1993 - ஸ்ரீவைகுண்டம் தேர்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் பொம்மைகளை உடைத்து எடுத்து வெளி மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதை அறிந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறை வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டது. இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி. இராமகோபாலன் அவர்கள் தலைமையில் போராட்டம் அறிவித்து, கண்டன பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடத்தப்பட்டது. அதன்பின் காவல்துறை வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகளை கைது செய்தது. இது இந்து முன்னணிக்கு கிடைத்த வெற்றி.
1993 – முதல் பாடல் கேசட் நமது பிரச்சார உத்தியில் புதிய மைல்கல்லாக ஒலி நாடாக்களை தயாரிக்கும் பணியானது 1987 ஆம் ஆண்டு முதல் முதலாக ஒலிப்பேழை (கேஸட்) வெளிவந்தது. முதல் ஒலிப்பேழையானது வீரத்துறவி இராமகோபாலன் அவர்களின் சொற்பொழிவாக, பாரத தேசம் துண்டாடப்பட்ட வரலாற்றை எடுத்துக் கூறுவதாக அமைந்தது.
அதன் பிறகு பொது கூட்டங்களில் சொற்பொழிவுக்கு முன்பு ஒளிபரப்ப பாடல்கள் தேவைப்பட்டது. அப்படி போடப்படும் பாடல்கள் இந்து முன்னணியின் கொள்கை விளக்கமாக மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
முதல் பாடல் ஒலிப்பேழையாக வெளிவந்தது. அன்னையடா நம்ம பூமி என்ற அந்த பாடல் தொகுப்பை எழுதியவர் கவிஞர் சுபாஷ்.
இந்து முன்னணி பாடல்கள் எளிமையான வரிகளில் மக்கள் அன்றாடம் பேசும் பேச்சு வழக்கில் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இருந்தது. .இந்து முன்னணி எதிர்பார்க்கும் தொண்டர்கள் சாதாரண மனிதர்கள், எனவே அவர்கள் வாயில் நமது பாடல்கள் முணு முணுக்க வேண்டும் .
அப்படி உதயமான அந்த ஒலிப்பேழையில் இசை மக்களுக்கு நெருக்கமாக ரசித்த மெட்டுகளாக இருந்தால், இன்னமும் வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் சிந்தித்தனர்.
அன்னையடா நம்ம பூமி, வெறும் மண்ணும் கல்லும் இல்லை சாமி என்பது பாமரனையும் சென்றடைந்தது..
அதுபோல பழைய சினிமா பாடல் ஆன மணப்பாறை மாடு கட்டி என்ற பாடலின் மெட்டில் மதச்சார்பின்மை இல்லை என்று மாயமாலம் செய்கிறான் ... மடையனாக நினைத்துவிட்டான் சின்னத்தம்பி..என்ற பாடல் நறுக்குத் தெரித்தார் போல் வெளிவந்தது. இன்றுவரை பெரும் வரவேற்பைப் பெற்றது. அது ஒலித்தகடாக (சிடி) கொண்டுவரப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கெஞ்சனுரில் ஸ்ரீ கரியகாளியம்மன் கோயில் உள்ளது. 60 அடி குண்டம் கொண்ட இக்கோயில் கிராமங்களுக்குச் சொந்தமானது. ஊர் பிரச்சனையால் 10 ஆண்டுகள் திருவிழா நடைபெறாமல் இருந்தது. 1993ல் மாநில பொதுச்செயலாளராக இருந்த ஜெயராஜ் அவ்வூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கோயில் திருவிழாவை ஊர் பெரியவர்கள் நடத்தாவிட்டால் பொதுமக்களை இணைத்து இந்துமுன்னணி நடத்தும் என அறிவித்தார். இதன் விளைவாக ஊர் பெரியவர்கள் ஒன்று கூடிப்பேசி அந்த ஆண்டே திருவிழாவினை நடத்தினார்கள்.
1993 தடம் பதித்த 3வது மாநில மாநாடு கோவை
பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் வேரறுப்போம் என்ற முழக்கத்துடன் 1993 பிப்ரவரி 21ஆம் தேதி கோவையில் பிரம்மாண்டமான மாநாடு வஉசி மைதானத்தில் நடைபெற்றது .
இந்த மாநாடு நடைபெற்ற சூழ்நிலை மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டம் . 1992 டிசம்பர் 6 அயோத்தியில் அவமான சின்னம் அகற்றப்பட்டது. அதன் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது மூன்றாவது முறையாக தடை விதிக்கப்பட்டது .
இந்தச் சூழ்நிலையில் இந்த மாநாட்டை நடத்த முடியுமா? என்று பல விதமான யோசனைகள் இருந்தது.
மாநாட்டை தள்ளி வைத்து விடலாம் என்று கூட பலரும் யோசனைகள் தெரிவித்தனர்./p>
எந்த சூழ்நிலையிலும் மாநாட்டை தள்ளி வைக்கவோ, ரத்து செய்யவோ கூடாது என்று மாநாட்டை நடத்தியே தீரவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார் வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் .
மாநாட்டிற்கு ஐந்து விதமான கடவுள் படங்களுடன் பயங்கரவாதத்தையும், பிரிவினை வாதத்தையும் வேரறுப்போம் என்ற வாசகங்களுடன் நரசிம்ம அவதாரம் இரண்யகசிபுவை வதம் செய்வது போலவும், காளிங்க நர்தன ஸ்ரீ கிருஷ்ணர் படம் என்று பலவிதமான சுவரொட்டிகள் தமிழகத்தின் சுவர்களை அலங்கரித்தன.
மாநாட்டு மேடையின் மேல் முகப்பில் அயோத்தி இன்று நாளை என்ற வார்த்தைகளுடன் ராமரின் தற்போதைய படமும், கட்டப்பட போகும் புதிய கோவிலின் மாதிரி புகைப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டன.
மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு . கோவை புலியகுளம் பகுதியில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து வஉசி பூங்காவில் நிறைவு பெற்றது.
மாநாட்டில் மத்திய பிரதேச முதல்வர் ஸ்ரீ சுந்தர் லால் பட்வா அவர்களும் மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ஸ்தாபகர் மதிப்பிற்குரிய தத்தோபந்த் தெங்கடி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த மாநாடு பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கு துணை போகிறவர்களை மிரளச் செய்யும் விதமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது.