1992 – புதுவை வேதபுரீஸ்வரர்
புதுச்சேரிக்கு பிரெஞ்சுக்காரர்கள் செய்த கொடுமை சொல்லி மாளாது. ஆனாலும் இது சித்தர்கள் பூமி, அமைதிப் பூங்கா என்று புகழப்படுகிறது. மகான் ஸ்ரீ அரவிந்தர், மகாகவி சுப்பிரமணிய பாரதி போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த பூமி. இந்து முன்னணி இயக்கம் தமிழ்நாட்டில் துவங்கப்பட்டு அதற்கடுத்ததாக துவங்கப்பட்ட மாநிலம் புதுச்சேரி என்பது பலருக்கும் நினைவில் இருக்காது. புதுச்சேரி மாநிலத்திலும் இந்து முன்னணி பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளது.
பன்னிரு திருமுறைகளில் திருஞானசம்பந்தரால் வேதவனபதிகம் என்றப் பாடல், பாடப்பெற்ற சம்போ மகாதேவ ஈஸ்வரர் கோவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் போது, கிருத்துவர்களால் இடிக்கப்பட்டு சர்ச் நடத்தப்பட்டு வந்தது.1992-ல் இதைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று மீட்கும் நோக்கத்துடன் துண்டு பிரசுரம் வினியோகித்து, உள்ளே சுயம்புவாக உள்ள சம்போ மஹாதேவ ஈஸ்வரனுக்கு கற்பூரம் ஏற்றினார்கள். செய்தி காட்டுத் தீ போல நாடு முழுவதும் பரவியது. துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. திரு. ராமவிஸ்வலிங்கம், திரு. கேசவ பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடக்கிவைத்த சிவன் கோயில் விஷயத்தை இளைய தலைமுறைக்கும் கொண்டு சென்றது, மீட்க முயற்சித்தது முதல் வெற்றி.
1992 பெண்ணே நீ மகத்தானவள்
இந்து முன்னணி பேரியக்கத்தின் பெண்கள் பிரிவு 1992ஆம் ஆண்டு நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூரில் வீரத்துறவி இராம கோபாலன் அவர்களால் துவங்கி வைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் .
இந்து முன்னணியில் மகளிர் பிரிவு என ஆரம்பக் காலத்தில் இருந்தது , அதனை வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் இந்து அன்னையர் முன்னணி என அறிமுகம் செய்து வைத்தார்.
இவ்வாறுதொடங்கப்பட்ட இந்து அன்னையர் முன்னணி பிறகு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது .
இந்து அன்னையர் முன்னணி மூலம் தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது . ஆன்மீக வளர்ச்சிக்கான பூஜைகள் மூலம் பொதுமக்கள் ஒருங்கிணைக்கப் படுகிறார்கள். பெண்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இந்துசமய கல்வியை பண்பாட்டை புகட்ட வாரம்தோறும் பண்பாட்டு வகுப்புகள் நடத்துகின்றனர்.
இதன்மூலம் தேசபக்தி தெய்வபக்தி உடைய குடும்பங்கள் உருவாகின்றன. மதமாற்றத்திற்கு எதிராக போராடும் தாய்மார்களால் மதமாற்ற கும்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.
இந்து சமுதாயத்தில் குடும்பம் முக்கியமானது .குடும்பங்கள் பெண்களை மையப்படுத்தி உள்ளது பெண்களிடம் ஏற்படும் விழிப்புணர்வு சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.