2018 - உள் நாட்டு பாதுகாப்பு மாநாடுகள்
தமிழகம் முழுவதும் தேசவிரோத இந்து விரோத நக்சல் பிரிவினைவாத தனித்தமிழ் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மிகப்பெரிய அளவில் நடைபெறுகின்ற மதமாற்றம் , லவ் ஜிகாத், நில ஆக்கிரமிப்பு, நக்சல் ஊடுருவல்கள் போன்ற பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் என்பதை வலியுறுத்தி 11 கோட்டங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டன . அனைத்து பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மாநாடு மிகச்சிறப்பான வகையில் வெற்றியடைந்தது.
2018 - மிஷன் 2020
திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு விஷயத்திற்காக பல்வேறு
இடங்களில் ஊழியர்கள் சந்திப்பு நடத்துவது எனவும் மிஷின் 2020 இலக்கை அடைவதற்கும்
முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
155 இடங்களில் 8 ஆயிரத்து 410 பேர் கலந்து கொண்டனர்.
ஒரே ஒரு வார்டில் இருந்து அதிகபட்சமாக 429 பேர் கலந்து கொண்டது சிறப்பு அம்சம்.
அனைத்து சந்திப்புகளும் 19/08/2018 காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை
நடத்தப்பட்டது.
2018 – 1 லட்சம் குடும்பங்கள் பங்கேற்ற சோடஷ மஹாலட்சுமி மஹாயாகம்
தமிழகத்தில் 1 லட்சம் குடும்பங்கள் பங்கேற்ற சோடஷ மஹாலட்சுமி மஹாயாகம் 1008 நாட்டு பசுமாடுகளை ஒரே இடத்தில் வரவழைத்து பிரம்மாண்ட கோபூஜை 108 அஸ்வ(குதிரை)பூஜை ஆகிய முப்பெரும்ஆன்மீகதிருவிழாவை லட்சகணக்கான மக்களை அலைகடலேன திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் சங்கமிக்க செய்தது இந்து முன்னணி . 2018 டிசம்பர் மாதம் 23, 24, 25 ஆகிய தினங்களிள் உலக நன்மைக்காக, விவசாயம் செழிக்க இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் முதல் நாள் அதிகாலை நாகசக்தி பீடம் ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் முன்னிலையில் மகா கணபதி யாகத்துடன் கஜபூஜை நடைபெற்றது. பிறகு நாடு செழிக்க மன்னர்கள்காலத்தில் நடத்திய அஸ்வபூஜையானது வாராஹி ஸ்ரீ மணிகண்ட சுவாமிகள் முன்னிலையில் 130 குதிரைகள் பங்கேற்க சீரும்சிறப்பாக நடைபெற்றது.
அன்று மாலை மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இரண்டாம் நாள் விவசாயம் செழிக்க குடும்ப ஐஸ்வர்யம் பெருக காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஷ்வர சுவாமிகள் முன்னிலையில் 1008 நாட்டு பசுமாடுகளை வைத்து கோபூஜை நடைபெற்றது . இதில் வியசாயிகளின் பேராதரவோடு கூடுதலாக 1330 பசுமாடுகள் அழைத்து வரப்பட்டன. இந்த மாபெறும் கோபூஜையானது பூவுலகில் முதல்முறையாக பொங்கலூரில் நடைபெற்று சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது .
இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியினை ஒட்டி சிறப்பு தபால் தலையும் , தபால் உரையும் மத்திய தபால் துறையால் அன்றைய தினமே வெளியிடப்பட்டது . தபால் தலையை மேகாலயா முன்னாள் கவர்னர் திரு.சன்முகநாதன் அவர்கள் வெளியிட்டார். அன்று மாலை ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மூன்றாவது நாளாக நாடு செழிக்கவேண்டியும் குடும்ப ஐஸ்வர்யம் பெருக வேண்டியும் லட்சம் குடும்பங்கள் பங்குகேற்க மகாலட்சுமி மஹாயாக வேள்விக்கு வீட்டிற்கு ஒரு செங்கல் என மக்களிடம் வீடு தேடி சென்று பெற்றுவந்த லட்சக்கணக்கான செங்கற்களை கொண்டு 60 அடி அகலம் 160 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாக சாலையில் 16 அஷ்ட லட்சுமி யாக குண்டங்களும் பத்தடி வட்டசுற்றளவு 9 அடி ஆழமுடைய பிரம்மாண்ட மகாலட்சுமி யாக குண்டமும் அமைக்கப்பட்டு சோடஷ மஹாலட்சுமி மஹாயாக வேள்வி இந்து முன்னணி மாநில தலைவர் திரு.காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துரவி திரு.இராம.கோபாலன், இந்து ஜாக்ரன் மஞ்ச் அகில பாரத இணை ஒருங்கிணைப்பாளர் திரு.பிரேம்குமார் உள்ளிட்ட இந்துமுன்னணி, RSS மற்றும் பரிவார் அமைம்முகளின் பொறுப்பாளர்கள், துறவியர் பெருமக்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு.பொன்ராதாகிருஷ்ணன் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் திரு.கிருஷ்ணசாமி, ஜோதிட நிபுனர் திரு.A.M.ராஜகோபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் திரு.E.R.ஈஸ்வரன் மேலும் தமிழகத்தின் பெரும்பான்மை சட்ட மன்ற , பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் பல்வேறு அரசு அதிகாரிகளும் , பல்வேறு கட்சியை சார்ந்தவர்களும் , பல்வேறு சமுதாய தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர் . இந்த பிரம்மாண்ட சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய ஆன்மீக திருவிழாவானது மடத்துகுளத்தில் ஜனவரி 26 அன்று நடைபெற்ற இந்து முன்னணி கோவை கோட்ட மாநாட்டில் வீரத்துறவி திரு.இராமகோபாலன் ஆசியோடு மாநில தலைவர் திரு.காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்கள் அறிவிக்கிறார். அன்று முதல் 10 மாதங்கள் கோவை கோட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் இந்த வரலாற்று சிறப்பு ஆன்மீக திருவிழாவிற்காக மகாயாக வேள்வி பூஜை வரவேற்பு, அன்னதானம், வாகன நிறுத்தம், 1000 பசுமாடு ஒருகினைப்புகுழு மருத்துவகுழு என பல்வேறு ஏற்பாடுகளுக்கான 47 குழுக்களாக பிரிக்கபட்டு அயராத களப் பணியாற்றிட இடை விடாது மாநில பொறுப்பாளர்கள் வழிகாட்டி வந்தனர்.
