2020 கொரோனா பேரிடர் சேவைகள்
உலகமே அஞ்சி நடுங்கி ஒதுங்கி இருந்த போது, தமிழகத்தில் இந்துமுன்னணி சகோதரர்கள் உயிரை துச்சமென மதித்து மதம் பார்க்காமல், மனிதம் பார்த்து சேவை செய்யும் புனிதப் பணியில் ஈடுபட்டனர். பல லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு அத்தியாவசிய வீட்டு பொருட்கள் கிளைக்கமிட்டிகள் வாயிலாக எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் புனிதப் பணியில் ஈடுபட்டது இந்து முன்னணி.
உணவு அல்லது கபசுர குடிநீர் , நோய் எதிர்ப்பு மாத்திரைகள் , ஆவின் பால் விநியோகம் என களத்தில் இறங்கி எது தேவையோ அதை சரியான நபர்களுக்கு சரியான குடும்பங்களுக்கு கொண்டு சேர்த்தது. ஆட்டோ தொழிலாளர்கள், குடிசைவாழ் மக்கள், மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் என தேடிப்பிடித்து உதவினார்கள் நமது இயக்க சகோதரர்கள்.
பல லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு நோய் எதிர்ப்பு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இத்தகைய புனிதப் பணியில் இந்து அன்னையர் முன்னணியை சார்ந்த அன்னையர்கள் ஈடுபட்டனர், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் ஈடுபட்டனர், இந்து இளைஞர் முன்னணி சேர்ந்த மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டனர்.
சுருங்கச் சொல்வதானால் இந்து முன்னணி களத்தில் கொரானாவை எதிர்த்து போராடியது. கொரானாவை தமிழகத்தில் அடக்கியது என்றால் அது மிகையல்ல.