2015

புதிய தலைமுறை

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்கு தேவையா? என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது மார்ச் 8, 2015ம் தேதி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு தொடர் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் கடிதம் மூலமாகவும் நம் எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆனால் நிர்வாகம் நிகழ்ச்சி நடத்தப் போவது இல்லை என்கிற முடிவை அறிவிக்கவில்லை. ஆகவே மார்ச் 8 அன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் பின்புறம் ஒன்று கூடினோம்.

அப்போது அந்த தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் கூடியிருந்த எங்களை படம் பிடித்தார். நாம் படம் பிடிக்க கூடாது என்று நம்முடைய எதிர்ப்பை கூறியும் கேளாமல் தொடர்ந்து படம்பிடித்துக் கொண்டிருந்தார். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது கேமரா கீழே விழுந்தது. காவல்துறை வந்து நிர்வாகத்திடம் பேசியதில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப் போவது இல்லை என்று நிர்வாகம் அறிவித்தது.

தொலைக்காட்சி கேமராமேன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை இந்து முன்னணியைச் சேர்ந்த 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. 11 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். எது எப்படியாயினும் நிகழ்ச்சி ஒளிபரப்பு தடுக்கப்பட்டதில் நமக்கு வெற்றியே.

 

பிறகு பொய்ப்புகார் கொடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி டி.வி.யை புறக்கணிப்பு என்கிற நிலைப்பாடு எடுக்கப்பட்டதின் வாயிலாக நிர்வாகம் பணிந்து வீரத்துறவி ராமகோபாலனிடன் வருத்தம் தெரிவித்து வழக்கை வாபஸ் பெற்றது.

2015- தமிழக பாதுகாப்பு மாநாடு - கோவை


பிரமிக்க வைத்த சரித்திர சாதனை பெற்ற மாநாடு என்று சொன்னால் அது கோவையில் 2015 ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற ஐயா தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா 7வது மாநில மாநாடு. நாடு முழுக்க பல்வேறு பிரிவினைவாத சக்திகள் இயங்கி வருகின்றன. தமிழகத்திலும் அத்தகைய சக்திகள் ஊடுருவி தேசிய சிந்தனைக்கு எதிரான செயல்களை செய்து வருகின்றனர்.

அவர்களால் தமிழகத்துக்கு ஆபத்து, நாட்டிற்கு ஆபத்து. அத்தகைய பிரிவினைவாத சக்திகளை ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழக பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. கோவையின் காவல் தெய்வம் போனைகோனியம்மன் அருளால் வருணபகவான் வழிவிட , கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்கள் . மாநாட்டு பேரணிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமான முறையில் பல்வேறு வகையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

காவல்துறை வழக்கம் போல பேரணிக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் இந்து முன்னணியின் மனுவை பரிசீலிக்க கோவை மாநகர கமிஷனருக்கு உத்தரவிட்டது மாநாடு நடைபெறுகின்ற தினத்திற்கு முன்தினம் வரை முடிவைச் சொல்லாமல் காவல்துறை இழுத்தடித்தது. கடும் போராட்டத்தின் விளைவாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று அதாவது மாநாடு நடைபெறும் நாளன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. மாநாட்டுப் பேரணி மூன்றரை மணிக்கு துவங்க வேண்டும். 3 .10 மணிக்கு நீதிமன்றம் சென்னையில் அனுமதி வழங்கியது. 3.20 க்கு கோவையில் உத்தரவு கிடைத்தும் ஊர்வலம் துவங்கும் இடத்தை மாற்றி உத்தரவிட்டது காவல்துறை . இருப்பினும் மிகக் குறுகிய காலத்தில் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது .

இந்த மாநாட்டில் தமிழகம் முழுக்க மட்டுமல்ல மலேசியா மற்றும் சிங்கப்பூர் இந்து முன்னணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் திரு.தத்தாத்ரேயா அவர்களும், கேரள இந்து முன்னணியின் தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் உரை அனைவருக்கும் ஊக்கம் தந்தது. மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த நெடுஞ்சாலை வழியாக வந்தாலும் குளிப்பதற்கும், உடை மாற்றிக் கொள்வதற்கும் 15க்கும் மேற்பட்ட இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டு திடலுக்கு வருவதற்கு எந்த சாலையில் வந்தாலும் சுமார் 50 கிலோமீட்டர் கொடிகள் கட்டப்பட்டு மிக பிரம்மாண்டமான வகையில் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டு மேடை எல்லோரும் பார்க்கின்ற வகையில் பின்னணியில் மிக பிரம்மாண்டமான எல்இடி திரை அமைக்கப்பட்டிருந்தது .

