1980

1980

1980 ஜூன் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநிலக் செயற்குழு கூட்டம் கரூரில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்றது . அதில் இந்துமுன்னணி இயக்கம் உருவானது. மாநில அமைப்பாளராக திரு.இராம்.கோபாலன் அவர்களுக்கு பொறுப்பு தரப்பட்டது.

இந்து முன்னணி எனும் பெயர் எப்படி சூட்டப்பட்டது ? இதற்கு முன்னால் சேலம் ராமசாமி என்று ஒருவர் இருந்தார் . அவர் இந்து ஆலயப் பாதுகாப்புக்காகப் பல பணிகளைச் செய்திருக்கிறார் . அவர் இந்து மக்கள் முன்னணி அமைப்பை நடத்தி வந்தார் . இந்து மக்கள் முன்னணி என்பதில் இந்து என்றாலே மக்கள் தான் , எனவே , அதனை இந்து முன்னணி எனச் சுருக்கி வைக்கப்பட்டது .

பெயர் தமிழிலேயும் இருக்கிறது, மக்கள் சுலபமாகச் சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது . புரியும் , மனதிலும் பதியும் .

நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் வார்த்தைகளில் இனி....

என்னைச் செய்யச் சொல்கிறீர்களே , என்ன செய்வது , என்ன பண்ணனும் , ஒன்றுமே புரியவில்லையே , கண்ணைக் கட்டி காட்டில்விட்ட மாதிரி இருந்தது .

இயக்க நிதி என்னிடம் ரூ .35 / - கொடுத்து அனுப்பி வைத்தார்கள் . அந்தப் பணத்தில் நேராக கன்னியாகுமரிக்குப் போனேன் .

அங்கு பகவதி அம்மன் கோயிலுக்குப் போய் அம்பாளைப் பிரார்த்தனை பண்ணிவிட்டு , வம்பு தும்புல மாட்டிக் கொண்டு இருக்கிறேனே , நீதான் வழிகாட்டணும் என்று வேண்டிக்கொண்டு , கன்னியாகுமரியில் இருந்த இந்து இளைஞர்களிடம் என்ன செய்யலாம் , எப்படிச் செய்யலாம் என்று விவாதித்தேன் . அவர்கள் சில தகவல்களைச் சொன்னார்கள்.

உடனே போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளெய்ண்ட் கொடுத்து எஃப்.ஐ.ஆர் . போடு என்று சொன்னேன் . போனவர்கள் சொன்னார்கள் நாங்கள் புகார் கொடுக்க ஸ்டேஷன் போனோம் , எங்கள் மீது கேஸ் போடுவதாக காவல்துறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் என்று வந்து சொன்னார்கள் .

 

சரி கேஸ் வாங்கு ! அதிகமாக யார் கேஸ் வாங்குகிறார்களோ அவர்களைத்தான் கிளைத் தலைவராகப் போடப்போறேன் என்று அறிவித்தேன் .

முதல் கிளை விட்டது குமரி மண்ணில் .. முதல் கிளைக் கமிட்டி பகவதி அம்மன் அருளால் கன்னியாகுமரியில் தான் துவக்கினேன் .

இந்து முன்னணிக்குக் கொள்கை , கோட்பாடு எல்லாம் வகுத்துக் கொடுத்தது பொதுமக்கள்தான் .

இந்து முன்னணியின் செயல்திட்டத்தை வகுத்துக் கொடுத்ததும் அவர்கள்தான்.

கோபால் ஜிக்கு. இந்து முன்னணியில் பொறுப்பு கொடுத்த பின்பு 3 மாதம் சுற்றுப் பயணம் செய்த பின்பு, மக்கள் தொடர்பு கொள்ள முகவரி தேவை பட்டது அப்போது. RSS ல் இருந்து இந்து முன்னணிக்கு .சு. சிதம்பரம் என்பவரை கொடுத்தார்கள். அவரை கோபால்ஜி அலுவலக செயலாளராக பொறுப்பு கொடுத்தார். அவரும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு சரி அலுவலம் எங்கே என்று கோபால்ஜி யிடம் கேட்டார்.

நீங்கள் தானே அலுவலக செயலாளர் நீங்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று கோபால்ஜி கூறினார் . அவர் புரசைவாக்கத்தில் உள்ள தன் வீட்டின் மாடியை அலுவலகமாக மாற்றினார். அதுதான்

இந்து முன்னணியின் முதல் அலுவலகம்.

பிறகு 1995 வரை சேத்துப்பட்டில் இயங்கியது.

1995 இல் சிந்தாரிப்பேட்டையில். காரியாலயம் வாங்கிய சில மாதங்களில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அதன்பிறகு தற்காலிகமாக மூன்றாண்டுகள் பெரம்பலூரில் தலைமை அலுவலகம் செயல்பட்டது. அதன் பிறகு இன்று வரை சிந்தாரிப்பேட்டையில் தலைமை அலுவலகம் செயல்படுகிறது

மேலும் படிக்க