இராமாயணத்
திருவிழா
– மகோத்சவம்

இராமாயணத் திருவிழா – மகோத்சவம்

அயோத்தி இராம ஜென்ம பூமியில் இராமருக்கு மாபெரும் ஆலயம் அமைக்க வேண்டும் என்று நாடு நெடுகிலும் பேரெழுச்சி ஏற்பட்டது . ஸ்ரீராமாயண மஹோத்சவ பெருவிழா 2 0 0 7 ஆண்டு துவக்கப்பட்டது . இவ்விழா குறித்து காஞ்சி சுவாமிகள் , மற்றும் அனைத்து ஆன்றோர்களிடம் இராம கோபாலன் அவர்கள் கலந்தாலோசித்தார் . தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இராமாயண நூல் இருக்க வேண்டும் என முடிவு எடுத்து தமிழகத்தின் தவப்பயனாக தோன்றிய சுவாமி சித்பவானந்தர் அவர்கள் எழுதிய இராமாயண காவிய நூலை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார் .

ஸ்ரீராமகிருஷ்ண தபோவன தலைமை சுவாமிஜி அவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கினார் . வீடுதோறும் இராமாயணத் திட்டம் துவங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் இராமாயணம் படிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் வீடுகளுக்கு ராமாயணம் கொண்டு சேர்க்கப்பட்டது.

முதலாம் ஆண்டு விழா சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரி மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு நாள் முழுவதும் இராமாயணம் தொடர்பான நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. தேனி ஓங்காரனந்தா ஸ்வாமிகள் , கன்னியாகுமரி வெள்ளிமலை சைதன்யா மகராஜ் சுவாமிகள் , சென்னை ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியராக இருந்த சுவாமி விமூர்த்தானந்தா , சங்கரன்கோயில் சங்கரானந்தா சுவாமி உட்பட பல துறவியர் பெருமக்களும் , பல பெரியோர்கள் கலந்துகொண்டனர் .

இராம பக்தியை மக்களிடம் கொண்டு சென்று இராம ராஜ்ய சிந்தனை வளர்க்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது இராமாயண மகோத்சவம். தொடர்ந்து மிக பெரிய அளவில் பல மாநகரங்களிலும், கிராமங்களிலும் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றது . ராமாயணம் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்துமா என்றால் இராமாயணம் எக்காலத்திற்கும் ஏற்புடையது . தேச பக்தியையும் , தெய்வ பக்தியையும் வளர்க்க இராமாயணம் நல்வழிகாட்டுகிறது .