2010

2010 சமநீதி சம உரிமை சம வாய்ப்பு மாநில மாநாடு- கரூர்

2010 ஜூன் 20 இந்து முன்னணி பேரியக்கத்தின் 6 வது மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் இந்துக்கள் வஞ்சிக்கப் படுகின்றனர். இரண்டாம் தரக் குடிமக்களாக கூட அவர்கள் மதிக்கப்படுவதில்லை.அவர்களுக்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் எவ்வித ஆதரவும் தருவதில்லை. அவர்களுடைய சலுகைகளும், உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.

எனவே இந்துக்களுக்கு சமநீதி, சம உரிமை, சம வாய்ப்பு வேண்டும் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத பொறுப்பாளர் திரு ஸ்ரீபதி சாஸ்திரி அவர்கள் கலந்து கொண்டார்கள். கரூர் மாநாட்டின் பேரணி துவங்கி மிகப் பெரும் ஆரவாரத்துடன் பலவித அலங்கார ஊர்திகள் ,பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், கொடி அணிவகுப்பு வெள்ளை நிறச் சீருடையோடு வர அதனை அடுத்து ராணுவ உடை போன்ற சீருடையோடு தொண்டர் அணி வகுப்பு வந்தது.

 

அதன் பின்னர் தாய்மார்கள், மாவட்ட வாரியான அணிவகுப்பு என பிரமிக்க வைக்கும் கூட்டத்தோடு பேரணி நடந்து மைதானத்திற்குள் நுழைய ஆரம்பித்தது.

நல்லவர்கள் இறைவன் சோதிப்பான் என்பதற்கிணங்க பேரணி மாநாட்டு மைதானத்திற்குள் நுழைந்ததும் பெய்ய ஆரம்பித்த மழை அரை மணி நேரம் மைதானத்தை புரட்டி எடுத்தது . இடர்கள் எம்மை இரும்பென ஆக்கும் என்ற பாடலைப் பாடுகின்ற இரும்பை ஒத்த இந்து முன்னணி தொண்டர்கள் வெல்லக் கட்டிகளா கரைந்து போக?

அடாத மழையிலும் கலையாமல் மாநாடு சிறப்புற நடைபெற்றது. தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்துமுன்னணி வடிவெடுத்தது.

2010 - தலித் பகுதிக்கு வருகை


63 ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் சாலை வசதி புறக்கணிப்பு. கோவில்பட்டி தாலுகா, கயத்தாறு ஒன்றியம், குருமலை ஊராட்சி பகுதியில் கீழ்ப்பாறைபட்டி, மேலப்பாறைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊர் மிகவும் கரிசல் பூமி, மழை பெய்தால் எந்தவித வாகனமும் செல்ல முடியாது. நோய்வாய்ப்பட்டவர்களும், கர்ப்பிணி பெண்களும் மருத்துவமனை செல்ல முடியாது.

அதனால் பல உயிர் பலியாகி உள்ளது. மொத்த வீடுகள் 80. இந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எந்த அரசும், சாதி தலைவர்களும், சாலை வசதிக்கு ஏற்பாடு செய்யவில்லை. அந்த பகுதியைச் சேர்ந்த சரவணன், கிருஷ்ணன் இருவரும் இந்து முன்னணியிடம் தொடர்பு கொண்டு எங்கள் ஊருக்கு சாலை வசதி வேண்டும். நாங்கள் இந்து முன்னணியுடன் இணைந்து போராட தயார் என்றனர். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களும் அந்த ஊருக்கு சென்றோம். 21.08.2010 அந்த ஊரில் அனைத்து கிராமத்திலும், வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டப்பட்டது. 23.08.2010- ல் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை. 30.08.2010 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அப்போது இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பிரகாஷ் அவர்களிடம் ஒப்படைக்க சென்றோம்.

அவர் வாங்க மறுத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை தூக்கி வீசி எறிந்து தர்ணா போராட்டம் நடத்தினோம். பின் 20.09.2010-ல் சென்னை தலைமை செயலகத்தில் ஊரக துறை வளர்ச்சி முதன்மை செயலாளரை நேரில் பார்த்து மனு கொடுத்தோம். அதன்பின் 2.266 கிலோமீட்டர் தார் சாலை அமைக்க அரசு 50.40 லட்சம் டெண்டரில் இருந்து 44.10லட்சம் வரை டெண்டர் விடப்பட்டது. குருமலை, சுந்தரபுரம் மேலபாறைப்பட்டி கீழபாறைப்பட்டி வரை சாலை போடப்பட்டது. கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் திடல் மனிதநேய மக்கள் கட்சி வைத்த கொடிக் கம்பத்தை இந்து முன்னணி போராட்டத்தின் விளைவாக காவல்துறையால் அகற்றப்பட்டது.

