1998

1988 - தமிழில் அர்ச்சனை

தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது இந்து ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை போட்டார். கோயில் சுவர்களில் எல்லாம் போர்டு வைக்க உத்தரவிடப்பட்டது.இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக ஒரு குழுவை இந்து சமய அறநிலையத்துறை அமைத்து ஆயிரத்து எட்டு போற்றிகளை வெளியிட்டது. அப்போது அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர் தமிழ்குடிமகன்.அதன் முதல் நிகழ்ச்சியாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சி பற்றி அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளிவந்தன. தமிழ் அர்ச்சனை என்ற பெயரில் கலைஞரே போற்றி ( 642 வது போற்றி) தமிழ் குடி மகனே போற்றி ( 677) கடமை, கண்ணியம் தந்தாய் போற்றி ( 679) என பல வகையிலும் திராவிட கொள்கைகளை திணித்து தமிழ் அர்ச்சனை என்ற பெயரில் நடைபெற்றது தெரியவந்தது

உடனடியாக களத்தில் இறங்கியது இந்து முன்னணி அன்று பிரதோஷம் திமுக அரசின் அத்துமீறல்களை கண்டனம் செய்து இறைவனிடம் முறையிட்டு ஒரு துண்டறிக்கை உடனடியாக தயாரிக்கப்பட்டது இதனை எடுத்துக் கொண்டு இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்கள் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று பிரதோஷத்திற்கு வந்திருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களிடம் வினியோகிக்கப்பட்டது.சுவாமி புறப்பாடு முடிந்த பின்னர் கோயிலை காக்கும் சண்டிகேஸ்வரர் சன்னதி முன்பு மக்களை ஒன்று திரட்டி அவர் முன் பிரார்த்தனை வாசிக்கப்பட்டது. அதில் ஈஸ்வரனின் தீவிர பக்தரே, சிவன் கோயிலை காப்பவரே, நீங்கள் ஈசனை அவமதித்த உங்கள் தந்தையை தண்டித்தவரே.

இந்தக் கோயிலில் தமிழ் அர்ச்சனை என்ற பெயரில் அக்கிரமம் நடந்துள்ளது தங்களைத்தாங்களே தொற்றிக்கொள்ள இறைவழிபாட்டில் புகுத்தி உள்ளனர். இவர்களை நீங்கள் தான் தண்டிக்க வேண்டும் இது உன்னை வணங்கும் இந்துக்கள் ஆகிய எங்களது கோரிக்கை.

 

ஏற்பீர் தண்டனை அளிப்பீர் எல்லோரும் ஓம் என முழங்கினர் இவையெல்லாம் 20 நிமிடத்திற்குள் முடிந்துவிட்டது. கோவில் அதிகாரிகளுக்குத் தெரிவதற்குள் பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகளுக்குத் தெரிந்து அரசிற்கு சென்றது செய்தி.உடனடியாக அந்த தமிழ் அர்ச்சனை கையெழுத்து திரும்ப பெறப்பட்டது. ஆனால், அடுத்த பிரதோஷத்தின் போதும் உளவுத்துறை இந்து முன்னணி போராட்டம் நடத்துமோ என மோப்பம் பிடித்துக் கொண்டிருந்ததுதான் வேடிக்கை.

1998 பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி - தர்மவீரர்
தமிழகத்தில் 1.5 லட்சம் கிறிஸ்தவ ஆண், பெண் பாதிரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக மாவட்டம்தோறும் 35 ற்கும் மேற்பட்ட இறையியல் கல்லூரிகள் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படுகின்றன.அதேபோன்ற பல பயிற்சி கல்லூரிகள் முஸ்லிம்களுக்கும் உள்ளன . கிறிஸ்தவ ,முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஏற்பாடுகள் உள்ளன. அவர்கள் நடத்துகின்ற பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் பைபிள், குர்ஆன் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இவர்கள் நிறுவனங்களில் படிக்கும் இந்து குழந்தைகளையும் மூளைச்சலவை செய்து மதம் மாற்றுகின்றனர் . ஆனால் இந்துக்களுக்கு சமயம் பற்றிய அடிப்படை விஷயங்களை கற்றுத் தர ஏற்பாடு இல்லை . தர்ம வீரர்தியாகமும் தொண்டும் தான் இந்து பண்பாட்டின் அடிப்படை தத்துவங்கள். அடித்தள கற்கள். இதை வாழ்ந்து காட்டுகிறவர்கள் முன்னுதாரணமாக இருக்க முடியும் .அப்படி இருந்தால்தான் சமயப்பணிகள் சரியாக நடக்கும் . அந்த அடிப்படையில் தர்ம வீரர்கள் என்று சொல்லப்படுகின்ற தன்னலமற்ற இளைஞர்களை உருவாக்கும் பணி துவங்குவதற்கு திட்டமிடப்பட்டது.

தர்மவீரர் என்பவர் 5 கிராமங்களுக்கு பொறுப்பேற்று விளக்கு எரியாத கோயில்களில் விளக்கேற்றி, உழவாரப்பணி செய்து, குழந்தைகளுக்கு ஆன்மீகம் பஜனை கதைகள் சொல்வது ,கூட்டு வழிபாடு நடத்துவது ,இலவச டியூஷன் நடத்துவது போன்றவைகளை ஏற்பாடு செய்வார். மேலும் அப்பகுதியில் உள்ள மருத்துவரை அணுகி ஏழைகளுக்கு மருத்துவ வசதி செய்விப்பது என இந்த வேலைகளை செய்வார்கள்.

அத்தகைய தர்ம வீரர்களுக்கு பயிற்சி எடுப்பதற்கு ஓர் இடம் தேவை என்று கோபால்ஜி ஆசைப்பட்டார் . தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் இதற்கு ஒரு கல்லூரி கட்ட வேண்டும் என்று நினைத்தார் . 1998இல் வீரத்துறவியின் 70வது வயது நிறைவு நிகழ்வை மையமாகக் கொண்டு கல்லூரியின் திட்டம் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அதற்கான பங்களிப்பிற்கு மக்கள் முன்வர வேண்டும் என்று கிராமங்கள்தோறும் சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது . உறையூரில் இருந்து குழுமணி செல்லும் சாலையில் சீராத்தோப்பு கிராமத்தில் 4.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பூமி பூஜை நடந்து கட்டடப் பணிகள் துவங்கியது. அதே காலகட்டத்தில் இந்த தர்ம வீரர்களுக்கான பயிற்சி விரைந்து துவக்கப்பட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டு 1999 ஆம் ஆண்டு முதல் தர்ம வீரர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கியது . மூன்று மாத தொடர் பயிற்சி, பிறகு மூன்று மாத களப்பணி என்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த பயிற்சி முகாம்களில் 25 பேர் பங்கேற்றனர்.

பயிற்சி முடித்த அவர்கள் அனைவரும் 25 பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு தர்மவீரர் பிரச்சாரப் பணியை மேற்கொண்டனர் . தொடர்ந்து ஆண்டுதோறும் இத்தகைய பணிகள் தர்மவீரர் உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க