1982

குமரி மாநில மாநாடு - எழுச்சி கண்ட குமரி இந்துக்கள்

1982 - ம் ஆண்டு கன்யாகுமரி மாவட்ட இரண்டாவது இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு நாகர்கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டது . தமிழக அரசு சிறுபான்மை ஒட்டிற்காக மாநாட்டை நடத்த தடை விதித்தது . தடையை மீறி மாநாடும் ஊர்வலமும் நடத்த முயன்ற ஐயா தாணுலிங்க நாடார் , வீரத்துறவி இராம கோபால்ஜி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர் .

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் , கோட்டாறு தியாகி குமார் வீர மரணம் அடைந்தார் . இந்துக்கள் மீது பல பிரிவுகளில் குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன .

இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் நடத்தியே தீரவேண்டும் என்ற தளராத எண்ணத்தின் காரணமாக 1983 - ம் ஆண்டு , மீண்டும் இரண்டாவது இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு நாகர்கோவிலில் நடத்தப்பட்டது .

கன்யாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட இந்து எழுச்சியை இந்து வாக்கு வங்கியாக இந்து முன்னணி மாற்றியதன் விளைவாக , 1984 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் , பத்மனாபபுரம் தொகுதியில் இந்து முன்னணி ஆதரவு பெற்ற சுயேட் சை வேட்பாளர் திரு வை . பாலச்சந்தர் அவர்கள் வெற்றி பெற்றார் . திரு . எம் . மோகன்தாஸ் மற்றும் திரு . எம்.ஆர் . காந்தி ஆகியோர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனர் .