2017

ஊழியர்கள் பெருங்கூட்டம்

வால்போஸ்டர் இல்லை, SMS இல்லை, வாட்ஸ்அப் இல்லை. நேரடி சந்திப்பின் மூலம் தகவல் கொடுத்து மிக பிரம்மாண்டமான பொறுப்பாளர்கள் சந்திப்பு திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. 60 வார்டுகளில், 720 கமிட்டிகளில் இருந்து 4,929 பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சியில், இந்து ஜாக்ரன் மன்ச் அகில பாரத இணை ஒருங்கிணைப்பாளர் பிரேம்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பூர் இந்துமுன்னணி வரலாற்றில் ஒரு மைல்கல்...

2017 - 40 ஆண்டுகால அவமானம் உடைக்கப்பட்டது


ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 1978 ஆம் ஆண்டு ஒரு மசூதி இருக்கும் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர் . இதனால் சில இந்துக்கள் உயிரிழந்தனர். அன்றுமுதல் மசூதி இருக்கின்ற பகுதியில் எந்தவிதமான ஹிந்து ஊர்வலங்களும் அனுமதிக்கப்பட்டதில்லை.

 

இந்துமுன்னணி இயக்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் மசூதி வழியாகச் சென்று மிகப்பெரிய வெற்றியடைந்தது. உற்சாகத்துடன் 300 பெண்கள் உட்பட இரண்டாயிரம் மக்கள் கலந்துகொண்டு, மிகப்பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

2017 கிறிஸ்தவ பாதிரிக்கு பதிலடி


கிறிஸ்தவ பாதிரியார் எஸ்ரா. சற்குணம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வேதங்களும், கீதையும் மக்களை பிளவுபடுத்த உண்டானது என்று மிகக் கேவலமான தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.

வெகுண்டெழுந்த மக்களும், இந்து முன்னணி தொண்டர்களும் எஸ்ரா. சற்குணம் என்கின்ற பாதிரியாரின் வீட்டிற்கு நேரில் சென்று முற்றுகையிட்டு ஆதாரம் வழங்க வேண்டும் இல்லை எனில், மன்னிப்பு கோர வேண்டும் என்று மிகப் பெரும் போராட்டத்தில் இறங்கினர்.

2017 தாய் மதம் திரும்பிய சகோதரர்கள்


கரூர் மாவட்டம் தோகைமலை என்கிற கிராமத்தில் சில இளைஞர்கள் அவர்களுடைய பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தெரியாமல் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டனர்.

இந்த செய்தியை அறிந்ததும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் விரைந்து சென்று, அந்த இளைஞர்களை மீட்டு தாய்மதம் திருப்பி மீண்டும் குடும்பத்தோடு சேர்த்து வைத்தனர்.

2017 தாய் மதம் திரும்பிய சகோதரர்கள்


கரூர் மாவட்டம் தோகைமலை என்கிற கிராமத்தில் சில இளைஞர்கள் அவர்களுடைய பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தெரியாமல் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டனர்.

இந்த செய்தியை அறிந்ததும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் விரைந்து சென்று, அந்த இளைஞர்களை மீட்டு தாய்மதம் திருப்பி மீண்டும் குடும்பத்தோடு சேர்த்து வைத்தனர்.

2017 தேச விரோத சக்திகளின் கோட்டம் அடக்கப்பட்டது


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திட்டமிட்டு திசைதிருப்பி நக்சல் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். பசுவைக் காக்க, பாரம்பரியத்தை காக்க ஜல்லிக்கட்டு என்று போராடிய அதே அமைப்புகள், இரண்டு மாதத்தில் பசுவை கொல்லவும், அதை உண்ணவும் எங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று நிலைப்பாட்டை மாற்றி வேறுவகையில் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த இரட்டை நிலை கபட வேடதாரிகளின் முகத்திரையை கிழிக்க களமிறங்கியது இந்துமுன்னணி. தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கோபூஜை நடத்தப்பட்டன.

இந்த போலி புரட்டுவாதிகளின் எண்ணத்தை மக்களுக்கு புரியவைக்க ஒரு நாள் சமூகவலைத்தள பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இந்த தேசவிரோத நக்சல் அமைப்பினரின், உண்மையான இந்து விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டியது இந்து முன்னணி.

2017 மலைகளை மீட்டது


காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே கிறிஸ்தவ மிஷனரிகள் கிட்டத்தட்ட 27 மலை குன்றுகளை ஆக்கிரமித்து, அங்கெல்லாம் அவர்களது சிலுவைகளை நட்டு மிகப்பெரிய மதமாற்றத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக இந்த மலைகளில் எல்லாம் விஷ்ணுவின் ஆலயங்கள் விளங்கி வந்தன. ஆலயத்திற்குச் செல்லும் வழிகளில் எல்லாம் மரங்களை வெட்டிவிட்டு அங்கெல்லாம் இயேசு மற்றும் மேரியின் சிலைகளை வைத்தனர்.

இந்த மோசடி கிறிஸ்தவ ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணி களமிறங்கி போராடி சட்டவிரோதமாக நடப்பட்ட சிலுவைகளையும், வைக்கப்பட்ட சிலைகளையும் அகற்றி வெற்றி கண்டது.

2017 மாநிலத் தலைவர் கைது - மறியல் போராட்டம்


தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இஸ்லாமியர்களின் கலவரத்தினால் இந்து குடும்பங்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தன. இந்த தகவலை கேள்விப்பட்டு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இந்து மக்களை சந்தித்து ஆறுதல் அளிக்க தேவையான உதவிகளை செய்திட அங்கு சென்றார். அங்கு காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்கள் மாநில தலைவரை அங்கு செல்ல கூடாது என்று தடுத்து நிறுத்தியதோடு, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டார்.

மாநிலத் தலைவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள செய்தி காட்டுத் தீ போல் பரவியது. இந்து முன்னணி தொண்டர்கள் உடனடியாக களமிறங்கி 51 மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலத் தலைவர் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டார் .

அதேசமயம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாநில பொதுச் செயலாளர் திரு.முருகானந்தம் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி தக்க ஏற்பாடுகளை, உதவிகளை அவர்களுக்கு செய்து விட்டு வந்தார்.

2017 முதல்வரிடம் முறையீடு


தமிழகத்தில் கோவில்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை குறித்தும், பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பது குறித்தும் , பின்தங்கிய பட்டியலின மக்கள் தங்கியிருக்கின்ற பகுதிகளில் ஆலயங்கள் அமைப்பது குறித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க