1995 - தனுஷ்கோடி 1
தமிழகத்தில் ஆன்மீகம் மேலோங்க வேண்டும். தமிழகம் செழிப்புற வேண்டும் என்ற நோக்கோடு 1995-ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் ஒரு கோடி ராமநாம ஜப வேள்வியும், அதையொட்டி மாநாடும் நடைபெற்றது. அத்த மரத்தாலான ஆஞ்சநேயர் சிலை தனுஷ்கோடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. தனுஷ்கோடி செல்லும் சாலைகள் அனைத்தும் மண் மூடி, பயணிக்க உகந்ததாக இல்லை. அன்றைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றது இயக்கம்.
அதிகாரிகள் மணலை அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை என்று கூற முதலமைச்சர் ஜெயலலிதா இல்லை எப்படியாவது அகற்றுங்கள் என்று உத்தரவிட வேறு வழியின்றி அதிகாரிகள் அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்து கொடுக்க இனிதே நடைபெற்றது மாநாடு.
1995 - தனுஷ்கோடி 1995 மார்ச் 19 அன்று தனுஷ்கோடியில் ராம நாம ஜப வேள்வியில் பூஜை மூர்த்தியாக இருந்து அருள் பாலித்த ஐந்தடி அத்திமர ஆஞ்சநேயர் திரு உருவத்துடன் ஸ்ரீ கோபால் அவர்கள் தமிழகம் முழுவதும் யாத்திரை புறப்பட்டார். 1995 இல் நங்கநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ராஜகோபுரம் கட்டும் இடத்தை திமுகவினர் ஆக்கிரமித்து இரண்டு மாடிக் கட்டிடம் கட்டியது போராடி இடித்து மீட்டது.