ரத யாத்திரை –
தமிழகத்தில் வித்திட்ட
ஹிந்து மறுமலர்ச்சி

ரத யாத்திரை – தமிழகத்தில் வித்திட்ட ஹிந்து மறுமலர்ச்சி

1995 மார்ச் 19 அன்று தனுஷ்கோடியில் ராம நாம ஜெப வேள்வியில் பூஜை மூர்த்தியாக இருந்து அருள் பாலித்த ஐந்து அடி அத்திமர ஆஞ்சநேயர் திருவுருவத்துடன் ஸ்ரீ கோபால் ஜி அவர்கள் தமிழகம் முழுவதும் யாத்திரைப் புறப்பட்டார் .

1996 பிப்ரவரி 9 ம் தேதி தனுஷ்கோடியில் பிரார்த்தனை செய்து இராமேஸ்வரத்திலிருந்து யாத்திரையை துவக்கினார் . இந்த யாத்திரை துவங்கியதிலிருந்து நிறைவடையும் வரையிலும் , ஸ்ரீ கோபால் ஜி அவர்களே முழு தலைமைப் பொறுப்பேற்று யாத்திரையை நடத்தினார் .

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய நகரங்களிலும் தொடர்ந்து 40 நாட்கள் இந்த ரத யாத்திரை பவனி வந்தது . இந்த யாத்திரையில் ஸ்ரீ கோபால் ஜி முழுமையாக மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த ரத யாத்திரையின் நோக்கம் இராமஇராஜியம் அடைந்தே தீருவோம் என்பதாக இருந்தது . இந்துக்களை பாதிக்கும் 32 விஷயங்களை பட்டியலிட்டு துண்டு பிரசுரமாக அச்சிட்டு அதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரமும் செய்யப்பட்டது .இந்து முன்னணியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் யாத்திரையுடன் , ஆங்காங்கே முழுமையாக பங்கேற்றனர் . இந்த யாத்திரை நிறைவடைய இரவு 12 மணி வரை கூட ஆகும் . யாத்திரை ஒவ்வொரு ஊரிலும் முக்கிய இடங்களில் எல்லாம் நிகழ்ச்சி ஏற்பாடு இருந்தது . மக்கள் பூஜை பொருட்களுடன் காத்திருந்து வழிபாடு நடத்தினார்கள் . பிரச்சாரத்தில் கலந்து கொனர் டார்கள் . யாத்திரையில் அனைவருக்கும் தேவையான உதவிகளை அப்பகுதிப் பொதுமக்கள் செய்தார்கள் .

இந்த யாத்திரையின் ஒரு சம்பவம் வந்தவாசிக்கு இரதம் வந்த அன்று வந்தவாசியே பெரும் கலவர சூழ்நிலை நிலவி கொண்டிருந்தது. காரணம் சாலைப் பணியாளர்கள் வாசலில் போடப்பட்டிருந்த கல்படியை மசூதி தகர்த்து விட்டார்கள் என்பதை காரணம் காட்டி ரதம் இப்பகுதிக்கு வரக்கூடாது என்று முஸ்லீம்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.இப்படி பல கட்ட சூழல்களில் ரத யாத்திரை தமிழகத்தில் இந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.