ஏற்பாட்டின் சில துளிகளை அறிவோம் :
- மைதானத்தின் ஒருமுனைக்கும் மறு முனைக்கும் இடைப்பட்ட தூரம் சரியாக ஒரு கிலோ மீட்டர்.
- அசம்பாவிதங்கள் நடந்தால் அவசரகால நடவடிக்கைக்கென 25 வாக்கிடாக்கி வசதியுடன் சிறப்புக்குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
- 6 ஆம்புலன்ஸ்கள் , 3 திசைகளிலும் மருத்துவ மைய கூடாரங்கள், 28 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பணியாற்றினர்.
- 300 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டன.
- மூன்று நாட்களும் தொடர் அன்னதானம் வழங்கபட்டது.
- 34 இடங்கலில் 500 லிட்டர் கொண்ட சுத்திகரிக்கபட்ட குடீநீர் மையங்கள். மூன்றாம் நாள் நிறைவு நிகழ்ச்சியில் லட்சம் குடும்பங்களை அமரவைக்க 96 பகுதிகளாக இடம் பிரிக்கப்பட்டிருந்தது.
- பக்தர்கள் வேள்வி பூஜையைக் காண 11 இடங்கலில் 8 க்கு 16 அடி கொண்ட பிரம்மாண்ட LED திரைகள் அமைக்கப்பட்டன.
- 2 தனியார் தொலைகாட்சிகளிள் நேரலை தொகுத்து வழங்கபட்டது. பூஜைக்கு வந்த பக்தர்களை அமரவைக்கும் பணியில் 43 பள்ளிகளைச் சார்ந்த 1119 ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பணி செய்தனர் மேலும் 300 கல்லூரி மாணவ மாணவியர்களும் ஈடுபட்டனர் .
- மொத்த ஏற்பாட்டிற்காக 5120 பேர் தன்னார்வலர்களாக பணிபுரிந்தனர் இதில் இந்து அன்னையர் முன்னணியினர் 210 பேர் அடங்கும் .
- அனைவருக்கும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இது போல் பல பணிகள் தொடர்ந்து பல கட்டங்களில் பொறுப்பாளர்களால் இரவு பகல் பாராமல் பல திட்டமிடப்பட்டு முப்பெரும்ஆன்மீகத் திருவிழாவை நடத்தி சரித்திர சாதனை படைத்தது இந்து முன்னணி...
2018 இணையத்தில் ஒரு புரட்சி
கோவில் சிலைகள் திருடப்பட்டு அவைகள் பல்வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டு வந்தது. திருடு போன கலைப்பொக்கிஷங்களான கோவில் சிலைகளை மீட்டெடுப்பதற்காக ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்கள் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குழு இயங்கி வந்தது.
இந்நிலையில் நேர்மையான அதிகாரியான திரு. பொன் மாணிக்கவேல் அவர்களை திருட்டு திராவிட அரசியல்வாதிகள் பணியிட மாற்றம் செய்யத் துணிந்தனர். அதனை தடுக்கும் விதமாக #ISUPPORTPONMANICKAVEL என்கின்ற ட்ரெண்ட் இந்து இணையதள முன்னணி சார்பாக முன்னெடுக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் வகையில் மிகப்பெரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
2018 மீண்டும் துவங்கிய சுப்ரபாதம்
சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோவில் உலக பிரசித்தி பெற்றது. தினமும் காலை வேளைகளில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஒலிபரப்பு செய்வது தொன்றுதொட்டு வரும் வழக்கம். சில விஷமிகள் கோவில் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததன் விளைவாக சுப்பிரபாதம் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டது.
இதை அறிந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் களமிறங்கி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். மிரண்ட அறநிலையத்துறை மீண்டும் சுப்ரபாதத்தை ஒலிக்கச் செய்தனர்.