விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா
தெய்வீக தமிழகத்தை நாத்தீகத்தால் நாசமாக்கியவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க தமிழகத்தில் எவரும் இல்லாத காலத்தில்தான் நமது இந்து முன்னணி பேரியக்கம் துவங்கப்பட்டது. 1953 - ல் முதன் முதலாக ஈ.வெ.ரா. பிள்ளையார் சிலையை உடைக்கும் அந்த மாபாதக செயலை துவக்கி வைத்தார் . 1972 - ல் அதன் உச்சகட்டமாக சேலத்தில் நடந்த தி.க. மாநாடு மற்றும் ஊர்வலத்தில் நடந்த அசிங்கங்களை எழுதுவதற்கும் , பேசுவதற்கும் இயலாத காரியம் அந்தளவுக்கு நமது கடவுளைப் பற்றி கொச்சைப் படுத்தி பேசினார்கள் .
இந்த நிலையில் தான் தமிழகத்தில் மீண்டும் தேசிய , தெய்வீக பக்தியை வெளிக்கொணர்வது எப்படியென ஸ்ரீ இராம . கோபாலன் சிந்தித்தார் . திலகர் , விநாயகரை வைத்து சுதந்திர போராட்டத்தைப் பெரிதாக்கினார் . ஈ.வெ.ரா.- வோ விநாயகரை உடைத்து நாட்டை நாசமாக்கினார் . இராம . கோபாலன் அதே விநாயகரை வைத்து தமிழகத்தில் தேசிய தெய்வீகத்தை ஏன் ஏன் தட்டி எழுப்ப முடியாது என சிந்தித்தவருக்கு விநாயகரே விரைந்து அருள் கொடுத்தார் .
1983 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தானப்ப தெருவில் முதன்முதலாக வீதியில் விநாயக சதுர்த்தி வழிபாடு ஊர்வலம் நடந்தது . அதன் மூலம் அந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்தனர் . அடுத்த ஆண்டே சென்னையின் பிற பகுதியிலும் மதுரையிலும் விநாயகரை வீதியில் வைத்து வழிபடும் வழிபாடு துவங்கியது . குறிப்பாக சென்னை நங்கநல்லூரிலும் தாம்பரத்திலும் மூங்கிலால் செய்யப்பட்ட விநாயகரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை ஒன்றிணைத்தனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விட்டார் விநாயகர்.
விநாயகரின் விஸ்வரூபம் சென்னையில் மூன்றடி விநாயகராக துவங்கியவர் சில ஆண்டுகளில் 32 அடியாக உயர்ந்தார் . அதோடு சென்னையில் உள்ள ஒவ்வொரு குடிசைப் பகுதியிலும் விநாயகர் வைக்க விருப்பம் தெரிவித்தனர் அதற்காக 3 அடி உளள எழுச்சி விநாயகர் குறைந்த விலையில் வழங்கப்பட்டது . சென்னையில் மட்டுமே விநாயகர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொட்டது .
அனைத்து மாவட்டங்களையும் தாண்டி பல ஒன்றியங்களில் சதுர்த்தி நடத்த விநாயகர் விநாயகர் துவங்கினர் ஊர்வலமானது நகர ஒன்றிய வாரியாக துவங்கியது .ஊர்வலத்தின் துவக்கத்திலோ முடியும் இடத்திலோ சொற்பொழிவுகள் துவங்கின .
சென்னை விசர்ஜனம் மெரினா கடற்கரையில் நடந்தது . அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் பங்கு கொண்டன . இத்தகைய காட்சியை பொறுக்க முடியாத திருவல்லிக்கேணி முஸ்லிம்கள் விநாயகர் மீது செருப்பு மற்றும் கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டனர் . ஆனாலும் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழா வெற்றிகரமாக நடந்து வருகிறது .
விநாயகர் சதுர்த்தியில் மக்களை ஒன்றிணைக்கும் விதமாக பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டது . விநாயகர் சதுர்த்தி முதல் விசர்ஜனம் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன . உதாரணத்திற்கு சிலவற்றைக் காண்போம்
- சிறுவர் சிறுமியர் தினம் : இந்த நாளில் பாடல் போட்டி , விநாயகர் அகவல் ஒப்புவித்தல், வினாடி வினா , விளையாட்டுப் போட்டிகள் , கதை சொல்லுதல் நடைபெறுகிறது
- அன்னையர் தினம் : திருவிளக்கு பூஜை , கோலப் போட்டிகள் , பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடைபெறும் .
- இளைஞர் தினம் உறியடி , பேச்சுப்போட்டி , ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடைபெறும் .
- சமுதாய சமத்துவ தினம் : நா நாராயண பூஜை நரநாராயண பூஜை என்பது ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு மூத்த தம்பதியரை வரவழைத்து அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் , அவர்களிடம் சென்றுஆசிர்வாதம் வாங்குவது .
- தேசிய எழுச்சி தினம்
- இந்து எழுச்சி தினம் : விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று விசர்ஜனம் செய்தல் 1983 - ல் திருவல்லிக்கேணியில் ஒரு விநாயகராகத் துவங்கியவர் இன்று தமிழக பெங்கும் பல லட்சம் விநாயகராக வியாபித் துள்ளார்
அனைத்து பகுதிகள் மட்டுமல்ல அனைத்து சமுதாயத்திலும் கூட நரிக்குறவர் சமுதாயம் உட்பட இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது . ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு கருத்தை மையமாக வைத்து தமிழகமெங்கும் கருத்துத் தாக்கத்தை அறிவோம் பயணம் தொடரும் .