கோடி ராம நாம
ஜெப வேள்வி -
தனுஷ்கோடி

கோடி ராம நாம ஜெப வேள்வி – தனுஷ்கோடி

1992 பிப்ரவரி- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் மறக்க முடியாத மிகப்பெரிய சாதனையாக ஒரு கோடி ஸ்ரீ இராமநாம ஜெப வேள்வி நடைபெற்றது . 1965 புயலுக்கு பின் இராமேஸ்வரம் அதன் முக்கிய பகுதியான முக்கடலும் சந்திக்கும் தனுஷ்கோடியானது கடலில் மூழ்கி அழிந்து போனது . போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விட்டது

இந்த சூழ்நிலையில் அந்த இடமானது முஸ்லீம்களால் மிகபெரிய போதைபொருள் கடத்தல், கள்ளக்கடத்தல் நடக்கும் கேந்திரமாக மாறிப்போனது. இதைப்பற்றி இந்து முன்னணி கவலை கொண்டது. தனுஷ்கோடியில் ஸ்ரீ இராமபிரான் தனுசை ஊன்றிய இடம் இந்துக்களுக்கு மிக முக்கிய தீர்த்த ஸ்தலம். அதன் புனிதத்தை மீட்க வேண்டும். பழையபடி மக்கள் சகஜமாக சென்று வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என தீர்மானித்தது .

இதன் அடிப்படையில் ஸ்ரீகோபால்ஜி பல பெரியவர்களிடம் விவாதித்தார் . ஸ்ரீ அனுமனை முன்னிறுத்தி மிகப்பெரிய அளவில் 1 கோடி ஸ்ரீ இராமநாம வேள்வி நடத்தவேண்டும் என்று திட்டத்தை இந்து முன்னணி துவங்கியது.

அனுமனை வேண்டி துவங்கிய இந்த இராம கார்யம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. போக்குவரத்து வசதியில்லாத தனுஷ்கோடியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினார்கள். பல கோடி இராம நாமஜெபம் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை மக்கள் அலை அலையாய் வந்த வண்ணம் இருந்தனர். மாலையில் மிக பெரிய மாநாடு நடைபெற்றது .

மாநாட்டில் ஐயப்ப குருசாமியும் நடிகருமான மறைந்த திரு . எம் . என் . நம்பியார் பங்குபெற்றார்.

 

துவக்கத்தில் தன்கைபட 108 இராமநாமம் எழுதி அனுப்புவர்களுக்கு யாகத்தில் பூஜிக்கப்பட்ட அனுமன் , டாலர் அனுப்பப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது . 108 இராம நாமத்துடன் ஒரு ரூபாய் காணிக்கை அனுப்ப வேண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பல்லாயிரக் கணக்கான இராம நாம புத்தகங்கள் . மலைபோல் குவிந்தது . அனுப்பியவர்களுக்கு டாலர் அனுப்புவதே மிகப்பெரிய வேலையாக பல ஆயிரக்கணக்கானவர் இந்த பணியில் பலநாட்கள் ஈடுபட்டனர் .

அப்போது இராமேஸ்வரத்தில் இருந்து முகுந்தராய சத்திரம் வரை மட்டுமே பஸ் போக்குவரத்து இருந்தது. அங்கிருந்து 10 கி.மீ. தூரத்திற்கு தனுஷ் கோடி வரை எந்தவித போக்கு வரத்து பாதையில்லை . இந்த சூழ் நிலையில் அரசாங்கத்திடம் தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோரிக்கை வைத்தோம் . நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தூரம் வரையில் கடற்கரை ஓரமாக தற்காலிக ரோடு அமைத்து கொடுத்தது .

ஒரு லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்த்து ராமேஸ்வரம் வரக்கூடியவர்களுக்கு தங்கும் இடம் உணவு , குடிதண்ணீர் , இதற்கான ஏற்பாடு மிகச் சிறப்பாக செய்யப்பட்டது .

குறிப்பாக கோவையைச் சேர்ந்த சி.ஆர்.பாஸ்கர் அவர்கள் ஒரு லட்சம் பேருக்கு தேவையான உணவை மிகப்பெரிய சமையல் குழுவினருடன் வந்திருந்து தயார் செய்து கொடுத்தார் . அசுரத்தனமான ஏற்பாடு என்றே சொல்லலாம் .

வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு குடிநீர் பாட்டில் என ஒருலட்சம் குடிநீர் பாட்டில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை உரிமையாளர் ராமசாமி உடையார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு ஏற்பாடு செய்து தந்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் முழு நேரமாக நூற்றுக் கணக்கானவர்கள் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்து இந்த வேள்வியை வெற்றியடைய அரும்பணி செய்தார்கள் . அதுமட்டுமல்லாமல் வந்திருந்த ஒருலட்சம் பேர்கள் தனது சொந்த செலவில் வாகன ஏற்பாடு செய்து கொண்டு மிக ஆர்வத்துடன் குடும்பம் குடும்பமாக பங்கேற்றார்கள்.

வேள்வியின் போது வழிபாட்டில் வைக்கப்படும் ஸ்ரீ அனுமனின் திருவுருவம் அத்திமரத்தில் செய்யவேண்டும் என அதற்கான முயற்சி நடந்தபோது மிக வைஷ்ணவ மடத்தில் இருந்து அத்திமரத்தால் ஆன ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவுருவம் கிடைத்தது.

ஒருகோடி இராமநாமத்தை எப்படி பெறுவது என யோசித்தபோது பல கோடி ராமநாமம் சுலபமாக வந்தது . ராமபிரானின் அருளால் இந்த வேள்விக்கு பின் இதே ஸ்ரீ அனுமனின் அத்திமர திருவுருவம் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ரதத்தில் தமிழகம் முழுவதும் 48 நாட்கள் வலம் வந்தது . மரியாதைக்குரிய ஸ்ரீ ராமகோபாலன் அவர்கள் தமிழகமெங்கும் மிக அற்புதமாக பிரச்சார யாத்திரையை நடத்தினார் .

இந்த அனுமார் சிலையானது அக்னி தீர்த்தத்தில் வாலருந்த அனுமன் ஆலயத்தில் கோடி இராமநாம மந்திரத்துடன் அனுமன் சிலைக்கு கீழே வைத்து வைத்து பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது . இந்து முன்னணி வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வேள்வி இது .

தனுஷ்கோடி மீண்டும் யாத்திரிகர்கள் சகஜமாக வந்துபோகும் தீர்த்த தலமாக மாற வேண்டும் என்ற நமது எண்ணம் இதன் நிறைவேறியது . மூலம் இந்த யாகத்தின்மூலம் சட்ட விரோத செயல் பாட்டாளர்களின் கூடாரம் கலைந்தது . தற்போது தனுஷ்கோடிக்கு மத்திய அரசால் புதிய சாலை அமைக்கப்பட்டு பக்தர்கள் பாரதத்தின் கடைக் கோடியான தனுஷ்கோடியை சுலபமாக சென்று , தரிசிக்கவும் பிரார்த்தனையை நிறைவேற்றவும் வழிவகை செய்துள்ளது .

மேலும் படிக்க