மண்டைக்காடு
பகவதி ஆலயம்-
இந்து எழுச்சியின்
விஸ்வரூபம் -
குமரி

மண்டைக்காடு பகவதி ஆலயம் – இந்து எழுச்சியின் விஸ்வரூபம் - குமரி

சிறந்த பண்பாடும் , கலாச்சாரமும் , பாரம்பரியமும் கொண்ட இந்து சமுதாயப் பெருமக்கள் வாழும் கன்யாகுமரி மாவட்டத்தின் பண்பாட்டைச் சீரழிக்கும் நோக்குடன் , ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ மிஷினரிகள் இந்து சமுதாயத்தில் பல பிளவுகளை ஏற்படுத்தியும் , ஆசை காட்டியும் , அச்சுறுத்தியும் மத மாற்றம் செய்தனர் . இதன் விளைவாக இந்துக்களின் எண்ணிக்கை குமரியில் குறையத் துவங்கியது .

நாடு பிடிப்பதையும் , பெயர் மாற்றம் மற்றும் கலாச்சார மாற்றம் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்ட கிறிஸ்தவர்கள் , கன்யாகுமரி பகவதி அம்மன் பெயர் கொண்ட கன்யாகுமரி மாவட்டத்தின் பெயரை , கன்னிமேரி மாவட்டம் என்று மாற்ற முயன்றனர் . மேலும் பல ஊர்களின் பாரம்பரிய பெயர்களையும் மாற்றினர் .

அத்துடன் இந்து கோவில்களின் மிக அருகில் வழிபாட்டுக்கு இடையூறு செய்யும் நோக்குடன் , இந்து வழிபாட்டை கேலி செய்யும் எண்ணத்தில் , அரசு அனுமதி பெறாமல் பல திடீர் சர்ச் மற்றும் ஜெப வீடுகளை அமைத்தனர் .

இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.குமரியில் இந்துக்களின் கோவில்களும், உடைமைகளும் தீ வைத்தும் இடித்தும் உடைத்தும் பல இடங்களில் தாக்குதலும் நடத்தினர் .

அதன் உச்சக் கட்டமாக 1982 - ம் ஆண்டு பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவிலுக்கு இருமுடி கட்டி வந்த பெண் பக்தர்களை , கடலில் குளிக்க தடை செய்தும் , அவர்களது ஆடைகள் அகற்றப்பட்டும் , ஆண்களை கடலில் மூழ்கடித்தும் கொடுமைகள் செய்தனர் .

 

வன்முறையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிலர் உயிரிழந்தனர். தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ததுடன் , அனைத்து மதத்தினரும் அரசியல் கட்சியினரும் கலந்து கொண்ட சமாதானக் கூட்டமும் நடத்தினார் .

சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள், முதலமைச்சரிடம் கிறிஸ்தவ வெறியாட்டம் குறித்து எடுத்துரைத்தார் .

ஐயா தாணுலிங்க நாடாரின் பேச்சினைக் கவனித்த முதலமைச்சர் , நீதியரசர் வேணுகோபால் என்பவரை ஆணையராக நியமித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார் .ஐயா தாணுலிங்க நாடாரின் பேச்சினைக் கவனித்த முதலமைச்சர் , நீதியரசர் வேணுகோபால் என்பவரை ஆணையராக நியமித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார் .

மேலும் படிக்க