வழிகாட்டிகள்

அமரர் திரு. ஐயா தாணுலிங்க நாடார் - முதல் மாநிலத் தலைவர்

சித்திரகுப்தன் என் ஏட்டைப் புரட்டிக் கொண்டிருக்கிறான் ஆகவே இளைஞர்களே இந்த பண்பாட்டினையும் தேசத்தையும் காக்க வாருங்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே 1988 ல் ஏரலில் நடைபெற்ற RSS தலைவரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட இந்துமுன்னணி மேடையிலேயே உயிர் நீத்தவர் இந்து முன்னணியின் முதல் மாநில தலைவர் ஐயா தாணுலிங்க நாடார்.

மேலும் படிக்க

அமரர் வழக்கறிஞர் திரு. ராஜகோபாலன் - இரண்டாவது மாநிலத் தலைவர்

தாணுலிங்க நாடார் மறைவுக்குப் பின் இந்துமுன்னணியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மதுரை வழக்கறிஞர் திரு.ராஜகோபாலன். மதுரை கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர் .RSSல் மாவட்ட செயலாளராக இருந்து இந்துமுன்னணிக்கு தலைவரானார்.

மேலும் படிக்க

திரு. துரை. சங்கர் - முன்னாள் மாநிலத் தலைவர்

சென்னை தெய்வ திரு. துரை அவர்களுக்கும், தெய்வ திரு.சரோஜாஅம்மாள் அவர்களுக்கும் 1955 ம் வருடம் செப்டம்பர் மாதம் 8 ந்தேதி இரண்டாவது மகனாக பிறந்தார். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அருள்மிகு மஹா காளியம்மன் திருக்கோவிலை நிர்வகித்து வந்தார். அதே சமயம் மக்கள் நற்பணி மன்றம் என்கிற அமைப்பை துவக்கி அதன் மூலம் சமுதாய தொண்டு, இலவச கல்விதான மையம் என பல தொண்டு கார்யங்களும் செய்து வந்தார்.

மேலும் படிக்க

மருத்துவர். திரு. த.அரசுராஜா - முன்னாள் மாநிலத் தலைவர் (தற்போது மாநில பொதுச்செயலாளர்)

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆனந்தன்விளை கிராமத்தில் 12-8-1953-ம் ஆண்டு தெய்வத்திரு.அ.தங்கபாண்டியன் தெய்வத்திரு.த.காசிமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு அந்த துறையில் மருத்துவராக பணிபுரிந்தார். 1982 இந்துமுன்னணி பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய சமுதாய பணியை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சாத்தான்குளம் தாலுகா பொறுப்பாளராக இருந்து அனைத்து கிராம பகுதிகளிலும் இந்துமுன்னணி செல்ல காரணமாக இருந்தார். RSS அமைப்பிப் பயிற்சிகளை கற்றார்.

மேலும் படிக்க

திரு. காடேஸ்வரா .சி. சுப்பிரமணியம் - மாநிலத் தலைவர்

அன்றைய கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா வாய் பாளையம் கிராமத்தில் திரு.சின்னசாமி, திருமதி . செல்லம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1956 சித்திரை மாதம் பத்தாம் நாள் பிறந்தார். தன்னுடைய பால பருவத்தை திருப்பூரில் கழித்தவர் . ஆரம்ப காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்க தலைவராக திருப்பூரில் பொறுப்பு வகித்தார். அந்த காலகட்டத்திலே இந்திராகாந்தி அவர்களால் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது பத்திரிக்கைகளில் வந்த செய்திகளைக் கண்டு மனம் வருந்தினார். அந்த சமயத்தில் RSS ஆற்றிய அரும்பணிகளைக் கண்டு வியந்தார்.

மேலும் படிக்க

மூத்த செயல்வீரர்கள்

திரு. வி.பி.ஜெயக்குமார் - மாநில துணைத் தலைவர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா பரமன்குறிச்சி கிராமத்தில் 26.6.1951ல் தெய்வதிரு V.V.பெருமாள் தெய்வ திருமதி V.P.ராமேஸ்வரி ஆகியோருக்கு மகனாக பிறந்தார் தனது 24வது வயதில் 1975 ல் RSS ன் அப்போதைய பரிவார் அமைப்பான ஜன சங்கத்தில் இணைந்து தன்னுடைய சமுதாய பணியை துவக்கினார். 1976 ல் திருநெல்வேலியில் நடைபெற்ற நெல்லை மாவட்ட ஜன சங்க மாவட்ட மாநாட்டில் ஜன சங்க கொடியை ஏற்றி துவக்கி வைத்தவர் திரு.ஜெயக்குமார் அவர்கள் .

மேலும் படிக்க

திரு. சி.பரமேஸ்வரன் - மாநில பொதுச்செயலாளர்

குமரி மாவட்டத்தில் குளச்சல் அருகேபணவிளை கிராமத்தில் திரு.சின்னக்கண்ணு, திருமதி. முத்துலட்சுமி அம்மையாருக்கு மகனாக 1.4.1960 இல் பிறந்தார். 1977 இல் பள்ளிப்படிப்பை முடித்து 1979 - சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி செய்தார். அப்போது நங்கநல்லூரில் திரு.சீதா ராமராவ் என்பவர் மூலமாக ஆர்.எஸ்.எஸ் இன் ஷாகாவில் இணைந்தார்.

மேலும் படிக்க