1994

1994 தி.க.காவிக் கொடி எரிப்பு

தி.க. சார்பில் காவிக் கொடி எரிப்புப் போராட்டம் அறிவிப்பு தடை செய்ய காவல் துறையினரிடம் புகார் நடவடிக்கை எடுக்க இயலாது என காவல்துறையினர் கைவிரிப்பு. இந்து முன்னணி சார்பில் திராவிடர் கழகக் கொடி, ஈ.வே.ரா. மணியம்மை ஆகியோர் உருவப்பட எரிப்பு போராட்டம் என இந்து முன்னணி அறிவிப்பு. தடையை மீறி நடந்த இந்த போராட்டத்தில் இந்து முன்னணிக்கு வெற்றி கிடைத்தது.

1994 காயல்பட்டினத்தில் முஸ்லிம் பகுதியில் மேற்கு பார்த்த சிவாலயம் உள்ளது. அந்த சிவாலயம் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது. சிவாலயம் சுற்றி உள்ள இடங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் அளுக்குளி தொம்பர் காலனியில் 400 கழைக்கூத்தாடி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கிறிஸ்தவ மத போதகர்கள் பல ஆசை வார்த்தைகளை கூறி மதம் மாற்ற முயற்சி மேற்கொண்டனர். இதை அப்பகுதியில் 9, 10- வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மத போதகர்களை விரட்டியடித்தனர்.

மீண்டும் குள்ளநரிக்கூட்டம் மெதுவாக பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறோம் என ஊடுருவ முயன்றனர். ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில் பாரதமாதா மாலை நேர இலவச பாடப்பயிற்சி மையம் ஒன்றுக்கு இரண்டாக நிறுவினார்கள்.

 

மறுபடியும் குள்ளநரிக்கூட்டம் தனது வேலையைத் தொடங்கியது. மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூல் பேக் தருகிறோம் என்று மாணவர் படை பள்ளிக்குச் சென்ற சமயத்தில் கொடுத்துவிட்டுச் சென்றனர். உடனே மாணவர் படை வெகுண்டு எழுந்து தனு என்னும் நல் உள்ளம் படைத்தவர் மூலம் அனைவருக்கும் வேறு ஸ்கூல் பேக்,நோட்டு ,பேனா,பென்சில் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தனர்.

1994 -சிவராத்திரியில் பக்தி சக்தியானது

காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை புறநகர் பகுதிகளில் எண்ணற்ற சிவ ஆலயங்கள் விளக்கு இன்றி , வழிபாடு இன்றி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கிச் சிரழிந்துகொண்டிருந்தன . பல கோயில் நிலங்கள் , கட்டிடங்கள் சர்ச்களாகவும், மசூதிகளாகவும் முளைத்து நின்றன. மக்களை கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தவும் , கோயில் சொத்துக்களை ஆக்கிமிரப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக 1993 மார்ச் மாதம் மகா சிவராத்திரி அன்று கன்னியாகுமரியில் நடைபெறுவது போன்று சிவாலய ஓட்டம் நடத்துவது தீர்மானிக்கப்பட்டது.

திரிசூலம் கோயிலிருந்து துவங்கி ஐந்து சிவ ஜோதிகளை எடுத்துக்கொண்டு இளைஞர்கள் ஓட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புக் குள்ளாகியிருந்த சிவன் கோயில்களுக்கெல்லாம் சென்று தரிசனம் செய்து , அங்கிருந்த பக்தர்களிடம் கோயில் சிறப்பு , சிவன் சொத்துகள் குறித்த விபரங்கள் அடங்கிய துண்டறிக்கையை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர் இந்துமுன்னணியினர். இந்து கலை இலக்கிய முன்னணி சார்பில் சிவராத்திரி கலை விழா விடிய விடிய நடைபெற்றது . ஒவ்வொரு கோயில் வாசலிலும் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது .

ஒவ்வொரு கோயிலிலும் ஓடி வரும் இளைஞர்களை வரவேற்கவும், திருவிளக்குப் பூஜை , நிகழ்ச்சி , பஜனை , சமய சொற்பொழிவு போன்றவை ஒவ்வொரு கோயிலிலும் நடத்தப்பட்டது . இதன் மூலம் இந்துக் குடும்பங்களை ஒருங்கிணைத்து பக்தியுடையவர்களை, சக்தியுடையவர்களாக இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க