திருவாரூர் தேர்

திருவாரூர் தேர்

ஆசியாவிலேயே பெரிய, பிரம்மாண்டமான தேர் திருவாரூர் தேர். திருவாரூர் தேர் அழகு என்ற பேச்சு வழக்கு இன்றும் தமிழகத்தில் உண்டு . அந்தத்தேர் ஓடுவதற்கு முன்னும் , பின்னும் புதிதாக சாலை போடப்பட வேண்டும் வேண்டும் என்றால் அதன் எடையை , அமைப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் .

உலகப் புகழ் வாய்ந்த புரி ஜகந்நாதர் தேர் அந்த மாநிலத்தில் பெருமைமிகு ஒன்று . அதற்காக தேரோட்டத்தின் வேலைகளை ஓரிஸா மாநில அரசு ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும் . பல லட்சம் பக்தர்கள் அங்கு கலந்துகொள்வார்கள் . அது காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும் , பாரதிய ஜனதா , ஜனதா தள அரசாங்கமாக இருந்தபோதும் சரி. மாநில அரசு தனது பெருமையை பல நூறு ஆண்டுகளாக நிலைநிறுத்தி வருகிறது .

ஆனால் அதைவிட பல மடங்கு உயர்வான , புகழ்வாய்ந்த திருவாரூர் தேர் நிறுத்தப்பட்டதே சோக வரலாறு . அதைவிட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல , ஏரோட்டி ஏங்கித் தவிக்கையில் தேரோட்டம் ஏனடா தியாகேசா ! நாத்திக நயவஞ்சகர்கள் எள்ளி நகையாடினார்கள் .

அப்படி அசைக்கவிடாமல் திருவாரூர் தேரை திராவிட கட்சிகள் -ஆட்சியில் ஓரங்கட்டி நிறுத்தி விட்டனர் . வீண் செலவு , வெட்டி விழா .. இது தேவையா என மக்களிடம் பேசி வந்தனர் . திராவிட கட்சிகளின் மெத்தனத்தை பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் கோயிலில் இருந்து கல் தூண்களையும் , தேரில் இருந்த மர சிற்பங்களையும் திருடிக் கொண்டு போயினர் . வக்கற்ற அரசின் இந்து சமய அறநிலையத்துறை வேடிக்கைப் பார்த்தது . நாத்திக அரசியல்வாதிகளின் துணையோடு சிலை கடத்தல் பெரிய வியாபாரமாக தடைபெற்றது .

 

இந்நிலயில் இந்து முன்னணி துவங்கப்பட்டபோது , வாராது வந்த மாமணி என மக்கள் கொண்டாடி வரவேற்பு கொடுத்ததற்குக் காரணம் இருந்தது . ஒவ்வொரு ஊரிலும் இந்துக்கள் மனங்களில் பொங்கி எழுந்த உணர்ச்சிகள் , அவர்களின் நீண்ட நாட்களாக நீங்காத துயரத்திற்கு வழியை இந்து முன்னணி முன்னெடுத்து தீர்வு காண்டதுதான் .

மனுநீதிஆனால் அதைவிட பல மடங்கு உயர்வான , புகழ்வாய்ந்த திருவாரூர் தேர் நிறுத்தப்பட்டதே சோக வரலாறு . அதைவிட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல , ஏரோட்டி ஏங்கித் தவிக்கையில் தேரோட்டம் ஏனடா தியாகேசா ! நாத்திக நயவஞ்சகர்கள் எள்ளி நகையாடினார்கள் . சோழனால் உருவாக்கப்பட்டு , புகழ் சேர்த்த திருவாரூர் தேரை மீண்டும் ஓட்ட வேண்டும் என்ற விரதத்தை அந்த ஊர் மக்கள் கொண்டிருந்தனர். இது குறித்து இந்து முன்னணி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது . திருவாரூர் தேரை ஓட வைத்தால் மீண்டும் தமிழகத்தில் ஆன்மீக எழுச்சி ஏற்படும் . இதற்கு எல்லா தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கருத்துக் கூறி ஒருங்கிணைப்பு வேலைகள் துவங்கின.

வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் ஒவ்வொரு சமூகத் தலைவர்கள் , ஆன்மீகப் பெரியோர்களை நேரடியாக சந்தித்து எடுத்துக் கூறினார். ஆனால் , அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவர்களோ இந்த விஷயத்தை கையில் எடுக்கவே அஞ்சினர் . அவர்கள் கூறிய காரணம் , தேர் தயார் செய்யவே பல கோடி ரூபாய் செலவாகும் , தேர் இழுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வேண்டும் . அது மட்டுமல்ல , தேர் நிலைக்கு வர ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் . இது நடவாத காரியம் என்றனர் . இதைவிட பெரிய குண்டு ஒன்றைப் போட்டனர் , சிலரை ஏவிவிட்டு நாத்திகாவாதிகள் ஏதாவது செய்து கலவரத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்றனர் .

அவர்களிடம் கோபால்ஜி நிதி ஏற்பாட்டைப் பற்றி இப்போதைக்கு கவலைப்பட வேண்டாம் , இறைவன் எப்படியாவது வழிகாட்டுவான் எனக் கூறி நம்பிக்கைக் கொடுத்தார் .

திருவாரூர் தேர் குழு ஒன்றை அமைக்க பெரியவர்கள், முக்கியமானவர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர் . சிலர் , இதற்கான நிதி வெளிநாட்டிலிருந்து வரப்போகிறது , ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம் என நினைத்திருந்தனர் போலும் . கூட்டத்தில் தேரோட்டத்திற்கு என்ன என்ன தேவை என்ற பட்டியல் எடுக்கப்பட்டது . வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வேலைக்குப் பொறுப்பாக இருந்து கவனிப்பதாக உற்சாகமாக கூறினர் . ஆனால் , அந்த வேலைக்கு இவ்வளவு ரூபாய் தேவை , உடனே இவர்களைக் கொண்டு இந்த வேலை ஆரம்பித்துவிடலாம் என்று ஆலோசனை மிகப் பிரம்மாண்டமாக தயாரானது .

வேலைகளைப் பற்றிய பட்டியல் அதற்குத் தேவையான நிதி முதலானவற்றை பட்டியல் எடுத்தாயிற்று. அடுத்து நிதி ஆதாரத்திற்கு யாரைப் பார்க்கலாம் என்றவுடன் ஒவ்வொருவராக நழுவ ஆரம்பித்தனர் . ஆனாலும் இறைவன் அருளால் பல நல்லவர்கள் கிடைத்தனர். அவர்களுடன் சேர்ந்து பொறுப்பாளர்கள் முடிவு எடுத்து காரியத்தில் இறங்கினர் . இந்த காரியத்தில் முழுமனதுடன் வேலையில் ஈடுபட்டனர் .நாம் எப்படியும் தேரை ஓட வைத்துவிட வேண்டும் என்பது முடிவானது . நம்முடன் நெருக்கமாக இருந்தவர்கள் கோபால்ஜியிடம் அரசாங்கத்திடம் எதுவும் எதிர்பார்க்காமல் செய்திட இறைவன் அருள் புரிவான். ஆனாலும் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் அரசாங்கத்தால் செய்துவிட முடியும், அல்லது இடையூறு செய்ய முடியும் . இந்த நிகழ்ச்சி என்பது மாவட்ட நிகழ்ச்சி என்பதால் இதற்கு மாவட்ட கலெக்டரின் அனுமதியும் , ஆணையும் வேண்டும் . அரசாங்கத்தை எதிர்த்து கலெக்டர் இறங்க தயக்கம் காட்டுவார் எனவே நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்றனர்.

அப்போது நாத்திகம் பேசிப்பேசி ஊரைக்கெடுக்கும் திமுகவின் ஆட்சி , முதல்வர் கருணாநிதி அவர்கள் . என்ன செய்வது ?, முதல்வருக்கு நெருக்கமானவரைப் பிடித்து , இது கருணாநிதியின் சொந்த ஊர் , இந்த ஊரில் பல்லாண்டுகளாக தேர் ஓடாமல் இருப்பது அவருக்கு பெருமை தரும் விஷயம் இல்லை . ஆனால் தேர் இவரது ஆட்சி காலத்தில் ஓடினால் அதுவே அவருக்கு பெருமையான ஒன்று என்பதை புரியவையுங்கள் என பொறுப்பை அவரிடம் கொடுக்கப்பட்டது.

