2000 மீட்கப்பட்ட எருமாடு

2000 மீட்கப்பட்ட எருமாடு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகாமையில் உள்ளது எருமாடு. இங்கு பிரசித்தி பெற்ற சிவ ஆலயம் இருக்கிறது . முஸ்லீம்களுக்கென தனி சுடுகாடு இருந்தபோதிலும் .1982 ஆம் ஆண்டில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திட்டமிட்ட ரீதியில் சில முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து அகமது குட்டி என்கிற முஸ்லிமின் பிணத்தை கோவில் இடத்தில் புதைக்கின்றனர்.

இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது .கோவில் கமிட்டியினர் அரசியல் கட்சிகளுக்கு கோவில் பிரச்சினையை தீர்க்க அழைப்பு விடுத்தனர். எந்த கட்சிகளும் முன்வராத நிலையில் இந்து முன்னணி களமிறங்கியது .

1984 ஆம் ஆண்டு அன்றைய மாநிலத் தலைவர் அய்யா தாணுலிங்க நாடார் பிரச்சினைக்குரிய இடத்தை ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்தார் .

அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன போஸ்டர்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன .

இந்த அநீதியான செயலை முறியடிக்க 1983 ஆம் ஆண்டு 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் ஞானரத யாத்திரை இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எருமாடு சிவன் கோவில் செல்லும் வழியில் மசூதி இருப்பதால் எருமாடு பகுதிக்கு ரதத்தை வரவிடாமல் போலீஸ் தடுத்து நிறுத்தியது.

 

இதனை எதிர்த்து இந்து முன்னணி , ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் இந்து மக்களை ஒன்றிணைத்து 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி ரதத்தை எருமாடு சிவன் கோவிலுக்கு கொண்டு வரச்செய்து மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்தினர்.

இதன் காரணமாக 57 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் பல்வேறு சமயங்களில் அந்தப் பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார் .

1994 வீரத்துறவி இராம.கோபாலன் கோவிலுக்கு அருகில் கட்டப்பட்டுள்ள மதில்சுவர் அவமான சின்னம் என வலியுறுத்தி சென்றார். ஹிந்து மக்கள் அந்த அவமான சின்னத்தை அகற்றினர் .

இத்தகைய தொடர் போராட்டத்தின் காரணமாக 2000 ஆம் ஆண்டு கோவிலுக்குச் சொந்தமான 42 சென்ட் இடத்தை அப்போதைய மாவட்ட ஆட்சியர் அளந்து ஒதுக்கீடு செய்து கோவிலுக்குச் சொந்தம் ஆக்கினார்.

இஸ்லாமியர்களின் சுடுகாடு இருக்கின்ற பகுதியில் அரசு மதில் சுவர் கட்டி கோவில் நிலத்தை ஆக்கிரமிக்காத வண்ணம் தடுத்து நிறுத்தியது.

இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இந்துமுன்னணி வளர்ந்து வலுவடையத் தொடங்கியது.

அசோக் நகர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்

12 அடி உயரமுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் விக்ரஹம் ஒரு தனி நபரால் தனியாருக்குச் சொந்தமான வீட்டில் வைத்து வியாபார நோக்கில் கோவிலாக நடத்தப்பட்டு கொண்டிருந்தது.

அந்த இடத்தின் உரிமையாளருக்கும், விக்ரகத்தை வைத்தவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது .

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று தீர்ப்பு நிலத்தின் சொந்தக்காரருக்கு சாதகமாக வந்தது .

அதன் விளைவாக ஆஞ்சநேயர் விக்ரஹம் நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டு தற்போது உள்ள இடத்தில் கிடத்தப்பட்டது.

இதை அறிந்த இந்து முன்னணி தொண்டர்கள் வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின் வழிகாட்டுதலுடன் அங்கு திரண்டனர் .

அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் திரு .நடேசன் பால்ராஜ் அவர்களை அனுப்பி வைத்தார்.

அங்கு திரண்டிருந்த இந்துமுன்னணி தொண்டர்களும், அந்த பகுதி மக்களும் அதே இடத்தில் சுவாமியை பிரதிஷ்டை செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.

அதை ஏற்று தற்போது கோவில் இருக்கும் இடத்தில் 12 அடி உயர ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் .

96 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயருக்கு 2000ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி பக்தர்கள் பொருள் உதவியுடன் கோவில் கட்டிமுடிக்கப்பட்டது. கும்பாபிஷேகமும் நடைபெற்றது .

இந்த கோவில் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமில்லாமல் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று சொல்லி வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் ஒரு அறக்கட்டளையை துவங்கினார்.

அந்த அறக்கட்டளைக்கு அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபா என்று பெயரிடப்பட்டது.


  • அன்னதானம்,
  • மாலை நேர இலவசக்கல்வி, கல்வி உதவிகள்,
  • குடிசை பகுதிகளுக்கான பகுதிநேர,
  • மாலை நேர இலவச டியூஷன் வகுப்புகள்,
  • பண்பாட்டு வகுப்புகள் ,
  • ஏழை பெண்களுக்கான தையல் வகுப்பு,
  • ரத்த தானம் மற்றும் ரத்த தான விழிப்புணர்வு,
  • நூலகம்,
  • சிரஞ்சீவி மருத்துவமனை என்ற பெயரில் இலவச மருத்துவ முகாம்கள் ,
  • நீர் மோர் பந்தல் ,
  • தொட்டில் தூளி எனப்படுகின்ற ஆஞ்சநேயருடைய பிரசாத வேஷ்டிகள் குழந்தைகளுக்கு தூளி
  • கட்டுவதற்காக கொடுக்கப்படுகின்ற பிரசாதம்.

என மக்கள் சேவைப் பணிகளிலும் அசோக் நகர் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.

மேலும் படிக்க