கடலூர்
கடலூர் மாவட்டம் முழுவதும் இயேசுவே இந்தியாவையும், தமிழ்நாட்டையும் ஆசீர்வதியும் என்று பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டது. இந்து முன்னணி சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது. அது அவர்களின் பிரார்த்தனை, இதில் என்ன தவறு என்று மாவட்ட நிர்வாகம் நமது புகாரை தட்டிக் கழித்தது.
பதிலுக்கு நாமும் பேனர் வைத்து அதில் சிவபெருமானே ஜெருசலத்தையும், ரோமையும், வாடிகனையும் ஆசீர்வதியும் என்று எழுதி இருந்தது. அடுத்த நாள் கடலூர் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டது
2014 மகாபலிபுரம்
அருள்மிகு ஜல சயன பெருமாள் கோயிலை தொல்பொருள் ஆராய்ச்சியினர்
கையகப்படுத்தியதை கண்டித்து, வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் தலைமையில் போராடி
மீட்கப்பட்டது.
வேடசந்தூர்
ரூபாய் 3 1/2 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளில் இருந்து
காப்பாற்றிய ஹிந்து முன்னணி அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்
கோட்டை விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள 80 சென்ட்
நிலத்தை, அரபு அவுலியா தர்காவை சேர்ந்த முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு, 2014
ஆம் ஆண்டு கோவில் நிலத்தை தர்காவோடு சேர்த்து கம்பி வேலி அமைத்துக் கொண்டனர்.
இதன்பிறகு ஹிந்து முன்னணியின் சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
ஹிந்து முன்னணி நிர்வாகிகளின் முயற்சியில் நில அளவியர் வரவழைத்து கோயில் நிலங்கள் அளக்கப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை அளந்து கோட்டை விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு கம்பி வேலிகள் அகற்றப்பட்டு இந்து முன்னணி சார்பில் புதிய கம்பி வேலிகள் போடப்பட்டது. கோட்டை விநாயகர் கோவில் சமூகவிரோதிகள் சீட்டாடும் இடமாக பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்தது.
இதன் பிறகு இந்து முன்னணியின் முயற்சியில் கோயில் சுத்தம் செய்யப்பட்டு, புதிய மின் இணைப்பு கொடுக்கப்பட்டு தற்போது மக்கள் வழிபடும் கோவிலாக மாற்றமடைந்துள்ளது. கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றியதோடு சமூக விரோதிகளிடமிருந்து கோட்டை விநாயகர் கோயிலையும் ஹிந்து முன்னணி காப்பாற்றியுள்ளது.