க