நாத்திக நாசகார
சக்திகளை எதிர்த்து களத்தில்

நாத்திக நாசகார சக்திகளை எதிர்த்து களத்தில்

திராவிடர் கழகம் கடந்த 60 ஆண்டுகளாக இந்து தெய்வங்களை நமது பண்பாட்டை இழித்தும் பழித்தும் பேசியும் எழுதியும் வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர் திராவிடர் கழகம் சிறுபான்மை கிறிஸ்தவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டு தமிழனையும் , தமிழ்மொழியையும் பாதுகாப்பதாக போலிவேடம் பூண்டு தமிழக இந்துக்களை ஏமாற்றி காலம் தள்ளினர்.

முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் நிறைந்த பகுதிகளில் தொடங்கி இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் வரை இவர்களது கபட நாடகம் தொடர்ந்தது. துண்டுப்பிரசுரங்கள் , சுவர் வாசகம் , பட்டிமன்றம் கருத்தரங்கம் என்று பலவழிகளில் இந்துமதத்தை நமது ஆன்றோர்களை , துறவியர்களை கொச்சைப்படுத்தி வந்தனர் . நமது சமயப்பெரியோர்கள் இவர்களது செயல்களை ஏதோ கோமாளிகள் பேசுகிறார்கள் என்று இவர்களை பெரிதுபடுத்தவில்லை . நமது இந்துசமய பெருமக்களும் தி.க. காரர்கள் இப்படிப் பேசினால் ஆண்டவன் தண்டிப்பான் என்று ஒதுங்கிச்சென்றனர் . அதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பகுத்தறிவுக்குஞ்சுகள் உலகத்திலேயே நாமே அறிவாளிகள் , விஞ்ஞானிகள் என்ற நினைப்பில் அதிக ஆட்டம் போட்டனர் . இவர்களின் கோமாளித்தனத்திற்கு அவர்கள் பாணியிலேயே பதில் கொடுக்க துடித்த இளைஞர் கூட்டம் இந்து முன்னணியில் இணைந்து துண்டு பிரசுரங்கள் , சுவர் வாசகங்களை தனது கருத்து தாக்குதல்களைத் தொடுத்தது . பட்டிமன்றங்கள் போராட்டங்கள் என பல வழிகளில் கேவலப்படுத்தினார்.

முள்ளை முள்ளால் எடுக்கத் துவங்கியது இந்துமுன்னணி .பலர் கைதுஆகினர். ஆனால் திராவிடக் கும்பல் மனதில் அச்சம் புகுந்தது. 25.6.89 திராவிடக்கழகத்தினர் பரபரப்பான ஆபாசபட்டிமன்றம் ஒழுக்கக்கேட்டில் மிகுதியும் விஞ்சி நிற்பது இராமாயணமா ? மகாபாரதமா ? என்று தலைப்பிட்டு பட்டிமன்றத்தினை ஏற்பாடு செய்தனர்.இது பற்றி இந்து முன்னணியினர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்த போது இது ஜனநாயக நாடு பேச்சுரிமை எழுத்துரிமை அனைவருக்கும் உண்டு என்றார் . இதுவும் நன்மைக்கே என முடிவு செய்து இந்து முன்னணியின் சார்பில் ஒரு பட்டிமன்றத்திற்கு அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது . மனுவில் ஆபாசத்தில் விஞ்சி நிற்பது குரானா ? பைபிளா ? என்ற பரபரப்பான பட்டி மன்றம் . அதிர்ந்து போன அதிகாரி முதலில் மிரட்டிப் பார்த்தார் பிறகு இரண்டையுமே தடை செய்தார் .

13.9.90 கோவை காந்திபுரத்தில் பெரியார் படிப்பகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் தோழமை கழகம் என்ற பெயரில் கண்காட்சி நடத்தி அதன் மூலம் பணம் வசூல் செய்து வருவதை மத்திய மாநில அரசுக்கு மனு மூலம் இந்து முன்னணி தெரிவித்தது . மேலும் துப்பாக்கிகளுக்கு உதிரிபாகங்கள் தயாரித்து விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வருவதையும் மக்களுக்கும் மத்திய அரசுக்கும் தெரிவித்தது இந்து முன்னணி.

