தொலைக்காட்சி-
இந்து விரோத போக்குக்கு
தக்க பதிலடி

தொலைக்காட்சி- இந்து விரோத போக்குக்கு தக்க பதிலடி

விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்கிற நிகழ்ச்சியில் இந்து சன்னியாசிகளை கேவலப்படுத்தும் நோக்கில் கார்ப்பரேட் சுவாமிகள் என்கிற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டதை அறிந்து நாம் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்தோம் .ஆனால் நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் தொடர்ந்து கொண்டு இருந்தது . நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனி இது யாரையும் புண்படுவதற்கான நிகழ்ச்சி அல்ல என்று கூறினார் . நாம் இதை அனுமதிக்க முடியாது என கடுமையாக எதிர்த்தோம்.

அது மட்டுமில்லாமல் விஜய் டி.வி. முன்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது . பிறகு நிர்வாகம் பணிந்தது . நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மாட்டோம் என வருத்தம் தெரிவித்தது.

ZEE டி.வி. யில் லக்கா கிக்கா என்கிற தொடர் நிகழ்ச்சி ஒளி பரப்பப்பட்டு வந்தது . இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் நடிகை ரோஜா. இதில் சந்நியாசி வேடமணிந்த ஆண் ஒருவர் பெண்களுடன் குத்து நடனம் ஆடுவதாக நிகழ்ச்சி அமைந்து இருந்தது . இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தினர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள். டிவி நிர்வாகத்திற்க்கு நிகழ்ச்சி பற்றிய நமது கண்டனத்தையும் தெரிவித்தோம்.

ஆனால் நிகழ்ச்சி படப்பிடிப்பு முடிந்து அது ஒளிபரப்பு செய்வதற்காக பிலிபைன்ஸ் அனுப்பப்பட்டு விட்டது என்று நிர்வாகம் கூறியது . இரண்டு நாள் நிகழ்ச்சி மட்டும் அனுமதியுங்கள் பிறகு அந்தக் காட்சிகள் இல்லாமல் ஒளிபரப்புகிறோம் என்று சொன்னது நிர்வாகம் .

ஒரே ஒரு நிமிடம் கூட அனுமதிக்க முடியாது என்று சொல்லி தி.நகரில் உள்ள டிவி அலுவலகம் 2012 ஆகஸ்ட் 30 அன்று முற்றுகை இடப்பட்டது. பிறகு நிர்வாகம் பணிந்து ஒளிபரப்பை தரப்பில் நிறுத்தியது .

 

ZEE டிவி தான் அதிகமான ஆலய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது என்று அதன் நிர்வாகி கூறினார் . அதற்கு நம் சென்னை மாநகர பொறுப்பாளர் “சார் நல்லது ஆனால் இலையை போட்டு அதில் அறுசுவை உணவு பரிமாறி விட்டு இலையின் மூலையில் சிறிது மலத்தை வைத்தால் எப்படி இருக்கும் . அது போல தான் உங்கள் செய்கையும்”” என்று கூறினார் . அவர்களும் தவறை உணர்ந்தனர் . இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எங்கள் டி.வி. யில் வராது என்ற உத்தரவாதத்தையும் அளித்தனர் .

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்கு தேவையா ? என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . அது மார்ச் 8 , 2015 ம் தேதி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு தொடர் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது .

தொலைபேசி வாயிலாகவும் நேரில் கடிதம் மூலமாகவும் நம் எதிர்ப்பைப் பதிவு செய்தோம். ஆனால் நிர்வாகம் எந்த பதிலையும் கூறவில்லை. ஆகவே மார்ச் 8 அன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் முற்றுகை ஆர்பாட்டம் நடத்துவது முடிவு செய்து புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் பின்புறம் ஒன்று கூடினோம்.

அப்போது அந்த தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் கூடியிருந்த எங்களை படம் பிடித்தார் . நாம் படம் பிடிக்கக்கூடாது என்று நம்முடைய எதிர்ப்பைக் கூறியும் கேளாமல் தொடர்ந்து படம் பிடித்துக் கொண்டு இருந்தார். இதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் கேமரா கீழே விழுந்தது . காவல் துறை வந்து நிர்வாகத்திடம் பேசியதில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்போவது இல்லை நிர்வாகம் அறிவித்தது .

தொலைக்காட்சி கேமரா மேன் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறை இந்துமுன்னணியை சார்ந்த பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பு தடுக்கப்பட்டதில் நமக்கு வெற்றியே .

பிறகு பொய்ப்புகார் கொடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி டி.வி.யை புறக்கணிப்பு என்கிற நிலைப்பாடு எடுக்கப்பட்டதின் வாயிலாக நிர்வாகம் பணிந்து வீரத்துறவி இராம.கோபாலனிடம் வருத்தம் தெரிவித்து வழக்கை வாபஸ் பெற்றது .

மேலும் படிக்க