ஸ்ரீ இராம சேது –
பாலம் மீட்பு

ஸ்ரீ இராம சேது – பாலம் மீட்பு

இராமர் பாலம் பற்றி மக்கள் எப்போது யோசிக்க ஆரம்பித்தனர். சேது சமுத்திர திட்டத்தின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லாமல் தெற்காசிய நாடுகளுக்குச் செல்லலாம் . 36 மணி நேரப் பயணம் மிச்சப்படும் . எரிபொருளைச் சேமிக்கலாம் . தமிழகம் பணம் கொழிக்கும் மாநிலமாக மாறும் என்று தமிழக அரசும் , மத்திய அரசும் கூறுகிறது .

இந்து அமைப்புகள் எதிர்த்தது ஏன் ?
ஸ்ரீ இராமபிரான் கட்டிய இராமர் பாலத்தை உடைத்து விட்டு அதன் குறுக்கே கால்வாய் வெட்டப்படுகிறது . உலகெங்கும் உள்ள நூறு கோடிக்கும் அதிகமான இந்துக்களின் மனங்களையும் இணைக்கிறது . இராமர் நமது நாட்டின் அடையாளம் . இராமர் இல்லாமல் பாரதத்தில் வரலாறு இல்லை . 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இராமாயணம் , இராமர் பாலம் பற்றி குறிப்புகள் இன்றும் இருக்கின்றன .

 

இராமர் பாலத்தை உடைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் யாவை ?

  • அபூர்வமான உயிரினமான கடல் பாசி ஆசியாவிலேயே இங்கு மட்டுமே உள்ளது . இது தவிர அபூர்வமான கடல் ஆமைகள் , டால்பின் , கடற்குதிரை போன்ற 1300 க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் அழியும் .
  • 21 பவளப் பாறைத் தீவுகளின் பவளப் பாறைகள் உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜன் மூலமே மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன . இந்தப் பவளப் பாறைகள் உருவாக 4,000 ஆண்டுகள் ஆகின்றன . இது மடிந்தால் திரும்ப உயிர் பெறாது என்று கடலியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
  • அரசு யோசித்துள்ள சேது கால்வாய்த் திட்டத்தில் கப்பல்கள் வரும்போதும் , போகும் போதும் மீன் பிடிக்க அனுமதி இல்லை . கப்பல்கள் எப்போது வரும் , போகும் என்பது யாருக்குத் தெரியும் ? இப்போதே மீன் பிடிக்க அதிகாரிகள் கெடுபிடி செய்யத் தொடங்கி விட்டனர் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும் .
  • கடல் ஆமைகள் அழிந்து விடும்.
  • மீண்டும் சுனாமி வந்தால் தென்னிந்திய கடலோரப் பகுதிகள் மூழ்கிவிடும் .அழிந்து விடும் .
  • தோரியம் என்ற அரிய பொக்கிஷத்தைக் கொண்டு வரும் 400 ஆண்டுகளுக்கான மின்சாரத்தை தயாரிக்கலாம். இதுவரை சேமிப்பாகி உள்ள 3,60,000 டன் தோரியமும் கடலில் கரைந்து விடும் . புதிதாக தோரியமும் உருவாகாது .

எனவே இந்து முன்னணி இயக்கம் மூலமாக இராமர் பாலத்தை இடித்து சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி 2005 - இல் தமிழ்நாட்டில் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார் . ஆர்.எஸ்.எஸ் . - ன் அகில பாரத செயற்குழு கூட்டத்தில் கையெழுத்து இயக்கம் குறித்து ஸ்ரீ கோபால்ஜி பேசினார் .

அதன்படி 35 லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி அப்துல்கலாமிடம் மனு அளிக்கப்பட்டது . 2007 - இல் ஜூலை மாதம் மதுரையில் மாபெரும் மாநாடு நடைபெற்றது . இதில் 40,000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர் .அதே ஆண்டு ஆடி அமாவாசை அன்று நாடெங்கும் 71000 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது . இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர் .

2007 - ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இராமேஸ்வரத்தில் மாபெரும் இராம மகாயாகம் நடைபெற்றது . லட்சக்கணக்கான மக்கள் இந்த யாகத்தில் பங்கேற்றனர். ஆந்திரா , கர்நாடகா , கேரளா , தமிழ்நாட்டைச் சேர்ந்த துறவியர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர் .

அதே ஆண்டு அக்டோபர் 12 - இல் நாடு முழுவதும் 5400 இடங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது . இதில் 12 இலட்சம் மக்கள் பங்கேற்றனர் . தமிழ்நாட்டில் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் 10,000 க்கும் மேற்பட்டோர் கைதானார்கள் .

பாரத வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளு இடங்கள் இத்தனை நபர்கள் கலந்து கொண்ட மிகப் பெரிய போராட்டம் இதுவே. குறிப்பாக இதில் ஒரு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை என்பது சிறப்பு செய்தி.பாலத்தைக் காக்கக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன . முடிவுரை எது எப்படி இருந்தாலும் , தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நினைவுச் சின்னத்தைக் காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு பாரத குடிமகனுக்கும் உண்டு . இத்திட்டத்தை முறியடிக்க உறுதியாக அணி திரளுவோம் , போராடுவோம் .

மேலும் படிக்க