1984

1984 காரைக்கால்

ஹிந்துக்களின் திருமண பதிவை மீட்டதுகாரைக்கால் பிரஞ்ச் ஆட்சியின்போது மக்களின் பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகியவை அந்தந்த கொமியூன், பஞ்சாயத்து, நகராட்சி அலுவலகங்களில் பதிவு செய்யப்படும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழக்கமாகும். 1984 –ல் புதுச்சேரி அரசு திடீரென்று இந்த சட்டத்தை மாற்றி கிருஸ்துவ,முஸ்லீம் மட்டும் தங்களது பிறப்பு, இறப்பு,திருமணம் ஆகியவற்றை அந்தந்த கொம்யூன் ,பஞ்சாயத்து, நகராட்சி அலுவலகங்களின் பதிவு செய்து கொள்ளலாம். ஹிந்துக்கள் தங்களது திருமணத்தை வீடு, மனை ஆகியவற்றை பதிவு செய்யும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஹிந்து முன்னணி இதனை கடுமையாக ஏதிர்த்து துண்டு பிரசுரம், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதியும் எந்த பலனுமின்றிப் போனதால் இறுதியாக சாலையில் இறங்கிப் போராட தீர்மானித்தது. இதுபற்றி கேள்விப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரி ஹிந்து முன்னணி பொறுப்பாளர்களை அழைத்து உங்கள் கோரிக்கை பற்றி அரசிடம் பேசியிருப்பதாகவும் ஒருசில நாட்களில் நல்ல பதில் வருமாதலால் போராட்டம் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.அதுபோலவே சில நாட்களில் ஹிந்துக்கள் தங்களது திருமணத்தை பழையபடி அந்தந்த கொம்யூன், பஞ்சாயத்து,நகராட்சி அலுவலகங்களில் பதிவுசெய்து கொள்ளலாம் என்று உத்திரவு வந்தது

 

நிரவி கரியமாணிக்க பெருமாள் மாசிமக தீர்த்தவாரி

காரைக்கால் மாவட்டம் நிரவி என்ற ஊரில் மிகப்பலமைவய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீகரியமாணிக்கபெருமாள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், மகநட்சத்திரத்திரத்தன்று வீதியுளவாக புறப்பட்டு, கடற்கரைக்குச்சென்று தீர்தவாரி கொடுப்பது வழக்கம். 1935 வாக்கில் சுனாமி வீதியுலா செல்லும் பாதையில் திடீரென்று முஸ்லீம்கள் மசூதி ஒன்றைக் கட்டிவிட்டனர்.

பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் மசூதி இருக்கும் வீதி வழியாக சுவாமி தீர்தவாரி கொடுக்க எழுந்தருள எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஏதிர்த்து யாரும் பேசாததால் சுவாமி புறப்பாடு நின்று போனது. இது நடந்து 68 ஆண்டுகளுக்குப்பின் ஹிந்து முன்னணியின் கிளை காரைக்காலில் துவங்கப்பட்ட பின் ஊர் பெரியவர்கள் இதனை ஹிந்து முன்னணியிடம் தெரிவித்தனர்.

ஹிந்து முன்னணியும் இதனைக் கையில் எடுத்து கடுமையாகப் போராடியது. அப்போது காரைகால் காவல்துறை கண்காணிப்பாளராக ஒரு முஸ்லீம் இருந்தார் அவர் துணையுடன் இதனை தடுக்க முஸ்லீம்கள் பலவிதங்களில் முட்டுக்கட்டை போட்டனர். ஆட்சி அதிகாரத்தில் ஹிந்துக்கள் பொரும்பான்மையாக இருந்தும் அவர்கள் உணர்வற்று இருந்துனர்.

ஆனாலும் ஹிந்து முன்னணியின் இடைவிடாத போராட்டங்களினாலும், அக்கோயிலின் தனியதிகாரியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ ராமலிங்கம்என்ற ஹிந்து அதிகாரின் உறுதியான மனப்பான்மையாலும் 1994-ல் அரசு பணிந்தது, அந்தக் கோவிலின் கணக்கராக இருக்கும் மாவட்டத் தலைவர் சுவாமியை விட்டு வேறெங்கும் நகரக்கூடாது என்ற சில நிபந்னைகளுடன் சுவாமி தீர்தவாரி கொடுக்க அனுமதி அளித்தது.


1984 ஜூலை 18

சுமார் 5:30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தின் மூன்றாவது பிளாட்பாரத்திற்கு கோவையில் இருந்து வந்த ரயில் நின்றது அதிலிருந்து வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு ரயில்வே மேம்பாலத்தில் ஏறும்போது கோவையைச் சேர்ந்த அல்- உம்மா பயங்கரவாதி பாஷா என்பவன் கையில் அரிவாளுடன் கோபால்ஜி பின்புறமிருந்து கழுத்தின் இடது புறம் வெட்டினான் கோபாலின் இடதுபுறம் பட்டு பலமான ரத்த காயத்தை ஏற்படுத்தியது இதோடு தொலைந்து போய் என்றும் அறுபட்டு தலையில் வெட்டி விட்டு அரிவாளை எடுத்துக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி ஓடினான்.

தெய்வத்தின் அருளால் அன்னையின் அருளால் உயிர்பிழைத்தார் வீரத்துறவி ராமகோபாலன் . இந்து முன்னணியின் வளர்ச்சியை பொறுக்காத இஸ்லாமிய பயங்கரவாதிகள் இத்தகைய படுகொலை தாக்குதலில் ஈடுபட்டு வீரத்துறவி படுகொலை செய்து விட்டால் இயக்கம் வளராது என்று நினைத்தனர் ஆனால் நடந்ததோ சரித்திர மாற்றங்கள்.

அதன் பிறகு தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன .ஹிந்து மறுமலர்ச்சி ஏற்பட காரணமாக இருந்தது. கோபால்ஜி மறுபிறவி எடுத்து ஒரு அவதாரமாக இருந்து தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து இயக்க விதைகளை விதைத்து அதை வளரச் செய்தார். அவர்களின் அந்த கொடுமையான படுகொலை முயற்சிக்குப் பிறகு உடல்நலத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்ட பொழுதும் உற்சாகம் குன்றாமல் ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்தார் வீரத்துறவி.

அன்று மதுரையில் கோபால்ஜி சிந்திய இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் இன்று ஆல மரமாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பத்மநாதபுரம் தேர்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட இந்து எழுச்சியை இந்து வாக்கு வங்கியாக இந்து முன்னணி மாற்றியதன் விளைவாக, 1984-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ,பத்மனாபபுரம் தொகுதியில் இந்து முன்னணி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் திரு. வை. பாலச்சந்தர் அவர்கள் வெற்றி பெற்றார். திரு. எம். மோகன்தாஸ் மற்றும் திரு. எம். ஆர். காந்தி ஆகியோர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

மேலும் படிக்க