இந்து
முன்னணி
குறித்து

மகத்தான பணியில்

ஆழ்வார்களும் நாயன்மார்களும் சஞ்சரித்த பூமி தமிழகம் , பாரதத் திருநாட்டிலேயே கோவில்கள் நிறைந்த மாநிலம் தமிழகம். குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் குடியிருக்கும் இடம் எனப் பெயர் பெற்றதும் தமிழகம்தான். தமிழகத்தில் ரிஷிகளும் , முனிவர்களும் , ஞானிகளும் , கவிஞர்களும், பக்தி மனம் கமழும் கணக்கில்லா நூல்களைப் பாடியுள்ளார்கள் .

இப்புண்ணிய பூமியிலே , இப்படிப்பட்ட தமிழகத்தில் புல்லுருவி முளைத்தது போல் திராவிடர் கழகம் 1920 களில் முளைவிட்டது . தமிழகமெங்கும் கடவுள் இல்லை . இல்லவே இல்லை . கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் . கடவுளை நம்புகிறவன் காட்டுமிரண்டி என்ற கோஷத்தை ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் அவரது சீடர்களும் , பிரிட்டிஷ்காரன் துணை கொண்டு முழங்கினர் .

 

அடுக்கு மொழிகளிலே வார்த்தை ஜாலத்தில் இறங்கினர் . மேடைகளிலே சத்தமாக தமிழ் ஜாலம் பேசியவர்களைத் தமிழக மக்கள் ஆவலுடன் பாத்து மன மயக்கம் கொண்டு மதி மயங்கினர் . திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலிலே ஏற்றி விட்டனர்.

சேலத்திலே இராமர் சிலைக்கு அறுந்த செருப்பு மாலை அணிவித்து, விளக்கு மாற்றால் வெண்சாமரம் வீசி ஊர்வலம் விட்டு அசிங்கப்படுத்தினர் . பக்தர்களின் மனதில் வேல்கொண்டு பாய்சினர்.

இராமாயணம் பொய் , மகாபாரதம் பொய் புராணங்கள் பொய் . சிவன் பொய் முருகன் பொய் , அய்யப்பன் பொய் என்று இந்துக்களைக் கேவலப்படுத்திப் பேசினார்கள்.

இராமாயணத்திற்குப் பதிலாக கீமாயணம் எழுதினார் . பகவத் கீதையை இழிவுபடுத்தி புத்தகம் எழுதினர்.

இதையெல்லாம் பார்த்து வடமாநில , அண்டை மாநில மக்கள் , தமிழகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இந்து மத எதிப்பாளர்கள் தேச பத்தி அற்றவர்களென்று எண்ணி மனம் நொந்து போனார்கள்.

மேலும் தமிழகத்தில் நடைபெற்ற அசுரவேக கிறிஸ்தவ மதமாற்றம். சேவை என்ற பெயரில் மக்களை எமாற்றும் வேலையில் இறங்கி தமிழக பண்பாட்டிற்கு பேரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். ஒரு கட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக்க முயற்சித்தனர்கிறிஸ்தவ சதிகாரர்கள்.

அதே சமயம் ஒருபுறம் பெருகிவந்த முஸ்லிம் மதமாற்றம்- பயங்கரவாத செயல்கள்

இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை

சிருபான்மையினரை ஓட்டுக்காக அரசியல்வாதிகளின் தாஜா செய்யும் போக்கு

இந்துக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்டுகின்ர சூழ்நிலை

ஆலயங்கள் சீரழிந்த நிலை ,ஆலய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு –அரசியல் செய்வபவரிடம் ஆலயங்கள் .

இந்துக்கள் தங்களது நாட்டிலேயே கேவலமாக நடத்தப்படும் சூழல்

பாரத நாட்டில் எல்லா மாநிலங்களிலும் தழைத்தோங்கிய ஆர்.எஸ்.எஸ் . தமிழகத்தில் வளரவில்லை . RSS தலைவர் பரம பூஜனீய பாலாசாகேப் தேவரஸ் அவர்கள் தமிழகம் உடைக்க முடியாத பாறையாக உள்ளது என்று சொன்னார்.

இந்தச் சூழ்நிலையில் 1980 இல் RSS இயக்கத்தால் இந்து முன்னணி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது . இந்து முன்னியை வளர்க்க வேண்டிய பொறுப்பு RSS - இன் தமிழ்நாடு மாநில இணை அமைப்பாளர் திரு . இராம. கோபாலன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

மேலும் படிக்க