1996 டிசம்பர் 6 – காவிக் கொடி ஆர்பாட்டம்
டிசம்பர் 6ம் தேதியை கருப்பு நாள் என்று சொல்லி பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.க.வினரைக் கண்டித்து டிசம்பர்-6 வெற்றித் திருநாள் என்று அறிவித்து நடத்தியது இந்து முன்னணி.
தமிழகம் முழுவதும் தி.க.வின் மோசடித் தனத்தை தோலுரித்துக் காட்டியது இந்து முன்னணி தான். நமது தெய்வங்களை கொச்சைப்படித்தி எழுதிய வாசகங்களுக்கு தக்க வகையில் நாம் பதிலடி கொடுத்தோம்.தமிழகம் முழுவதும் அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க கோரி காவிக் கொடி ஆர்பாட்டம் நடக்கத் துவங்கியது
1996 - திருத்தணி
1996இல் திருத்தணி முருகன் கோயில் இருக்கும் மலையின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள்
பச்சைக்கொடி கட்டி தர்கா என அறிவித்ததை புகார் கொடுத்தும் அரசியல்வாதிகளும்
காவல்துறையும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்துக்களை திரட்டி போராட்டத்தில்
இறங்கி அப்புறப்படுத்தி புனிதம் காக்கப்பட்டது.
1996இல் திருத்தணி முருகன் மலை மீது, கிறிஸ்தவர்கள் சிலுவை நட்டு சர்ச் கட்ட சதி செய்தனர். திருவள்ளூரில் இருந்து பாதயாத்திரையாக மக்களை திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி கிறிஸ்தவசதிமுறியடிக்கப்பட்டது.
1996 பசுக்கொலை கூடம் தடுக்கப்பட்டது..
1996 இல் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கணபதி பாளையம் என்ற இடத்தில் கொரியன் நாட்டுடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து பசுக்கொலைக்கூடம் துவக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் கொலைக்கூடத்தில் தினசரி 1000 பசு மாடுகளை இயந்திரம் மூலம் கொன்று அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 100 கோடி அளவில் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கோவை, பொள்ளாச்சி மாவட்டங்களில் கிராமம் கிராமமாக பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் எழுச்சி மாபெரும் எதிர்ப்பலையாக உருவானது. இந்து முன்னணியின் பிரச்சாரத்தால் ஏற்பட்ட மக்களின் எழுச்சியால் அரசின் மீது வெறுப்பு, எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு அந்த கொலைக்கூடத்தை கைவிட்டது.