1993 ஏப்ரல் தி.க. சார்பில் காவிக்கொடி எரிப்புப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. தடைசெய்ய காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க இயலாது என காவல்துறையினர் கைவிரிப்பு . இந்து முன்னணி சார்பில் திராவிடர் கழகக்கொடி , ஈ.வே.ரா. மணியம்மை ஆகியோர் உருவப்பட எரிப்பு போராட்டம் என இந்து முன்னணி அறிவிப்பு . தடையை மீறி நடந்த இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணிக்கு வெற்றி கிடைத்தது .

 

13.7.97 தி.க.வினர் பசு இறைச்சி உண்ணும் போராட்டம் அறிவித்தனர். அன்று இந்து முன்னணி சார்பில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அலங்கரிக்கப்பட்ட கோமாதா ரதம் 20 கிளைகளிலும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது . உண்ணும் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை . ஆனால் கோமாதா ரதம் கோவையில் மக்களிடம் நல்லவரவேற்பைப் பெற்றது .

நமது தெய்வங்களை கொச்சைப்படுத்தி எழுதிய வாசகங்களுக்குத்தக்கவகையில் நாம் பதிலடி கொடுத்தோம் . உதாரணமாக :

  • கல்லாலான கடவுளுக்கு பால் அபிஷேசகம் ஏன் ? தி.க. கல்லாலான ஈ.வே.ரா.வுக்கு ரோஜாப்பூ மாலை ஏன் ? எனக் கேட்டது இந்துமுன்னணி
  • ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறக்கும் இதில் கடவுள் செயல் எங்கே ? தி.க அப்படியானால் இரண்டு திருமணம் செய்த ஈ.வே.ராவுக்கு குழந்தை இல்லையே ஏன்? எனக் கேட்டது இ.மு
  • ரம்ஜானுக்கும் கிறிஸ்துமஸ்க்கும் வாழ்த்துச்சொல்லும் தி.க.வே தமிழர் திருநாள் தமிழ்புத்தாண்டு கொண்டாட முஸ்லீம் கிறிஸ்தவர்களுக்கு சொல்வாயா ?
  • கடவுள் இல்லை என்று இந்து கோவில்கள் முன்பு கல்வெட்டுவைக்கும் தி.க.வே அல்லா இல்லை , யேசு இல்லை என்று மகதி , சர்ச் முன்பு கல்வெட்டுவைக்கத் தயாரா ? இது போன்ற கேள்விகளை நாம் கேட்கத் தொடங்கினோம் . நமது பதிலைக் கண்டு வாயடைத்துப் போயினர் . அரசியல் கட்சினரும், பொது மக்களும் நம்பக்கம் நேர்மையும் உண்மையும் இருப்பது அறிந்து ஆதரவு கொடுத்தனர் . தி.க.வினரை புறக்கணித்தனர்.

கெட்டிகாரன் புளுக எட்டு நாளில் தெரியும் என்பதைப்போல தி.க.வினரின் தமிழ் , தமிழன் மூகமுடி கிழிந்தது . தற்போது தி.க.வினருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . எனவே காதல் திருமணம் , பிடல் காஸ்ட்ரோ , சேகுவரா , நரகாசுரன் , வனப்பாதுகாப்பு , யானை வழித்தடம் , அப்படி ஏதாவது ஒன்றை வைத்து பிழைப்பு நடத்த வேண்டி உள்ளது .

உண்மையில் ஈ.வே.ரா. தமிழக்காக பாடுபட்டது கிடையாது . கடவுள் மறுப்புக்கொள்கை பரப்பியது மக்கள் மத்தியில் எடுபடவில்லை . ஆன்மீகம் தழைத் தோங்கி விட்டது . பெரியார் . அண்ணா பேரைச் சொல்லி கட்சி நடத்தியவர்கள் இன்று பால்காவடி , மண் சோறு , அலகு குத்துதல் , தேர்இழுத்தல் , அக்னி சட்டி , பூக்குழி இறங்குதல் என பக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் . இதுவே இந்து முன்னணிக் கிடைத்த அங்கீகாரம் . நமது பணி தொடரும் வெற்றியும் தொடரும் .

மேலும் படிக்க