2002 - திருப்பூர் 85 பேர் கைது
சிறைக் கம்பிகளை ஏணிப்படிகளாக மாற்றிய இந்து முன்னணி 2002 கலவரவழக்குகள் இந்து முன்னணி பிரம்மாண்ட இயக்கமாக கோவை கோட்டத்தில் உருவெடுப்பதற்க்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. ஆம்! சுமார் 85 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஜாமினில் விடுதலையாகவதற்கு 60 நாட்கள் ஆகின. ஜாமினில் வெளிவந்த உடனேயே இதற்கெல்லாம் காரணமாக கம்யூனிஸ்ட்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. வழக்கு உள்ள யாரும் திருப்பூரிலிருந்து வேலை செய்ய முடியாத நிலைமை, கண்டிஷன் பெயிலில் சேலம், திண்டுக்கல் ஆகிய ஊர்களில் தங்கி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டிருந்தது.
கம்யூனிஸ்ட் வளர்ந்த நாடுகளில் தொழில் வளரவில்லை, தொழில் வளர்ந்த நாடுகளில் கம்னியூஸ்ட் வளரவில்லை என்பதை மையமாக வைத்து தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது கம்யூனிஸ்ட்களை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு திருப்பூர் நகர் முழுவதும் தத்துவார்த்த ரீதியான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட்களின் தொழில் விரோத நடவடிக்கையில் கார்ட்டூன்கள் மூலமாகவும், வரைபடம் மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் நகர் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை கம்யூனிஸ்ட்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். இந்த நிலையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள குலாலர் திருமண மண்டபத்தில் இரண்டு நாள் நடத்தப்பட்டது.
இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை திருப்பூர் டவுன்ஹாலில் அந்த கருத்தரங்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாகிகள் யாருமே ஊரில் இல்லை. இப்போது தான் 100க்கும் அதிகமானோர் மீது வழக்கு, யார் வருவார்கள் இந்து முன்னணி கூட்டத்திற்கு என்று எதிர்ப்பாளர்கள் தைரியத்தோடு இருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு, ஏற்கனவே இரவு பகல் பாராமல் சிலர் ஒவ்வொரு கிளைகளாக சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிக்கு அத்தனை இந்துமுன்னணி தொண்டர்களையும் 100% வரவைத்து விட வேண்டுமென திட்டமிட்டு வேலை செய்திருந்தனர்.
இதன் காரணமாக நிகழ்ச்சி துவங்கும் 10 நிமிடம் முன்பாகவே, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் டவுன்ஹால் மைதானத்தில் தேச பக்தி கோஷங்களை எழுப்பியபடி குவியத் துவங்கினர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்ததால் டவுன்ஹால் அரங்கம் நிரம்பி வழிந்தது
இந்த நிகழ்ச்சி திருப்பூர் இந்து முன்னணி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இதன்பிறகு அமைப்புரீதியான வேலைகள் பலப்படுத்த வேண்டும் என்று காலத்திற்குத் தகுந்தாற்போல் திட்டமிட்டு வேலைகள் வேகம் எடுக்கத் தொடங்கின.
இதுவரை திருப்பூரில் உள்ள காவல் நிலையங்களில் பழைய ஆவணங்களை எடுத்துப்பார்த்தால் கம்யூனிஸ்ட் இந்து முன்னணி மோதல் என நூற்றுக்கணக்கான வழக்குகள்
பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியும். இவ்வளவு வழக்குகளையும் மீறி இந்து முன்னணி இயக்கம் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பது நமக்கு பல ஆச்சரியங்களை தரும்.
2002 - ஹிந்து என்றால் திருடன்
2002 தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று கூறியதை கண்டித்து, அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். சித்தபிரமை பிடித்த அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் பூஜை செய்து அவருக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பரபரப்பை உருவாக்கிய இந்த பிரார்த்தனை போராட்டம், மறைந்த கோ.சி. மணி, சின்னக்குத்தூசி போன்ற எழுத்தாளர்களையும் நமது போராட்டம் குறித்து பேசவும் எழுதவும் வைத்தது.