சமுதாய நல்லிணக்க பணியில் முத்திரை
உலகத்தில் பல நாடுகள் உள்ளன. அதில் அனைத்திலும் தீண்டாமை உள்ளது .
இந்த தீண்டாமையை போக்குவதற்காக, வேரோடு அகற்றுவதற்காக நமது பாரத தேசத்தில் ஆழ்வார்களும் , நாயன்மார்களும் பல்வேறு முயற்சி எடுத்து உள்ளனர். அந்தத் திருப்பணியை இந்துமுன்னணி சிரமேற்கொண்டு செய்கிறது.
தமிழகத்தில் பெரிய குளம் , தேவதானப்பட்டி, கண்டனூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திட்டகுடி , கடலூர் மாவட்டங்களில் உள்ள காட்டு மன்னார் கோயில், மதுரை அருகில் உள்ள எரம்பட்டி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட சாதி மோதல்களில் இந்து முன்னணி மூலமாக சமுதாய தலைவர்களை அழைத்து நல்ல தீர்வு கண்டது .
997-1998 தென் மாவட்டங்களில் வீரன் சுந்தரலிங்கனார் பெயரை பெயரை அரசு போக்குவரத்து கழகத்தில் வைக்கப்பட்டதால் அது இரு சமுதாயத்திற்கும் மோதல் ஏற்பட்ட காரணத்தால் தென் தமிழகம் முழுவதும் 15 நாட்கள் போக்குவரத்துகள் இயங்காமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டது . இந்த சூழ்நிலையில் இந்து முன்னணி சார்பாக சமுதாயத் தலைவர்களையும் , ஆன்மீகத் தலைவர் களையும் அழைத்து 15 நாட்களாக கிராமம் , கிராமமாகச் சென்று சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்தி உள்ளது .
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டதேவி தேர் ஓட்ட விழாவில் ஏற்பட்ட சாதி மோதலால் அங்கே தேரோட்டம் நிறுத்தப்பட்டது . இந்த சூழ்நிலையில் இந்து முன்னணி சார்பாக சமுதாயத் தலைவர் களையும் ஆன்மீகத் தலைவர் களையும் அழைத்து சுமூகத் தீர்வு கண்டதால் தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
1981 - ல் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்திற்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் இந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை முஸ்லிம்களாக மாற்ற பெரும் சதித் திட்டம் தீட்டப்பட்டது .
மீனாட்சிபுரம் என்ற ஊரை ரகமத் நகர் என்று மாற்றவும் சதி திட்டம் தீட்டப்பட்டது . இதை இந்து முன்னணி சார்பாக சமுதாயத் தலைவர் களையும் , ஆன்மீகத் தலைவர்களையும் அழைத்து ரகமத் நகரை மீண்டும் மீனாட்சிபுரமாக மாற்றினார்கள் . அங்கு மத நல்லிணக்கம் ஏற்பட்டது .
ராமநாதபுரம் மாவட்டம் அருகில் உள்ள கூரியூர் என்ற பகுதியில் இந்து தேவேந்திர குல சமுதாயத்தைச் சார்ந்த ஒரு இலட்சம் பேரை முஸ்லீம் மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடந்தது. இந்த சூழ்நிலையில் இந்து முன்னணி சார்பில் சமுதாயத் தலைவர்களையும் , ஆன்மீகத் தலைவர்களையும் அழைத்து கிராமங்களில் பல பகுதிகளில் சுற்றுப்பிராயணம் செய்து அந்த மத மாற்றம் தடுக்கப்பட்டது .
பாரத தேசத்தில் பல்வேறு மொழிகள், பல்வேறு சாதிகள், பழக்க வழக்கங்கள், பல கலாச்சாரங்கள் உள்ளன . இதில் குறிப்பாக இந்து தலித் சமுதாயத்தில் உள்ளவர்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள் , பொருளாதார ரீதியாகவும் கல்வியிலும் பின் தங்கி உள்ள இவர்கள் முன்னேற்றம் அடைவதற்காக அரசு சலுகைகள் வழங்கி உள்ளது . மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள் இந்து தலித்துகளுக்கு வழங்கும் சலுகைகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என நயவஞ்சக போராடி வருகிறார்கள்.
இந்து முன்னணி பல ஆண்டுகளாக இந்து அரிஜன சமுதாயத்திற்கு வழங்கப்படும் சலுகைகளை மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு வழங்கக்கூடாது என போராடி வருகிறது .
தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி பகுதியில் டாக்டர் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டது . அந்த சமயத்தில் சாதிகவைரம் ஏற்பட்டு இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள் . இந்த சூழ்நிலையில் இந்து முன்னணி சமுதாயத் தலைவர்களையும் ஆனமீகத் தலைவர்களையும் அழைத்து ஒரு வாரகாலம் பாத யாத்திரையாக சென்று அனைத்து வீடுகளிலும் விளக்கு ஏற்றி அமைதி நிலையை ஏற்படுத்தியது .
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 1900 ல் அறிவிக்கப்பட்ட போது பாப்பாபட்டி , கீரிப்பட்டி, கச்சநந்தல் ஆகிய கிராமங்கள் அனைத்தும் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அந்த பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் போனது. அந்த சமயத்தில் இந்து முன்னணி சார்பாக சமுதாயத் தலைவர்களையும் , ஆன்மீகத் தலைவர்களையும் அழைத்து பேசி அந்த பகுதியில் மீண்டும் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
தமிழகத்தில் உள்ள சில ஆலயங்களில் குறிப்பிட்ட சில ஆலயங்களில் ஒரு சில சமுதாயத்தினர் வழிபட மறுக்கப்படுகிறது . இந்த சூழ்நிலையில் சிவகங்கை மாவட்டம் , கண்டதேவி கோயில் தேரோட்ட விழாவில் ஏற்பட்ட சாதி மோதலால் அங்கே தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்து முன்னணி சார்பாக சமுதாயத் தலைவர்களாயும் , ஆன்மீகத் தலைவர்களையும் அழைத்துப் பேசி சமூகத்தில் இணக்கம் கண்ட பின் அந்த கண்ட தேவி கோயில் தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாயட்டம் , பழனி அருகில் பாப பாலசமுத்திரம் பகுதியல் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பாத்தியப்பட்ட காளிகோயில் வழியாக மூஸ்லிம்கள் இறந்தவர்உடல்களை எடுத்துச் சென்று கோயிலின் இறை வழிபாட்டை கெடுத்து கலவரத்தை உண்தாக்கினர் .
இந்த சமயத்தில் இந்து முன்னணி தலையிட்டு அந்த காளிதேவி கோயிலுக்காக போராடி அந்த கோயிலை மீட்டுக் கொடுத்தனர்.