செங்கோட்டையல்ல
காவிக்கோட்டை
- திருப்பூர்

செங்கோட்டையல்ல காவிக்கோட்டை - திருப்பூர்

திருப்பூர் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும் . 25 ஆண்டுகளுக்கு முன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளின் தொழிற்சங்கங்களும் பலம் பெற்றிருந்தன. ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இவர்களை மீறி யாரும் தொழிற்சாலை நடத்த முடியாது . எந்த தொழிலாளர்களும் வேலைக்கும் செல்ல முடியாது என்ற நிலை இருந்தது.

இந்து முன்னணி சார்பில் கூட்டங்கள் நடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல . கையில் ராக்கி கயிறு கட்டிக்கொண்டு போனால் கூட கம்யூனிஸ்டு கட்சிகளை சார்ந்தவர்கள் பார்த்துவிடுவார்களோ! என அஞ்ச வேண்டிய நிலைமை இருந்தது .

இந்து முன்னணியில் இணைந்து பணியாற்றுபவர்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் ரவுடியிசம் செய்து தொடர்ந்து மிரட்டியும் , தாக்கியும் வந்தனர்.

1984 ல் டைமண்ட் தியேட்டர் அருகில் இந்து முன்னணி சார்பில் முதலாவது பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது . இதை பொருத்துக்கொள்ள முடியாத கம்யூனிஸ்ட் கட்சியினர் , பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது மீறி நடத்தினால் பொதுக் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

அனால் அத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாத அன்றைய இந்துமுன்னணி வீரத் துறவி இராம. கோபாலன் அவர்கள் வழிகாட்டுதலில் தக்க முன்னேற்பாடுகளுடன் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

 

கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்புகளை மீறி வெற்றிகரமாக முதல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது .

திருப்பூரின் ஒவ்வொரு தெருவிலும் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் . போனஸ் பேரணி என்றால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை திரட்டி மிக பிரம்மாண்டமான பேரணி நடத்தி அனைவரையும் மிரளச் செய்வார்கள்.

அரசியல் ரீதியாகவும் , மிகப் பெரிய ஓட்டு வங்கியை திருப்பூரில் வைத்திருந்தனர் . MLA,. MP என பல்வேறு பதவிகளை கம்யூனிஸ்டுகள் வகித்தன. இந்த நிலையில் முள்ளை முள்ளால் எடுத்து இந்து முன்னணி படிப்படியான வளர்ச்சி அடைந்தது. சித்தாந்த ரீதியிலானபதிலடியும் ,கம்யூனிஸ்டுகளின் தேச துரோகங்களை பிரச்சாரம் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றும் இந்து முன்னணி மெல்ல மெல்ல திருப்பூரில் வளரத் துவங்கியது .

அவர்கள் பொதுக்கூட்டம் போடும் அதே இடத்தில் ஒரு வாரத்திற்குள் இந்து முன்னணி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்படும். இவர்களது இந்து விரோத நடவடிக்கைகள் குறித்தும், இவர்களது சுய நலத்தால் ஏராளமான பஞ்சாலைகள் திருப்பூரில் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்தது குறித்தும் ஆதாரப்பூர்வமாக பேசப்பட்டது . இது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது இதன் காரணமாக ஏராளமான இளைஞர்கள் இந்து முன்னணியை நோக்கி படையெடுக்க தொடங்கினர் . பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட் தொண்டர்களும் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் சிலரும் இந்து முன்னணியில் இணைந்தனர் .

மேலும் படிக்க