நாம் சொன்ன மாதிரியே முதல்வர் அனுமதி கொடுத்து கலெக்டரை ஒத்துழைக்கச் செய்தார் . அதனால் தான் இன்றும் திமுகவின் சாதனை பட்டியலில், அல்லது தம்பட்ட விஷயத்தில் திருவாரூர் தேரும் இடம் பெறுகிறது. தேரை நிலை நிறுத்த , திருப்ப முட்டுக்கட்டை என்பது பெரிய பெரிய சைஸில் வேண்டும் . அப்படி செய்பவர் நாகூரில் இருக்கிறார் என்றார்கள் . அதற்காக ஒரு சிலர் இறங்கினர் . தேர் பிடித்து இழுக்க பெரிய தாம்புகயிறு தேவை. அதுவும் பெரிய வடம் இது கேரளத்திலிருந்து RSS ஸ்வயம் சேவகர்கள் மூலம் செய்து கொண்டு வர ஏற்பாடானது . அடுத்து தேர் செப்பனிடும் வேலைகள் , தேர் அலங்காரங்கள் என ஒவ்வொன்றும் கவனம் கொடுக்கப்பட்டது .

தேர் இழுக்க வருபவர்களுக்கு உணர்ச்சி கொடுக்க தலையில் காவி துண்டு , இது கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் நெறிப்படுத்தவும் உதவும் என்பதால் அதற்கும் ஏற்பாடு நடந்தது. வெயில் நேரத்தில் தேர் இழுப்பவர்களுக்கு களைப்பு தீர நீர் மோர் , பானகம் , குடி நீர் என ஒவ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வளவு ஏற்பாடுகளுக்கு இடையில் தேர் இழுக்க மக்கள் பெரிய அளவில் கூடவில்லை என்றால்?? அது மட்டுமல்ல நாம் எடுத்திருப்பது இந்து ஒற்றுமை தேரோட்டம் என்பதை மனதில் கொண்டு கோபால்ஜி , மக்கனை வரவேற்க குழுக்கள் ஏற்பாடு செய்து , அவர்கள் கையில் விபூதி , குங்குமம் தனித்தனி கிண்ணத்தில் கொடுக்கப்பட்டது . எந்தெந்த குழு எந்தெந்த காலனிக்கு செல்ல வேண்டும் . போனவுடன் பெரியவர்கள் பாதங்களில் பணிந்து வணங்க வேண்டும் . தேர் இழுக்க குடும்பத்தோடு வாருங்கள் விபூதி , தாய்மார்களுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும் . வரும்போது தங்களுக்குத் தேவையான சாப்பாட்டை கட்டி எடுத்து வர வேண்டும் என்று சொல்லி அழைக்க வேண்டும். எந்த ஊர் , என்ன தேதியில் வரவேண்டும் என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டது . போன இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு .

உள்ளூர்காரர்கள் எச்சரித்தபடி திராவிடக் கட்சியினர் ஏர் ஓட்டும் உழவன் தவிக்கையிலேயே தேரோட்டம் உனக்கெதற்கடா தியாகேசா என்றும் பெரியார் பூமியில் பார்ப்பனர்களின் தேரோட்டமா ? போன்ற பலவிதமான விளம்பர தட்டிகள் வைத்திருந்தனர் . இத்தகை விளம்பரம் இந்துக்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது . பரபரப்பானது தேரோட்டம் நிகழ்ச்சி . மக்களிடம் உற்சாகம் கரைபுரண்டோடியது .

07.05.1989 அன்று கலெக்டர் தலைமையில் அரசு அதிகாரிகள் , காவல்துறை அதிகாரிகள் மக்கள் என்னதான் இழுத்தாலும் தேர் நிலைக்கு வர முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு மேலானத, எனவே , இதில் பிடிவாதம் பிடிக்காமல் புல்டோசர், ஏற்பாடு செய்து விடுகிறோம் என்று சொல்லி கட்டாயப்படுத்தினர் . கோபால்ஜி பிடிவாதமாக மக்களால் இழுக்கப்படுவதுதான் தேரோட்டம் , இறைவன் மனது வைப்பார் எல்லாம் நல்லபடியாக நடக்கும் உறுதியாக கூறினார் .

