திருவண்ணாமலை
அன்னதானம்

திருவண்ணாமலை அன்னதானம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழாவானது பரணி தீபம் அதிகாலை கோவிலில் ஏற்றப்பட்டு மாலை மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்தத் திருவிழாவைக் காண வரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் 2005 முதல் மூன்று நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கி வருகிறது.

தீபத்திற்கு இரண்டு நாள் முன்னதாக தொடங்கும் அன்னதானம் தீபம் முடிந்து மறுநாள் மதியம் வரையிலும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த அன்னதானத்தில் விடியற்காலை நான்கு மணிக்கு சுக்கு காப்பி, காலை 8 மணிக்கு சிற்றுண்டி, பின்பு 11 மணிக்கு தேநீர், மதிய உணவு, மாலை 3 மணிக்கு டீ, இரவு 11 மணி வரையிலும் உணவு தொடர்ந்து நிற்காமல் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு வருடமாக அடி அண்ணாமலை பகுதியிலும் நமது இந்து முன்னணியின் தொடர் 3 நாள் அன்னதானம் ஆனது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று நாட்களும் சேர்த்து ஏறக்குறைய ஒரு லட்சம் பேராவது ஹிந்து முன்னணியின் அன்னதான சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.