கோவில் நிலங்களை
மீட்கும் இமாலயப் பணி

கோவில் நிலங்களை மீட்கும் இமாலயப் பணி

யாராவது ஒருவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வார்கள் . ஆனால் நீதிமன்றத்தாலேயே பிரச்சனை என்றால் என்ன செய்வது ? அதற்கும் தீர்வு கண்டு வெற்றி பெற்றது இந்து முன்னணி .

1. திருநெல்வேலி மாவட்டம் , அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நகரின் பிரதான சாலையில் அமைந்துள்ள 94 சென்ட் நிலத்தை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நீதிமன்ற கட்டிடம் கட்ட வெறும் ரூ .2,10,735 / -க்கு இந்து சமய அறநிலையத்துறை , நீதித்துறைக்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட்டது . அதன் அருகிலிருந்த CSI கிறிஸ்தவ டயோசீசனுக்கு சொந்தமான 46 சென்ட் இடத்தில் அதே நீதிமன்ற கட்டிட பணிகளுக்காக சென்ட் ஒன்றுக்கு ரூ .65,380 / - வீதம் 30 லட்சத்து 7 ஆயிரத்து 480 - க்கு கிரையம் பெற நீதித்துறையால் நிர்ணயம் செய்யப்பட்டது. பாரபட்சமாக கோவில் இடம் மட்டும் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதை கண்டித்து இந்து வழக்கறிஞர் முன்னணி அம்பாசமுத்திரம் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் 0.S. 322/10 என்ற வழக்கு தொடர்ந்து அது தள்ளுபடி செய்யப்பட்டு மேல்முறையீடு செய்து தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பல தகவல்கள் பெறப்பட்டு நீதித்துறைக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி தொடர் சட்ட போராட்டத்தின் காரணமாக அத்திட்டம் தடுக்கப்பட்டது . கைவிடப்பட்டது .

2. திருநெல்வேலி மாவட்டம் , அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான வடக்குபுத்தூர் கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மனோ கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட இந்து சமய அற நிலையத்துறை ரூ .3,21,865 / -க்கு பல்கலைக்கழகத்திற்கு விற்பனை செய்ய 08.02.2012 ல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டார் அது குறித்த ஆட்சேபணை 12.03.12 க்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப் பட்டிருந்தது . இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில செயலாளர் பலகோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் இடம் ரூ .3.21,865 / -க்கு விற்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து சார்பதிவாளர் அலுவலகம் , திருக்கோவில் நிர்வாகம் , பல்கலைக்கழக நிர்வாகத்திடம் 11தகவலறியும் சட்டம் மூலம் பல தகவல்களை பெற்று விற்பனை அறிவிப்பை ரத்து செய்து புதிய விலை நிர்ணயம் செய்ய கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆனையர் அவர்களிடம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் . இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 12.03.2012 மற்றும் 27.03.2012 நடந்த விசாரணையில் இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் தனது ஆட்சேபனைகளை பதிவு செய்தார் . இறுதியில் 05.05.2012 ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. சந்திர குமார் அவர்கள் ரூ .3.21,865 / - ஆக நிர்ணயம் செய்யப்பட்ட உத்திரவை ரத்து செய்து ரூ .94,01,000 (ரூபாய் தொன்னூற்று நான்கு லட்சத்து ஓராயிரம் ) என நிர்ணயம் செய்து புதிய உத்திரவு பிறப்பித்தனர். இதனால் திருக்கோயிலுக்கு சுமார் கோடியே 91 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் . இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

3. சிவன் சொத்து குலநாசம் என்பது பழமொழி , ஆண்டவனின் சொத்துக்களை கபளீகரம் செய்யும் சக்திகளிடம் இருந்து கோவில் நிலங்களை பாதுகாக்க இந்து முன்னணி போராடி மீட்ட சரித்திரம் பல . குறிப்பாகச்சொல்ல வேண்டுமானால் காஞ்சி மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் ஆலயம் மிகப்பெரிய கோடிக்கணக்கான சொத்துக்களை உடையது . இத்திருக்கோவிலின் சொத்துக்களை அரசு பஸ்நிலையம் அமைக்கின்றோம் என்ற பெயரில் கையகப்படுத்தியது . களத்தில் இறங்கிய இந்து முன்னணி பொது மக்களை திரட்டியது . மக்களிடம் நந்தீஸ்வரர் ஆலய சொத்துக்களை திரும்ப ஒப்படைக்கக்கோரி கையெழுத்து இயக்கம் முதலில் நடைபெற்றது . ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அடுத்த கட்டமாக கலெக்டர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் முடிவானது இந்துக்களின் கடும் எதிர்ப்பைக்கண்டு தமிழக அரசு நந்தீஸ்வரர் ஆலய சொத்தை கோவிலுக்கே திரும்ப ஒப்படைத்தது .

4. திருப்பூரில் இயக்கத்துக்கு மிகப்பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது , திருப்பூர் காட்டுவலவு விநாயகர் கோவில் இடம் மீட்கப்பட்ட போராட்டமே என்ற கூறலாம் . அன்றைய சூழ்நிலையில் திருப்பூரில் இந்து முன்னணி வளர்ந்து வரும் இயக்கம் . விநாயகர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து அன்றைய மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் அலுவலகம் அமைக்க முயற்சித்தனர் . தகவலறிந்த இந்து முன்னணியினர் இந்த இடத்தை முற்றுகையிடச் சென்றனர் . நாமோ பத்திலிருந்து 20 பேர் மாத்திரமே . எதிர் தரப்பில்அன்றைய திருப்பூர் எம்.எல்.ஏ மா.கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் . நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட்கள். துணிச்சலுடன் இந்துமுன்னணி .களத்தில் இறங்கியது . நமது தர்மப் போராட்டத்திற்கு அப்பகுதி இந்துக்கள் ஒத்துழைப்பு, தொடர் போராட்டம் காரணமாக இந்த இடங்கள் அனைத்தும் மீட்கப்பட்டன .

இந்து முன்னணி தமிழகம் முழுக்க சிறியதும் பெரியதுமாக பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான கோவில் இடங்களை மீட்டு தர்மம் காக்கும் பணியை செவ்வனே செய்துள்ளது என்றால் அது மிகையாது .

மேலும் படிக்க