2016

கங்கை அம்மன் கோவில்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள கங்கை அம்மன் திருக்கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது . இரவு நேரத்தில் வண்ண வண்ண பட்டாசுகள் வெடிப்பது அந்த நிகழ்வில் ஒரு சிறப்பு அம்சம். லட்சக்கணக்கான மக்கள் அந்த விழாவில் பங்கேற்பார்கள். காவல்துறை திடீரென்று எந்தவித முன்னறிவிப்பின்றி விழா நடக்கின்ற நாளில் கடைகளை அடைக்க கூறி வானவேடிக்கை வெடிக்க கூடாது என்று தடை விதித்தனர்.

திருவிழாவின் நோக்கத்தை சிதைத்தனர். இந்து முன்னணி களம் இறங்கியது. மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தியது. இறுதியில் மக்களின் சக்தி, ஹிந்து சக்தி வென்றது. திருவிழா மிகச் சிறப்பாக வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.

 

2016 - 2007 பெண்கள் கலந்து கொள்ளும் முதல் மகா சுமங்கலி பூஜை தூத்துக்குடி


தூத்துக்குடி மாநகரில் மிகப்பிரமாண்டமான அளவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மிக சிறப்பாக நடைபெற்றது. முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 1700 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

2016 - கிறிஸ்துவ சதி ஊர் பெயர் மாற்றம் நிறுத்தம்


குமரி மாவட்டம் பேயன்குளி பேரின்பபுரம் ஆக்கி பெயர்ப்பலகைகள் வைத்தனர். கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ வங்கி பேரின்பபுரம்கிளை என்றும், கிறிஸ்தவ சூழ்ச்சிகளால் துவங்கப்பட்டது இதனைக் கண்டு வெகுண்ட பொதுமக்கள், இந்து முன்னணியினரால் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. தொடர் போராட்ட முயற்சியினால் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு மீண்டும் பேயன்குளி என்று பலகைகள் வைக்கப்பட்டன.

2016 - கோவை 100 வார்டுகளில் ஒரே நாளில் பைட்டக்


கோவை மாநகரில் உள்ள அனைத்து வார்டுகள், வீதிகளில் கமிட்டி கொண்டு செல்ல வேண்டும் என்ற மிஷன் 2020 இலக்கை முன்னிட்டு 2015, நவம்பர் 15ம் தேதி கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் உள்ள பொறுப்பாளர்கள் சந்திப்பு ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு 86 வார்டுகளில் 86 பேர் பைட்டக் எடுக்க மாநகர் முழுவதும் 1780 பேர் கலந்துகொண்ட பைட்டக் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக மாநகர் சாங்கீக் திட்டமிடப்பட்டு பிப்ரவரி 7ம் தேதி அழைப்பிதழை போஸ்டரோ, வாட்ஸ்அப் தகவலோ எதும் இல்லாமல் நேரடி வார்டு பைட்டக் மூலமாக தகவல் தரப்பட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் வார்டில் இருந்து 2109 பேர் கலந்து கொண்டனர்.

2016 - சென்னை வெள்ள நிவாரணம்


தமிழகத்தை உலுக்கிய இயற்கை சீற்றம் வெள்ளமாக சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து மக்கள் உடைமைகளை இழந்து உணவுக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டபோது மக்கள் துயர் துடைக்க களமிறங்கிய இந்து முன்னணி, சென்னையில் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளை தேர்ந்தெடுத்து பணியாற்றியது.

வழங்கப்பட்ட பொருட்கள்:

  • உணவு - 80,000 பேருக்கு
  • போர்வை மற்றும் பாய் - 5200
  • மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் - 4000

2016 - டிசம்பர் 6 வெற்றித்திருநாள் காவிக்கொடி ஆர்ப்பாட்டம்


  • மொத்த இடங்கள்:64
  • எண்ணிக்கை:13,455
  • 2016ம் ஆண்டு
  • இந்து அன்னையர் முன்னணி மதுவிலக்கு ஆர்ப்பாட்டம்
  • மொத்த இடங்கள்:16
  • எண்ணிக்கை:918

2016 - மசூதி கட்டுவது நிறுத்தப்பட்டது


சென்னைக்கு அருகே செம்பாக்கம் என்ற பகுதியில் தலித் மக்களுக்கு சொந்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட ஆரம்பித்தனர். இதனால் வெகுண்ட இந்துக்கள் அதனை எதிர்த்து போராட முடிவு செய்தனர். பொதுமக்களும், இந்து முன்னணியும் இணைந்து முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என தீர்மானித்ததோடு, முஸ்லிம்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த கடைகளை வீடுகளை காலி செய்திட கூறினர். பிறகு முஸ்லிம் ஜமாத்தினர் ஓடிவந்து மசூதி கட்ட மாட்டோம் என உறுதி கூறி எழுதிக் கொடுத்தனர்.

2016 பாகிஸ்தான் ஆதரவு தேச விரோதி


சென்னையில் மலபார் கோல்ட் ஹவுஸ் என்கிற நிறுவனம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தான் விடுதலை தினத்தை கொண்டாடி அதை முகநூலில் பதிவு செய்து விளம்பரப்படுத்தினர் . இந்த தேசவிரோத மலபார் கோல்ட் ஹவுஸ் என்ற நிறுவனம் இஸ்லாமியர்களால் நடத்தப்படுகின்ற நிறுவனம்.

இந்து முன்னணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. ஆயினும், இஸ்லாமிய சார்புடைய ஜெயலலிதா அரசு இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் படிக்க