12/2015 செண்பகவள்ளி அம்மன் கோவில் தேர் தகர கூரைகள் காற்றில் கீழே விழும் நிலையில், கோவில் நிர்வாகம் கவனிக்காமல் இருந்தது. காற்றில் கீழே விழுந்தால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் .ஆகவே கோவில் நிர்வாகத்திடமும், வட்டாட்சியர் இடமும் முறையிட்டு உடனே பழுது பார்க்கப்பட்டது.

2010 - மன்மத அம்பு


நடிகர் கமலஹாசன் நடித்த திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களால் இயக்கி, உதயநிதி ஸ்டாலின் அவர்களால் தயாரிக்கப்பட்டு வெளிவந்த மன்மத அம்பு என்கிற படத்தின் பாடல் வெளியீடு செய்யப்பட்டது.

அதில் ஒரு பாடல் மிக மோசமாக நமது தெய்வமான ஸ்ரீ ரங்கநாதரை பற்றி சித்தரிக்கும் வகையில் இடம் பெற்று இருக்கிறது என நமது நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. உடன் பாடலை கேட்டோம் அந்தப் பாடலில் பள்ளி கொண்டு எப்போதும் தூங்கி கொண்டு இருக்கும் பெருமான் ரங்கநாதன் அவர் மனைவியான வரலக்ஷ்மி தேவிக்கு தாம்பத்திய சுகம் அளிக்கவில்லையே என்கிற பொருள்படும் வரிகள் அந்த பாடலில் வருவதை அறிந்தோம். உடன் நடிகரிடம் நமது எதிர்ப்பை பதிவு செய்தோம்.

படத்தின் இயக்குனர் திரு கே.எஸ் ரவிக்குமார் அவர்களிடமும் நமது எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு வந்தோம். அவர் இந்த பாடலை எழுதிய நடிகர் கமல்ஹாசனிடம் இது சம்பந்தமாக பேசுகிறேன். பிறகு பதில் சொல்கிறேன் என்றும் கூறினார்.

ஆனால் இதே பட பாடல் கேரளாவில் வெளியீடு செய்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் இந்தப் பாடலை நீக்க சில இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து இருக்கின்றன. ஆனால் நான் பாடுவேன், நீக்கப் போவதில்லை என்றும் கூறியதாக செய்திகள் வந்தன. படம் வெளிவர இருக்கும் நாள் டிசம்பர் 23, 2010 தேதி குறிக்கப்பட்டு விட்டது. இனி நாம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என முடிவு செய்து, டிசம்பர் 20ஆம் தேதி கமலஹாசன் வீட்டை முற்றுகையிட முடிவு செய்தோம்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் வீட்டிற்கு முன்பாக மாலை 4.00 மணிக்கு ஒன்று கூடினோம். ஆர்ப்பாட்டத்தை துவங்க இருக்கும் நேரத்தில் கமலஹாசன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும், யாராவது இருவர் வாருங்கள் என அவர் வீட்டிலிருந்து ஒருவர் வந்து கூறினார். இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இருவர் சென்று பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள முடிவு செய்தோம். பேச்சுவார்த்தையில் கமல் மற்றும் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கமல் பேசும்போது நான் நாத்திகவாதி. ஆகையால் இப்படி பாடல் எழுதி படம் எடுக்கிறேன் என்று சொன்னார். நாம் சொன்னோம் உங்கள் படத்தை பார்ப்பவர்கள் பெரும்பாலும் ஆத்திகவாதிகள். ஆகவே அவர்கள் உணர்வு புண்பட கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் எனக் கூறினோம். பாடலை நீக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். இந்த படம் வெற்றியடைய மக்கள் தியேட்டருக்கு வர வேண்டும் அவர்களை வரவிடாமல் தடுக்கும் சக்தி எங்களிடம் இருக்கிறது அதை செய்வோம் என்று கூறினோம். பிறகு ரவிக்குமார் அவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு அந்த பாடலை நீக்குவதாக எங்களிடம் கூறினார். ஒன்றுபட்ட இந்து சக்திக்கு வெற்றி நிச்சயம்.

2010 - வாலாஜா தேர்


கடந்த 2010ல் சமூக விரோதிகளால் கொளுத்தப்பட்ட வாலாஜா தேர் இந்து முன்னணி முயற்சியினால் ஒரு கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வீதி உலா வருகிறது.

மேலும் படிக்க