2006 - ராணுவ நிலத்தில் தர்கா
2006 இல் மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரி எதிரில் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தில் முஸ்லிம்கள் தர்கா கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தப்பட்டது.
2006 - குமார் பாண்டி கொலை
அருள்மிகு சங்கரநாராயண திருக்கோவில் வடக்கு மாடவீதியில் நகராட்சியின் சார்பாக கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது. இதன் கழிவுநீர் திருக்கோயில் தெப்பத்தில் விழுவது மாதிரி செய்து விட்டார்கள். நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 18. 10. 2006 ஒரு நாள் உண்ணாவிரதம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். நகராட்சி சார்பில் கழிப்பறையை பூட்டி சீல் வைத்தார்கள். அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் கோபுரம் கட்டி நீண்ட நாட்களாக வருஷாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. திரு. கோபால்ஜி தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
சுவாமி அகிலா நந்தா தலைமையில் முக்கிய பிரமுகர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு அம்மன் சன்னதி மெயின் கேட் திறந்து விடப்பட்டது.