அனைத்து மாநாடுகளும் சோதனைகளை சந்தித்து தான் நடைபெற்றுள்ளன ஆனால் அந்த சோதனைகளை சாதனையாக்கிய பெருமை இந்து முன்னணி பேரியக்கத்தை சேரும் பிரமிக்க வைத்த சரித்திர சாதனை பெற்ற மாநாடு என்று சொன்னால் அது கோவையில் 2015 ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற ஐயா தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா 7வது மாநில மாநாடு. நாடு முழுக்க பல்வேறு பிரிவினைவாத சக்திகள் இயங்கி வருகின்றன. தமிழகத்திலும் அத்தகைய சக்திகள் ஊடுருவி தேசிய சிந்தனைக்கு எதிரான செயல்களை செய்து வருகின்றனர். அவர்களால் தமிழகத்துக்கு ஆபத்து, நாட்டிற்கு ஆபத்து. அத்தகைய பிரிவினைவாத சக்திகளை ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழக பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. கோவையின் காவல் தெய்வம் போனைகோனியம்மன் அருளால் வருணபகவான் வழிவிட , கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்கள் .

மாநாட்டு பேரணிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமான முறையில் பல்வேறு வகையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. காவல்துறை வழக்கம் போல பேரணிக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் இந்து முன்னணியின் மனுவை பரிசீலிக்க கோவை மாநகர கமிஷனருக்கு உத்தரவிட்டது மாநாடு நடைபெறுகின்ற தினத்திற்கு முன்தினம் வரை முடிவைச் சொல்லாமல் காவல்துறை இழுத்தடித்தது. கடும் போராட்டத்தின் விளைவாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று அதாவது மாநாடு நடைபெறும் நாளன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. மாநாட்டுப் பேரணி மூன்றரை மணிக்கு துவங்க வேண்டும். 3 .10 மணிக்கு நீதிமன்றம் சென்னையில் அனுமதி வழங்கியது. 3.20 க்கு கோவையில் உத்தரவு கிடைத்தும் ஊர்வலம் துவங்கும் இடத்தை மாற்றி உத்தரவிட்டது காவல்துறை . இருப்பினும் மிகக் குறுகிய காலத்தில் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது .

இந்த மாநாட்டில் தமிழகம் முழுக்க மட்டுமல்ல மலேசியா மற்றும் சிங்கப்பூர் இந்து முன்னணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் திரு.தத்தாத்ரேயா அவர்களும், கேரள இந்து முன்னணியின் தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் உரை அனைவருக்கும் ஊக்கம் தந்தது. மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த நெடுஞ்சாலை வழியாக வந்தாலும் குளிப்பதற்கும், உடை மாற்றிக் கொள்வதற்கும் 15க்கும் மேற்பட்ட இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டு திடலுக்கு வருவதற்கு எந்த சாலையில் வந்தாலும் சுமார் 50 கிலோமீட்டர் கொடிகள் கட்டப்பட்டு மிக பிரம்மாண்டமான வகையில் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டு மேடை எல்லோரும் பார்க்கின்ற வகையில் பின்னணியில் மிக பிரம்மாண்டமான எல்இடி திரை அமைக்கப்பட்டிருந்தது . அனைத்து மாநாடுகளும் சோதனைகளை சந்தித்து தான் நடைபெற்றுள்ளன ஆனால் அந்த சோதனைகளை சாதனையாக்கிய பெருமை இந்து முன்னணி பேரியக்கத்தை சேரும்

2015 வித்யா கணபதி ஹோமம்


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கான வித்யா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது . இந்த நிகழ்வில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு 14 ஆன்மீக அமைப்புகளை பொறுப்பாளர்கள் தொடர்பு கொண்டனர்.

42 ஜாதி சமுதாய மக்களை சென்று நேரில் அவர்களுடைய குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சுமார் 15 பள்ளிகளில் இருந்து பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த 800 மாணவர்கள் இந்த வேள்வியில் கலந்து கொண்டனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மேலும் படிக்க