10,008 திருவிளக்கு பூஜை

10,008 திருவிளக்கு பூஜை

இந்துக்களிடையே விழிப்புணர்வு இல்லாத காலகட்டம் . நாத்திகம் ஓங்கி அடித்த போது அரசியல்வாதிகளும் , ஆன்மீகவாதிகளும் , கண்மூடி வாய்மூடி இருந்த சூழ்நிலையில் 1980 ஆம் ஆண்டு இந்து முன்னணி ஆரம்பித்து இந்துகளுக்காக போராடி வாதாடி பரிந்து பேசி இந்துக்களுக்கிடையே ஒற்றுமையையும் , விழிப்புணர்வையும் இந்து சமுதாயத்தை சூழ்ந்து நிற்கும் அபாயங்களைப் பற்றி சொல்லிச்சொல்லி இந்துக்களை வலுப்படுத்தி வந்தது .

பெண்களும் சமுதாயத்தில் தன்னம்பிக்கை யோடும் , ஒற்றுமையோடும் வலம் வர வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமப்பட்டு பூஜையின் மூலம் வெளிக்கொண்டு வந்தார்கள் . எளிமையான வழியில் பூஜை செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்கள் .

அப்படி இருந்தும் கிராமப்புற கோயில்களில் மாதம் ஒரு முறை 5 அல்லது 10 விளக்குகள் வைத்து பூஜை நடத்துவதே பெரிய காரியமாக இருந்தது . விடா முயற்சியால் இந்த பூஜை முறை கூட்டுப் பிரார்த்தனையாக மாறியது . செலவு அதிகம் இல்லாத இந்த பூஜையில் மக்கள் ஆர்வமானார்கள் .

அவர்களை ஒருங்கிணைத்து நகர்ப்புற கோயில்களில் 108 ,504,1008 விளக்கு பூஜைகளாக மாற்றி அமைத்தார்கள் . இந்துக்கள் நலனில் அக்கரையுள்ள ஆன்மீக சிந்தனையுள்ள பெரியவர்களின் கூட்டு முயற்சியால் திருப்பூரில் 10,008 திருவிளக்கு பூஜை முன்னணி இந்து அன்னையர் முன்னணியால் 1995 ஆம் ஆண்டு பவ வருடம் பங்குனி மாதம் 26 ந் தேதி நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு தாராபுரம் ரோடு புதூர் பிரிவு அருகில் பூஜை நடத்தும் இடத்திற்கு திருவிளக்கு நகர் என்று பெயர் வைத்து பிரம்மாண்டமான பூஜைக்கு வேலை செய்தார்கள் .

 

பூஜையின் ஆரம்ப கட்ட வேலைக்காக தாராபுரம் ரோட்டில் சுபலெட்சுமி திருமண மண்டபத்தை பிடித்து தினமும் 50 , 60 பேர்கள் அங்கேயே தங்கி இரவும் பகலும் பணி செய்தார்கள் அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியும் அங்கேயே நடந்தது .

இந்த விளக்கு பூஜையில் அனைத்து சகோதரர்களும் பொறுப்பெடுத்து பொருளுதவி , நிதியுதவி பூஜைப் பொருட்களை சேகரித்து பக்தர்களுக்கு கொடுப்பதற்காக இரவு பகல் பாராது பணியாற்றினர் .

இந்த பிரம்மாண்டமான பூஜைக்கு பேரூர் ஆதினம் தவத்திரு . சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமைப் பொறுப்பேற்றிருந்தார் . வெள்ளிமலையிலிருந்து தவத்திரு . சுவாமி சைதன்யானந்தா ஆசியுரை வழங்கினார். இந்து முன்னணியின் நிறுவன இராம கோபாலன் அவர்களும் மற்றும் இன்று மேகாலய ஆளுநராக இருப்பவரும் ஆர்.எஸ்.எஸ்.ன் மாநில அமைப்பாளராக இருந்த திரு.சண்முகநாதன் அவர்களும் , கோவை பாராளுமன்ற உறுப்பினர் திரு . சி.கே. குப்புசாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

இந்த 10,008 திருவிளக்கு பூஜையை அலங்கரிப்பதற்காக இந்து முன்னணியின் சிறப்பு மலர் ஒன்று ஏற்பாடு செய்து அனைவருக்கும் கொடுத்தார்கள் . இந்த பூஜையை சீர்குலைக்கும் விதத்தில் வெடிகுண்டு வைப்பதற்காக பயங்கரவாதிகள் இமாம் அலி, சுபேர் வந்தார்கள் . இந்து முன்னணியின் பாதுகாப்பு குழு அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் . போலீஸ் பங்கரவாதிகளை தப்பிக்க விட்டது .

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பெண்கள் சிறிதும் அச்சம் இன்றி நான்கு நாள் விழாவாக கொண்டாடினார்கள் .அதில் கணபதி யாகம் , அஸ்வமேத யாகம் , நவரத்தின யாகம் 10,008 திருவிளக்கு பூஜை என இருந்தது . திருப்பூரில் இந்து முன்னணியின் வளர்ச்சி அபார வேகத்தில் இருந்தது . இந்து அன்னையர் முன்னணியின் வளர்ச்சி படிப்படியாக முன்னேறியது . டிசம்பர் 25 என்றால் திருப்பூரில் 2007 பெண்கள் கலந்து கொள்ளும் சுமங்கலி பூஜை , விநாயகர் சதுர்த்தியின் அடுத்த நாள் இந்து அன்னையர் முன்னணி ஊர்வலம் . ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை பெண்கள் சிவராத்திரி கொண்டாட்டம் , பெண்களுக்கான பண்புப் பயிற்சி முகாம் , சிறுமியருக்கான பண்பாட்டு வகுப்பு , கூட்டு வழிபாடு தொடர்ந்து நடைபெறுகின்றன .

மேலும் படிக்க