07.05.1989 அன்று தேரோட்டம் ஆரம்பிப்பதற்கு முன் நமக்கே கொஞ்சம் அச்சத்தை கொடுத்தார் தியாகேசர் . மக்கள் கூட்டம் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக குழுகுழுவாக இருந்தனர் . தேருக்கு சுவாமி வந்தவுடன் ஆவேசமாக ஆரூரா! தியாகேசா! என கோஷம் முழங்கிவுடன் எங்கிருந்துதான் வந்தது இந்த சிவ பூதகணங்கள் எனக் கேட்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதியது . இராம கோபாலன் முன்னின்று தேர் வடம் பிடித்து இழுக்க பல பிரமுகர்கள் வந்திருந்தனர் . பன ஓலை விசிறியால் வீச , ஆடி வரும் தேரின் அழகை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அத்தனை கஷ்டமும் கரைந்துபோனது .

ஓர் சாலை திருப்பத்தில் தேர் ஓட்டம் குறைய திடீரென்று அதிகாரிகள் கொண்டு வந்த புல்டோசரை வைத்து தள்ள முற்பட்டனர் . கோபால்ஜி சாலையின் குறுக்கே படுத்துவிட்டார் . புல்டோசர் வைத்துதான் தேரை இழுக்க வேண்டும் என்றால் என்மீது ஏற்றிவிட்டுச் செல்லுங்கள் எனக் கூற , மக்களிடையே ஆக்ரோஷம் பிறந்தது. நாங்க இழுக்கிறோம் , புல்டோசரை அகற்றுங்கள் என சப்தமிட்டனர் .

அதிலும் ஒருசோதனை வந்தது. நாம் காலனி , கிராம மக்களை பிரித்து தேதி கொடுத்து அழைத்திருந்தோம். ஆர்வம் மிகுதியால் கிட்டத்தட்ட எல்லோரும் முதல்நாளே வந்துவிட்டனர் . சிவ கணங்களாகி தேரை இழுத்த வேகத்தில் தேரோ ஒரே நாளில் 95 % யாத்திரை முடிந்துவிட்டது . உடனே அதிகாரிகள் ஓடோடி வந்தனர் , கோபால்ஜியிடம் இன்று இத்துடன் போதும் , பல ஊர்களில் இருந்து மக்கள் வர வேண்டியிருக்கிறது , தேர் இன்றே நிலைக்கு வந்து விட்டால் அவர்கள் எல்லோரும் ஏமாற்றமடைவார்கள் , எனக் கேட்டுக்கொண்டார் .

திருவாரூரில் ஒரு வழக்கம் உண்டு , தேர் நிலைக்கு வராமல் ஆண்கள் யாரும் வீட்டில் உறங்கமாட்டார்கள் . எனவே , எல்லோரும் வீட்டுத் திண்ணையில் படுத்தனர். அடுத்த நாள் தேரோட்டம் நிறைவு பெற்றது மட்டுமல்ல , இந்துக்களின் சக்தி , இறைவனின் அருள் ஒன்றுகூடினால் எல்லாம் கைகூடும் என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.

கோபால்ஜியிடம் வந்த காலனி மக்கள் குடும்பத்தோடு நெஞ்சம் நெகிழ , எங்களையும் மனிதர்களாக மதித்து எங்க தேரோட்டத்திற்கு மரியாதை அளித்து அழைத்தீர்களே ! எங்கள் செய்த பாக்கியம் ! நெஞ்சுருகி பேசினர். கோபால்ஜி , உங்கள் கரங்களில் சுவாமியே இறங்கி வந்து சக்தி கொடுத்துள்ளார் . இந்து முன்னணி இதனைத் தான் சமூகத்தில் சொல்ல விரும்புகிறது . இங்கு பக்தி மட்டுமல்ல , சக்தியும் இருக்கிறது . பக்தியின் மூலம் உயர்ந்தவன் , தாழ்ந்தவன் என்ற பேதமில்லை என்று நம்பிக்கை கொடுத்தார் . திருவாரூர் தேரோட்டமானது தமிழகம் முழுவதும் பெரிய எழுச்சியை இந்து சமுதாயத்தில் ஏற்படுத்தியது.

இந்து முன்னணி முன்னின்று நடத்திய சாதனையை ஊடகங்கள் , ஆன்றோர்கள் , பெரியோர்கள் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

மேலும் படிக்க