1985

1985 – பெரியகுளம்

உலகத்தில் பல நாடுகள் உள்ளன. அதில் அனைத்து தேசத்திலும் தீண்டாமை உள்ளது .இந்த தீண்டாமையை போக்குவதற்காக நமது பாரத தேசத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தீண்டாமையை வேரோடு அகற்றுவதற்கு பல்வேறு முயற்சி எடுத்து உள்ளனர்.தமிழகத்தில் பெரியகுளம் அருகில் தேவதானப்பட்டியில் 1985- 1986 ஆம் ஆண்டில் இரு சமுதாயத்தில் சாதி கலவரம் ஏற்பட்டு உள்ளது.

அங்கு உள்ள இரண்டு சமுதாயத்தையும் இணைத்து இந்து முன்னணி முயற்சியால் சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் குறிப்பாக கண்டனூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, கடலூர் மாவட்டங்களில் உள்ள காட்டு மன்னார்கோயில், மதுரை அருகில் உள்ள எரம்பட்டி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட சாதி மோதல்களில் இந்து முன்னணி மூலமாக சமுதாய தலைவர்களை அழைத்து நல்ல தீர்வு கண்டது.

 

1997- 1998 தென்மாவட்டங்களில் வீரன் சுந்தரலிங்கனார் பெயரை அரசு போக்குவரத்து கழகத்தில் வைக்கப்பட்டது. அது இரு சமுதாயத்திற்கும் மோதல் ஏற்பட்ட காரணத்தால் நடந்தது . இந்த சூழ்நிலையில் இந்து முன்னணி சார்பில் சமுதாயத் தலைவர்களையும் ஆன்மீக தலைவர்களையும் அழைத்து கிராமங்களில் பல பகுதிகளில் சுற்றுப் பிரயாணம் செய்து அந்த மதமாற்றம் தடுக்கப்பட்டது.

இந்து துவக்கப்பள்ளி

1985 ஆழ்வார்திருநகரி ஒன்றியம், அறிவான்மொழி T.D.T.A. நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் விபூதி பூசக் கூடாது. குங்குமம் வைக்க கூடாது என்று தடுத்ததால் இந்த துவக்கப்பள்ளி என்யைபள்ளி இந்து மக்களும் இந்து முன்னணியும் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

1985 மாற்றத்தை ஏற்படுத்திய வெளியீடுகள்...

இயக்கம் துவக்கிய போது இந்து முன்னணி ஏன்? எதற்கு? என்ற கேள்வியை எழுப்பி முதன்முதலாக துண்டறிக்கை (நோட்டீஸ்) வெளியிடப்பட்டது.

நிதி ஆதாரம் இல்லாத அந்த காலகட்டத்தில் துண்டறிக்கை கொடுத்து 5 காசுகள், 10 காசுகள் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும் துண்டறிக்கை என்பதை மாற்றி சிறிய புத்தகங்கள் வெளியிடப்பட்டால், அதை மக்களிடம் கொண்டு செல்ல எளிதாக இருக்கும் என்பதாலும், அதன் மூலம் கிடைக்கும் தொகையில் மீண்டும் நூல்கள் வெளியிடலாம் என்பதாலும் இயக்கத்தினுடைய சுற்றுப்பயணம் செலவுகளை சமாளிக்கலாம் என்பதாலும் புத்தகங்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டது.

வெளியிடப்படும் புத்தகங்கள் அதிக விலையாக இருந்தால் மக்கள் வாங்க தயக்கம் காட்டுவார்கள் .அதிலும் நமது இலக்கு சாதாரண மக்கள். எனவே புத்தகம் சிறியதாக தொகை மிக மிக குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்து முன்னணியின் தீர்மானமாக இருந்தது .

அப்படி வெளியிடப்படும் புத்தகங்களின் தலைப்புகள் கொள்கை விளக்கமாக மட்டுமில்லாமல், மக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளிலும் இருக்க வேண்டும் என்று அவ்வாறு அமைக்கப்பட்டது.

1985-ல் அவ்வாறான புத்தகங்கள் தயார் ஆனது. உதாரணமாக எம்மதமும் சம்மதம் இல்லை எங்கள் இந்து மதமே சம்மதம் - இது 16 பக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. விலை வெறும் 25 பைசாதான். இவ்வாறு தொடர்ந்து பல வெளியீடுகள் வெளியிடப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்பட்டன. தற்போதைய காலத்தில் கூட ₹ 5,10 ரூபாய் என்ற விலையில் அதிகமாக புத்தகங்கள் வெளியிட்டு இந்து முன்னணி பெரிய சாதனை படைத்து வருகிறது.

து மக்கள் மனங்களில் தனியான ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது . வீடு தோறும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கிறிஸ்தவ- முஸ்லிம் தகிடுதத்தங்களை, போலி மதச்சார்பின்மை வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிய, மக்களுக்கு உற்சாகம் பிறக்க வைக்க இந்த பிரச்சார நூல்கள் பெரிதும் பயன்படுகிறது. இவ்வாறு நூற்றுக்கணக்கான வெளியீடுகளை இந்துமுன்னணி வெளியிட்டுள்ளது. இன்னமும் இந்து முன்னணியின் பிரச்சார நூல்கள் தொடர்ந்து வரும்.

இந்துமுன்னணி வெளியீடுகளில் சில...

  • இந்து என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து செல்லுவோம்
  • எம்மதமும் சம்மதம் இல்லை எங்கள் இந்து மதமே சம்மதம்
  • இந்துவே விழித்தெழு
  • இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?
  • முகமூடி கிழிந்த திக ஒப்பாரி வைக்கிறது
  • பாதிரி யார்? பாவி யார்?
  • கிறிஸ்தவ பாதிரிகளின் சூழ்ச்சிகள்
  • ஆரிய-திராவிட இன பேதம் கட்டுக்கதை
  • இந்துக்களின் 800 ஆண்டு கால யுத்தம்
  • ஊழலில் கரையும் கம்யூனிசம்
  • காஷ்மீரை காப்போம்
  • இந்தியாவை விழுங்கக் காத்திருக்கும் சீனா!!
  • பெருகிவரும் நக்சல் பயங்கரவாதம்
  • கருத்துரிமை கயவாளிகள்
  • இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்க வேண்டும்.
  • இந்து சமுதாயத்தின் மீது பலமுனை தாக்குதல்
  • ஹிந்துக்களுக்கு அநீதி
  • யாரடா தமிழன்
  • போலி மதச்சார்பின்மை வாதிகளுக்கு 125 கேள்விகள்
  • பாரதத்தை உலுக்கும் பயங்கரவாதம்
மேலும் படிக்க